சமூகம் என்பது என்ன?
அகம் புறம்
ஜே கிருஷ்ணமூர்த்தி
கேள்வி பதில்கள்
கே. சமூகம்
என்பது என்ன?
ப. சமூகம்
, குடும்பம் என்றால் என்ன என்று பார்ப்போம். இதை நாம் படிப்படியாக கண்டுபிடிக்க முயல்வோம்.
எப்படி சமூகம் உருவாக்கப்பட்டது, குடும்பம் என்றால் என்ன இதுதான் எனது குடும்பம் என்று
நீங்கள் கூறுகிறீர்கள். இந்த அமைப்பில் அப்பா,
அம்மா, அண்ணன், தங்கை ஆகியோர் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், உடை, நகைகள்
என தனியாக உள்ளன. இதைப்போலவே பிறரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். குடும்பம்
என்பது ஒருவரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கானது. அப்பா, மகனைப் பாதுகாப்பார். அவரின்
சொத்துக்களும் அப்படித்தான் குடும்பத்தினரால் பாதுகாக்கப்படும். இப்படித்தான் குடும்ப அமைப்பு செயல்படுகிறது. உங்களது
குடும்பத்தைப் போலவே தான் பிறரது குடும்பமும் உள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இன்னொரு
வெளி நபர் வரக்கூடாது என்பதற்காக சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இதில் அதிக
உறுப்பினர்கள் கொண்ட குடும்பம், அதிக சொத்து, அதிக வாகனங்கள், உடைகளை என வாழ்கின்றனர். இவர்கள் பிற குடும்பங்களை
கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகின்றனர். மேலும், சட்டங்களை உருவாக்கும் நடவடிக்கையிலும்
செல்வாக்கு செலுத்துகின்றனர். இந்த சக்திவாய்ந்த
குடும்பங்கள்தான் பிறர் என்ன செய்யவேண்டும் என்ற கட்டளைகளை கூறுகின்றனர். இந்த சக்திவாய்ந்த
மனிதர்களுக்கு எதிரான மனிதர்களும் உண்டு. இவர்கள் முதலில் உருவான அமைப்பை தகர்த்துவிட்டு
தங்களின் சிந்தனைகளிலான புதிய அமைப்பை உருவாக்க முயல்கின்றனர்.
சமூகம்
என்பது என்ன அது மனிதர்களின் உறவுதான். ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் உறவு கொள்கிறார்.
ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்துடன் உறவு கொள்கிறாது. ஒரு குழு இன்னொரு குழுவுடன்
என இந்த செயல்பாடு நீள்கிறது. மனிதர்களின் உறவு என்பது எப்போதும் பேராசை, தந்திரங்கள்
நிரம்பியது. எனக்கு அதிக அதிகாரம் கிடைத்தது என்றால் நான் எனக்குப் பிடிக்காத உங்களை
வெளியேற்றுவேன். நாளை உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் அதைத்தான் செய்வீர்கள். இதை கட்டுப்பாட்டில் கொண்டுவர நாம் சட்டங்களை உருவாக்கினோம்.
இதன்மூலம் அதிகாரம் கொண்ட ஒருவர் வந்து சட்டங்களை மாற்றினாலும், அவர் உருவாக்கிய சட்டங்களின்
படி வாழ்க்கை தொடரும். நின்றுவிடாது. சமூகத்தில் உள்ள மனிதர்களின் உறவு என்பது இடையறாத
முரண்பாடுகளைக் கொண்டது. பேச்சு, சிந்தனை, விருப்பம், அமைப்புகள், தொழில்துறை என அனைத்துமே
மிகவும் சிக்கலான முறையில் மனிதர்கள் மாற்றி அமைத்துக் கொண்டனர்.
கே. சமூகத்தில்
நாம் சுதந்திரமாக வாழ முடியுமா?
ப. நான்
எனது சௌகரியத்திற்காக சமூகத்தை சார்ந்திருக்கிறேன். என்னுடைய வசதிக்காக இப்படி வாழும்போது
நான் எப்படி சுதந்திரமாக வாழ முடியும். பணம், பாதுகாப்பிற்காக நான் எனது தந்தையை நம்பியிருக்கிறேன்.
சில வேளைகளில் நான் எனது ஆன்மிக குருவைச் சார்ந்து இருக்கிறேன். இப்படியுள்ள நிலையில்
நான் சுதந்திரமாக இல்லை என்றுதானே அர்த்தம். புற அளவில் அல்லாமல் அகம் எனும் தன்மையிலும்
கூட அது சுதந்திரமான தன்மை அல்ல.
நாம் மனதளவில்
பிறர் என்ன சொல்வார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். நாம் மனதில் பொறாமை கொண்டவராக,
பேராசை உள்ளவரா இல்லையா என்பதை கவனிக்கவேண்டும். உளவியல் ரீதியாக நாம் சமூகத்தைச் சார்ந்து
செயல்படும் நிலையில் இருந்தால், நாம் சுதந்திரமாக சிந்திக்கவில்லை, செயல்படவில்லை என்றுதான்
அர்த்தம். உங்களை நீங்கள் மோசமானவராக உணர்ந்து அதை புரிந்துகொண்டால் கூட சுதந்திரமானவர்
என்று கூறலாம்.
image - pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக