அனைத்து சாலைகளும் அக்ரோபோலிஸ் நோக்கி…

 









அனைத்து சாலைகளும் அக்ரோபோலிஸ் நோக்கி…

அமைந்துள்ள இடம் க்ரீஸ்

கலாசார அங்கீகாரம் 1987

டிப்ஸ்

அனைத்து இடங்களையும் பார்க்க காம்போவாக டிக்கெட் எடுத்தால் நல்லது.

 

க்ரீசிலுள்ள ஏதேன்ஸ் நகரம். இந்த நகரத்தை காக்கும் கடவுள் பெயர் ஏதேனா.  ஏதேன்ஸ் நகரம், அங்கு வாழும் மக்களுக்கு முக்கியமானது. வணிகம், ராணுவ அணிவகுப்பு, ஜனநாயகம் என அனைத்திற்குமானது. இங்கிருந்து நீங்கள் சுற்றுலாவை தொடங்கலாம். ஏதேன்ஸ் நகரம் , 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  இங்குள்ள பார்த்தினோன் கோவிலில் ஏதேனாவின் பெரிய சிலை அமைந்திருந்த்து. இங்குதான் கடவுளை வணங்குபவர்கள் தங்களது பரிசுப் பொருட்களை வைப்பார்கள்.

பின்னாளில் ஒட்டமான், வெனிடியன் படையினர் செய்த தாக்குதலில் ஏதேனா சிலை சிதைந்துவிட்டது. அப்படி சிதைந்தும் மிச்சமிருக்கும் சிலைத்துண்டுகளை வைத்து மீதியை நீங்கள் உங்கள் கற்பனை நினைவுகளில் நிரப்பிக்கொள்ளலாம். இங்கு செல்ல முதலில் மெட்ரோ  ரயில் பிடித்து அக்ரோபோலி ரயில் நிலையத்திற்கு செல்லவேண்டும். அங்கு பார்த்தினோன் கோவிலைப் பிரதிபலிக்கும் மார்பிள் கற்களை வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே தெற்குப்புற வாசல் வழியாக வெளியே வரவேண்டும். இது மைய வாசலுக்கு எதிர்ப்புறமாக இருக்கும் வழி.

மக்கள் வாழும் இடங்கள், டையோனிசஸ் தியேட்டர், கலை  விழாக்கள் நடத்தப்படும் இடம் என பார்த்துக்கொண்டே செல்லலாம்.

ஏதேனாகோவிலை நீங்கள் பார்க்கலாம். அதேசமயம். அங்குள்ள ஏதேனா நிக் கோவிலும் உங்களது பார்வையில் படும். இந்த கோவில் இன்றும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பார்த்தினோன் கோவிலை மார்பிள் கற்களால் கட்டிய பொறியாளர் சிறந்த மேதாவியாக இருக்கலாம். இங்கு வீசும் காற்று, கல் தூண்களில் முட்டி மோதி செல்வதை உங்களால் கேட்க முடியும்.

நவீன நகரமாக மாறியுள்ள அக்ரோபோலீசைப் பார்க்க பத்து கி.மீ. தொலைவுக்கு செல்லவேண்டும். பைரேயஸ் துறைமுகத்திலிருந்து நகரை எளிதாக பார்க்கலாம். கிரேக்க நாட்டின் நாடாளுமன்றம், அதற்கு  அருகில் உள்ள ஜீயஸ் கடவுளின் கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து பார்த்தாலே உங்களுக்கு அனைத்து சாலைகளும் எப்படி அக்ரோபோலிஸை நோக்கி வருகிறது என அறியலாம். இப்படி நகரை திட்டமிட்டு கட்டி 2500 ஆண்டுகள் ஆகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இன்று அக்ரோபோலிஸ் நகரிலேயே சிறப்பான அருங்காட்சியகம் உண்டு. அதில் அன்றைய நகரம் எப்படி இருந்தது  என பார்த்து அறியலாம். அந்தளவு நவீனமாக கருவிகளை வைத்து பராமரிக்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்த அனைத்து விஷயங்களும் இங்குண்டு.

வேர்ல்ட்ஸ் கிரேட்டஸ்ட் ஹெரிடேஜ் சைட்ஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்