இந்தியா எதிர்காலத்தில் அணு ஆயுத சோதனைகளை செய்ய வாய்ப்புள்ளது! - ஆஸ்லே டெல்லிஸ்
ஆஸ்லே டெல்லிஸ் |
ஆஸ்லே டெல்லிஸ், டாடா ஸ்ட்ரேட்டஜிக் அஃபேர்ஸ்
பிரிவு தலைவராக இருக்கிறார். இவர் முன்னதாக கார்னெகி உலக அமைதி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
தற்போது அசிட்ரிமிக்ஸ் – நியூக்ளியர் ட்ரான்ஸ்மிஷன் இன் சதர்ன் ஆசியா நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
உங்கள் நூலில் நீங்கள் கூறியுள்ள அடிப்படையான
விஷயம் என்ன?
1998ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் அணு ஆயுதங்கள்
பற்றி நூல் எழுத நினைத்தேன். அதனால் அமெரிக்காவில் அதிபர் புஷ் நிர்வாகத்தில் எனக்கு
வேலை கிடைத்தது. இதனால் நூலை எழுத முடியவில்லை. மீண்டும் திரும்ப நூலை எழுதியபோது சில
விஷயங்களை நான் கவனத்தில் கொண்டேன். அமெரிக்க –இந்திய அணு ஒப்பந்தம் நடந்தபோது நான்
அமெரிக்காவில்தான் வேலை செய்துகொண்டிருந்தேன். தெற்காசியாவில் சீனாவுக்கு முக்கியமான
இடம் உண்டு. இதற்கு இடையில் சீனாவுக்கும் ரஷ்யாவிற்கும் விரோதம் உருவானது. சீனா, பாகிஸ்தான்,
இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் 1998ஆம் ஆண்டு
முதலே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து முக்கியமான தெற்காசிய நாடுகளாக மாறிவிட்டன.
மேற்சொன்ன நாடுகளின் விவகாரங்கள்தான் நூலின்
அடிப்படையான மையம். 1998ஆம் ஆண்டு முதலாக அது ஆயுதங்கள் தயாரிப்பில் சீனா, இந்தியா,
பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளே முன்னேறி வருகின்றன. ஆயுதங்கள் உற்பத்தி, பொருளாதார
வளர்ச்சியிலும் இவை முக்கியமான இடங்களைப் பெற்றுள்ளன. இவை வெவ்வேறு விதமான நோக்கங்களை
முன்வைத்து செயல்பட்டு வருகின்றன.
அணு ஆயுதங்களை அடிப்படையாக வைத்து மூன்று நாடுகளையும்
வரிசைபடுத்த முடியுமா?
மூன்று நாடுகளையும் அப்படி வரிசைப்படுத்த
முடியாது. மூன்று நாடுகளும் அணு ஆயுதங்களைத் தவிர்த்து பிற ஆயுதங்களையும் உருவாக்கி
சேமித்து வைத்துள்ளன. இந்த அடிப்படையில் நாடுகளை வகைப்படுத்துவது மிக கடினம். அப்படியும்
நாடுகளை வரிசைப்படுத்தினால், சீனா, பாகிஸ்தான், இந்தியா என வரலாம். அரசியல், பொருளாதார
ரீதீயாக சீனா அமெரிக்காவை எதிர்த்தது போரிட்டு வருகிறது. இதற்கடுத்த நிலையில் பாகிஸ்தான்
உள்ளது. இந்தியா போன்ற பலம் பொருந்திய நாட்டை எதிர்க்கும் நிலையிலும் பேராசை கொண்ட
லட்சியங்களை வைத்துள்ளன. இந்த வகையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின்
புது டெல்லி நகரில் அணு ஆயுதங்களை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் உள்ளனர். உண்மையில் இந்தியாவிற்கு
பிற நாடுகளை அணு ஆயுதங்களை வைத்து தாக்குவதை விட தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதும்.
அந்த வகையில் இந்தியா அணு ஆயுதங்களின் மீது ஆர்வம் காட்டாத நிலை எனக்கு ஆச்சரியம் தரவில்லை.
நூலில் ஓரிடத்தில் இந்தியா அணு ஆயுத சோதனைகளை
ஆய்வு செய்து கூறியிருக்கிறீர்கள். உண்மையில் இந்தியா எதிர்காலத்தில் அணு ஆயுத சோதனைகளை
செய்ய வாய்ப்புள்ளதா?
இன்று இரு விதமான ஆயுதங்கள் உள்ளன. ஒன்று,
அணு ஆயுதங்கள், தெர்மோநியூக்ளியர் ஆயுதங்கள். இதில் இரண்டாவதாக கூறிய தெர்மோ நியூக்ளியர் ஆயுதங்கள் பெரு நகரங்களை
அழிக்க கூடிய வலிமை கொண்டவை. ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி என இரண்டு நகரங்களில் அணு
ஆயுதங்களை அமெரிக்கா வீசியது. பெய்ஜிங், கராச்சி, புது டெல்லி, மும்பை என உள்ள நகரங்கள்
அனைத்துமே ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும் அளவில் குறைவு. ஜப்பானில் வீசப்பட்ட
அணுகுண்டுகளின் அளவு பதினைந்து முதல் இருபது டன்கள் இருக்கும். இந்த வகையில் தெர்மோ
நியூக்ளியர் ஆயுதங்கள் அளவில் பெரியவை. சக்தியும் அப்படித்தான்.
சீனா இந்தவகையில் இருநூறு அணு ஆயுதங்களை
வைத்துள்ளது. இவற்றை ஏவும் கருவிகளும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது. இந்தியா
தெர்மோ நியூக்ளியர் ஆயுதங்களை 98 ஆம் ஆண்டு சோதித்து அதில் தோல்வியுற்றது. ஆனால் இந்த
வகையில் சீனா பெரும் நிலப்பரப்பு கொண்டிருப்பதால் தெர்மோநியூக்ளியர் சோதனைகளை செய்திருக்கிறது.
பாகிஸ்தான் கூட இந்த ஆயுதங்களை சோதித்திருக்கிறது. இந்தியா, அமெரிக்காவுடன் அணு ஆயுத
ஒப்பந்தங்களை செய்திருக்கிறது. இதனால் அணு ஆயுதங்களை உருவாக்கி சோதித்து பார்ப்பது கடினம். அமெரிக்காவின் எதிர்ப்பு இருப்பதால்
எதிர்காலத்தில் அணு ஆயுதங்களை செய்ய தயங்கும் என நினைக்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக