வைரம் திருடிய சிறுமியைக் காக்க ஒன்று கூடும் பெண்கள் படை - ஹார்லி குயின் பேர்ட்ஸ் ஆப் பிரே - மார்கட் ராபி
ஹார்லி குயின்
– பேர்ட்ஸ் ஆப் பிரே
தயாரிப்பு
– நடிப்பு – மார்கட் ராபி
தமிழ் டப்
– ரசிகர்களின் டப்பிங்
இன்று குறிப்பிட்ட
காமிக்ஸ் பாத்திரம் ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அதில் நடித்து புகழும் கிடைத்தால்,
பிறகு அந்த நடிகர் தானே தயாரிப்பாளராக அதே பாத்திரத்தை மேம்படுத்தி நடிக்கத் தொடங்கிவிடுகிறார்.
இதுதான் இப்போதைய ஆங்கிலப் படங்களின் டிரெண்ட். மார்வெல்லில் ரியான் ரெனால்ட்ஸ் அப்படித்தான்
நடித்து வருகிறார். ஹார்லி குயின் படத்தில் மார்கட் ராபி தானே தயாரித்து கதாநாயகியாக
இந்த படத்தில் நடித்துள்ளார்.
கதையில் பெரிய
திருப்பம் என்று ஏதும் கிடையாது.
படத்தில்
ஹார்லியை முட்டாள் கோமாளியான ஜோக்கர், தன் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான். இதனால்
மனமுடைந்து போன ஹார்ட்லி, டாக் என்பவரின் வீட்டில் அமைதியாக மறைந்து வாழ்கிறாள். மேலும்
ஜோக்கரின் மீதுள்ள காதலை மறக்க முடியாமல் தவிக்கிறாள். அதேசமயம், பார், பப் என சென்று
அங்கிருப்பவர்களை எப்போதும் போல வம்புக்கு இழுக்கிறாள். இப்படியிருக்கும் வாழ்வில்தான் சிறு திருட்டுகளை செய்யும் சிறுமி
ஒருத்தி வருகிறாள். இவள் எதேச்சையாக பிக்பாக்கெட் அடிக்கும்போது மாஃபியா டான் ஒருவனான
ரோனியின் அடியாளிடமிருந்து வைரம் ஒன்றை திருடிவிடுகிறாள். அதை வாயில் போட்டு விழுங்கிவிடுகிறாள்.
இவளை கொண்டு வந்து ஒப்படைக்கவேண்டுமேன மாஃபியா தலைவன் ரோனி ஹார்லியை கட்டிவைத்து மிரட்டுகிறான்.
சரி என ஒப்புக்கொள்பவள், சிறுமியை காவல் நிலையத்தில் அதிரடி தாக்குதல் நடத்தி அவளை
கூட்டி வருகிறாள். ஆனால் அவர் தங்கியிருந்த கட்டிட ஓனர் டாக், காசுக்கு ஹார்லியின்
இடத்தை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்க, மனிதர்களின் மீது மீண்டும் நம்பிக்கை போகிறது
ஹார்லி குயினுக்கு… எனவே, அவள் மாஃபியா தலைவன் ரோனியிடம் பேசி, சிறுமியை கொண்டு வந்து
ஒப்படைப்பதாக சொல்லுகிறாள். அதேநேரம், சிறுமியைக் காப்பாற்ற ரோனியின் கார் டிரைவராக
உள்ள கிளப் பாடகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முயல்கிறார்கள். ரோனியிடம் உள்ள அடியாளை
கொல்ல குறுக்கு வில் வேட்டைக்காரி ஒருத்தி முயல்கிறாள். அவளது கதையையும படத்தில் சொல்லுகிறார்கள்.
இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா?
அடுத்தடுத்த
பாகங்களுக்குத்தான்.
ஹார்லியைப்
பொறுத்தவரை ஜோக்கரை மறக்க அங்குள்ள வேதியியல் ஆலை ஒன்றை லாரி வைத்து இடித்து தன் காதல்
தோல்வியை உலகறியச் செய்கிறாள். ஹார்லி குயினைப் பொறுத்தவரை இடது, வலது என எந்த கொள்கையுமில்லை.
என்ன தோன்றுகிறதோ அதை செய்யவேண்டும். அவ்வளவுதான். யாராவது எதிர்த்தால், அடித்து உதைத்து
போட்டுவிட்டு அவள் போக்கில் போய்விடுவாள். கொல்ல வேண்டும் பழிவாங்க வேண்டும் என மிகவும்
யோசிப்பவள் எல்லாம் கிடையாது. ஒரண்டு இழுப்பவர்களை, லொள்ளு பேசுபவர்களை பேஸ்பால் மட்டை,
அல்லது சுத்தியலால் அடித்து பிளப்பதுதான் ஹார்லியின் பதில்.
உயரதிகாரிகளால்
அவமானப்படுத்தப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர், குறுக்குவில் வேட்டைக்காரி, கிளப் பாடகி
ஆகியோருக்கு எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என சில விதிகள் உண்டு. அனைத்திலும் இஷ்டம்
போல சுற்றும் விதிகளே இல்லாத ஹார்லி குயின்
இதைப்பற்றியெல்லாம் எந்த கவலையும் படுவதில்லை. படத்தின் இறுதிக் காட்சியும் அப்படித்தான்.
கோமாளித்தனமான
ஹார்லி குயின் பாத்திரம், தெறிக்கும் ரத்தம், கெட்டவார்த்தைகள், குரூரம் என படம் வேறு ரகம். அடுத்தடுத்த பாகங்களில் சார்லீஸ் ஏஞ்சல்ஸ் போல படம் மாறாமல் இருந்தால் சரிதான்.
தமிழ் டப்பிங்கை
ரசிகர்களே செய்திருக்கிறார்கள். இதனால் டப்பிங்கை கவனிப்பதை படத்தைப் பார்ப்பதே நல்லது.
ஆங்கில சப் டைட்டிலை பதற்றத்துடன் வேகமாக அப்படியே தமிழில் வாசித்து இருக்கிறார்கள்.
இதனால் ஹார்லியின் வசனங்கள் அனைத்துமே எந்த உணர்வும் இல்லாமல் போய்விட்டது.
கோமாளி ராணி
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக