பூஜை செய்வதும், மந்திரங்கள் ஓதுவதும் ஏற்படுத்தும் விளைவுகள்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

 








அகம் புறம்
ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்



நான் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் கல்லூரி முதல்வர் அதற்கு மறுக்கிறார். நான் அவர் கூறியதை மறுத்தால் நிறைய பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். அதேசமயம் நான் அவர் கூறியதைப் பின்பற்றினால், எனது இதயம் உடைந்துபோகும். இப்போது நான் என்ன செய்வது?

நீங்கள் உங்களின் பிரச்னையான நிலையை முதல்வரிடம் எடுத்துச் சொல்ல நம்பிக்கை இல்லாத நிலையைப்  பற்றி கூறுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அவரிடம் உங்கள் பிரச்னை பற்றி பேசுங்கள். நீங்கள் உங்களது நிலையைப் பற்றிக் கூறியும் கூட அவர்  

தனது நிலையில் பிடிவாதமாக இருந்தால், அவரிடம்தான் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் அப்படி உங்கள் கோரிக்கையை நிராகரிப்பதற்கு கூட அவரிடம் சில காரணங்கள் இருக்கலாம். அதை நீங்கள் கண்டறிய வேண்டும். இங்கு இருதரப்பிலும் நம்பிக்கை தேவைப்படுகிறது. முதல்வர், மாணவரான நீங்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை வேண்டும்.  வாழ்க்கை என்பது ஒரு பக்கம் சார்ந்த உறவு கிடையாது. முதல்வர், மாணவர் என நீங்கள் இருவருமே மனிதர்கள். எனவே இருவருமே தவறு செய்ய வாய்ப்புள்ளவர்கள்தான்.

எனவே இருவரும் தங்கள் தரப்பைப் பற்றி பேசுவது முக்கியம். நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்ல நினைக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோர், உங்களை அனுப்ப வேண்டாமென்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருக்கலாம். இதனால் என்ன நடந்தது என இருபக்கமும் விசாரித்து அறியவேண்டும். அப்போதுதான், ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு சரியாக அமையும். இதுபோல நம்பிக்கையான உறவை பள்ளி உருவாக்க வேண்டும். அதுதான் உண்மையான அன்பை உருவாக்கும். வளர்க்கும்.

எதனால் பூஜை செய்ய வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?

முதியவர்கள் எதற்காக பூஜைகளை செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு முன்னோர் செய்த விஷயங்களை அப்படியே நகல் செய்கிறார்கள். எந்தளவு நாம் முதிர்ச்சியற்றவர்களாக இருக்கிறோமோ அந்தளவு  முந்தைய பழக்க வழக்கங்களை நகல் செய்து அப்படியே பின்பற்றுவோம். நீங்கள் பூஜையை ஏன் செய்யவேண்டும் என்று கேட்கிறீர்கள். பூஜை செய்யும் முதியவர்களிடம் இதுபற்றி கேளுங்கள். அவர்கள் முன்னோர்கள் பூஜை செய்திருப்பார்கள். இவர் அப்படியே அதே கலாசாரத்தை பின்தொடர்கிறார். பூஜை செய்யும்போது சொல்லும் சொற்களை மனதை மந்தமாக்கி சற்று அமைதியைக் கொடுக்கும்.  இந்த வகையில் சமஸ்கிருதசொற்கள் அதிர்வுகளைக் கொண்டவை. எனவே, அவற்றை சொல்லும்போது சொல்பவருக்கு மனதளவில் சிறந்த அமைதி கிடைக்கும்.

முதியவர்கள் பூஜை செய்துவருவதால் இளைஞராக இருக்கும் நீங்களும் அதை நகல் செய்து பின்பற்ற வாய்ப்புள்ளது. யாராவது பூஜை செய்வது நல்லது என்று கூறினார்களா? அது ஒரு மாயை போன்ற தன்மையில் பலரையும் செய்யவைக்கிறது. எதற்காக அதை செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்கள் கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? பல கோடி மக்கள் பூஜை செய்யட்டும். ஆனால் நீங்கள் அதை செய்வது பற்றி ஏன் யோசிக்கவில்லை. அதில் உள்ள உண்மையை ஆராய்ந்து பார்க்கலாமே?

குறிப்பிட்ட வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லுவதால் உண்மையை உங்களால் அறிய முடியாது. கடவுளையும் பார்க்க முடியாது. இதில் உள்ள உண்மையை அறிய நீங்கள் தியானம் செய்வது பற்றி கற்க வேண்டும். தியானம் என்பது பூஜை செய்வதிலிருந்து மாறுபட்டது.

பலகோடி மக்கள் பூஜை செய்வதால் உலகம் என்ன முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது.  குறிப்பிட்ட வார்த்தைகளை நீங்கள் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதால் நீங்கள் எந்திரமாகிறீர்கள்.  பூஜை செய்பவர்கள் புதுமைத்திறன் கொண்டவர்களாக உருவாகி இருக்கிறார்களா? உண்மையில்  புதுமைத்திறன் என்பது, நீங்கள் அன்பு, கருணை, செயல் ஊக்கம் கொண்டவராக இருப்பதுதான். தியானம் பற்றி அறிய நீங்கள் நிறைய தேட வேண்டும். விசாரிக்க, கேள்வி கேட்க, சந்தேகப்பட தயாராக இருக்கவேண்டும். அப்போதுதான் உங்களால் தியானத்தை அடையமுடியும். அப்படி அடைந்தால் உங்களுக்கு ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

 

லைப் அகேட் நூலில் இருந்து…..


கருத்துகள்