இடுகைகள்

சீரியல் கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல் கொலைகாரனால் கொல்லப்பட்ட சகோதரியின் உடலைத் தேடி அலையும் காவல்துறை அதிகாரி! பியாண்ட் ஈவில்

படம்
  பியாண்ட் ஈவில் - கே டிராமா பியாண்ட் ஈவில் கொரிய டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   2020ஆம் ஆண்டு லீ டாங் சிக் என்பவரின் சகோதரி, காணாமல் போகிறார். அவரது வெட்டப்பட்ட கைவிரல்கள் மட்டும் வீட்டின் முன் கிடைக்கின்றன. சம்பவ இடத்தில் லீ டாங் சிக்கின் கிடார் மீட்டும் கருவி கிடைக்க, அவரை வழக்கில் குற்றவாளியாக சந்தேகப்படுகிறார்கள். அதனால், அவர் வாழும் ஊர் அவரை அக்காவைக் கொன்ற தம்பி என முன்முடிவு செய்துவிடுகிறது. ஊடகங்கள் அதை சிறப்பு செய்தியாக்குகின்றன. ஆனால் அக்காவின் உடல் கிடைக்காத காரணத்தால் தம்பி குற்றவாளி அல்ல என விடுவிக்கப்படுகிறார். அவரை கைது செய்த காவல்நிலைய தலைவர், லீ டாங் சிக் விரும்பியபடி காவல்துறை செர்ஜென்ட் ஆக உதவுகிறார். பெண் பிள்ளை இறந்த துக்கத்தால் லீ டாங் சிக்கின் அப்பா, பனியில் பிள்ளைக்காக காத்திருந்து மனம் சிதைந்து போய் உறைந்து இறக்கிறார். அதைப்பார்த்த அவரது மனைவிக்கு புத்தி பேதலித்துவிடுகிறது. லீ டாங் சிக்கை ஊர் முழுக்க தூற்றுகிறது. ஏறத்தாழ அவரது நெருங்கிய நண்பர்களே ஒருவேளை கொலை செய்திருப்பானோ, சைக்கோ பயலோ என சந்தேகப்படுகிறார்கள். ஆனால் லீ மனம்

சைக்கோ கொலைகாரர்கள் காவல்துறையில் சிக்கிக்கொள்வதற்கான காரணங்கள்

படம்
  சைக்கோ கொலைகார்கள் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள், கொலை செய்து என ஒற்றை பதிலைக் கூறிவிடலாம். ஆனால் அது உண்மையல்ல. வீடு, வாழும் அறையில் கிடைக்கும் ஆதாரங்கள், விசாரணை கொலைகாரரிடம் இருந்து உயிர் பிழைத்தவர் சொல்லும் வாக்குமூலம் கூட்டாளிகள் கொலையாளிக்கு எதிராக திரும்புவது கொலையாளியின் செயல்பாட்டைப் பார்த்து சந்தேகப்பட்டு காவல்துறைக்கு தகவல் சொல்லுவது தங்களுக்கு தெரிந்த உறவினர், நண்பர்களை கொலையாளி கொல்வது வேறு வழக்கில் கைதாகி கொலை செய்தேன் என ஒப்புக்கொள்வது ஊடகங்களுக்கு அழைத்து அல்லது கடிதம் எழுதி குற்றங்களை ஒப்புக்கொள்வது தாங்களே குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைவது கொலை செய்து அல்லது உடலை அப்புறப்படுத்தும்போது மாட்டிக்கொள்வது காவல்துறை தகவல் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்படுவது சந்தேகப்படும்படி நடந்துகொள்வது கொலையாளி தற்கொலை செய்துகொண்டு இறந்தபிறகு நடைபெறும் விசாரணை இது பெரும்பாலான வழக்குகளை ஆராய்ந்து செய்த முடிவுகளின் படி உளவியலாளர்கள் தொகுத்தது. காலம்தோறும் இதில் மாறுதல்களும் நடைபெறலாம். சைக்கோபாத்களைப் பொறுத்தவரை சமூகத்தின் எந்த விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டார்க

குற்றம் செய்தது யார் என கண்டறிவது எப்படி?

படம்
  ரத்தசாட்சி ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திக்கொல்கிறார். சுத்தியால் தலையை சிதைக்கிறார். அல்லது கோடாரி வைத்து நெஞ்சை அல்லது கபாலத்தை பிளந்து கொல்கிறார். இப்படி கொல்லும் முறையைப் பொறுத்து சில பாணிகள் அமைந்துவிடும். செல்வராகவன் படம் என்றால் நெருப்பு டான்ஸ் எங்கேப்பா என்கிறார்களே அதுதான். ஆனால் இப்படி இந்த பாணி கொலை என்று சொல்ல முடியாதபடி கொலைகளும் நிறைய நடந்தபடி உள்ளன. காவல்துறையினரும் ஏபிசி என வரிசைமுறைப்படி பழகிவிட்டதால், இது அவனாக இருக்குமோ, இல்லை இவனாக இருக்குமோ என குழம்பும்படி ஆகிவிட்ட வழக்குகளும் ஏராளம் உண்டு. இங்கு நாம் அதுபோல சில விஷயங்களைப் பார்ப்போம். நியூயார்க்கில் ரோசெஸ்டர் நகரம். 2005ஆம் ஆண்டு. இங்கு ராபர்ட் ஸ்பாஹால்ஸ்கி என்பவர் தான் நான்கு கொலைகளை செய்ததாக கூறி சரண் அடைந்தார். காவல்துறையினருக்கு எப்போதும் ஈகோ அதிகம். நீ வந்து சரணடைந்தால் நாங்கள் விசாரிக்காமல் இருக்க முடியுமா விசாரித்து, முதலில் இரண்டு வழக்கு, பிறகு இரண்டு வழக்கு என சோதித்து உண்மையை அறிந்தனர். மூன்று கொலைகள் நடந்த ஆண்டு 90 முதல் 91 என ஓராண்டு என்றால் அடுத்த கொலை பதினைந்து ஆண்டுகள் கழித்து நடைபெற்றுள

ஏழு பாவங்களை முற்றாக ஒழிக்கும் சீரியல் கொலைகாரர்! - செவன் -1995- டேவின் ஃபின்ச்சர்

படம்
  செவன் மோர்கன் ப்ரீமன், பிராட்பிட் இயக்கம் டேவின் ஃபின்ச்சர் 1995ஆம் ஆண்டு வெளியான படம். இன்றளவிலும் அதன் உருவாக்கம், கதை, நடிப்பிற்காக பேசப்பட்டு வருகிறது. படத்தில் வரும் மையப்பொருளைப் பொறுத்தவரை அதில் நல்லது, கெட்டது என எதையும் தீர்மானிக்க முடியாது. ஜான் டோ என்ற சீரியல் கொலைகாரர் நகரில் கொலைகளை செய்துகொண்டே வருகிறார். கொலைகளை ஆராய வில்லியம் சோமர்செட், டேவிட் மில்ஸ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். அவன் கொலை செய்யும் பாணிதான் கதையில் முக்கியமானது. கிறிஸ்துவ மதத்தில் 7 பாவங்கள் என்பது முக்கியமானது. இக்கொள்கைப்படி  கொலையாகும் ஒவ்வொரு நபர்களின் அருகிலும் பாவத்தை சுவற்றில் எழுதி வைத்துவிடுகிறான் கொலைகாரன். கோட்பாடு சரி, கொலைகாரனை கொத்தாக பிடித்து கைது செய்தார்களா இல்லையா என்பதுதான் கதையின் இறுதிப்பகுதி.  இதில் வில்லியம் சில மாதங்களில் ஓய்வுபெற்று  வேறு ஊருக்கு செல்லவிருக்கிறார். அவருக்கு தான் வேலை செய்யும் வேலை பிடிக்கவில்லை. அடுத்தவர்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கும் மக்களை தனக்கு பிடிக்கவில்லை என்கிறார் வில்லியம். டேவிட் மில்ஸைப் பொறுத்தவரை அவர் தனது மனைவியுடன் அந்த நகருக்கு

குற்றங்களை செய்வதில் முதலிடம் யாருக்கு?

படம்
குற்றங்களை ஆவணப்படுத்துதல் குற்றங்களை ஆவணப்படுத்துவது என்பது கடினமானது. சில வழக்குகள் மிக நீண்டு பல ஆண்டுகளாக கோப்பில் இருக்கும். குற்றவாளிகளை பிடிக்கவே முடியாது. இதற்கு காரணம், வழக்குகளை காவல்துறையினர் சரியானபடி இணைத்து பார்க்காத துதான். இதன்படி பார்த்தால் முந்நூறு பேர்களை கொன்ற கொலம்பியாவைச் சேர்ந்த பெட்ரோ லோபஸ் முன்னாடி வருவார். கொலைகளை செய்த தில் இவருக்கு தங்கப் பதக்கம்தான் தரவேண்டும். இதற்கடுத்து,  ஹென்றி லீ லூகாஸ், ஓட்டிஸ் ஆகிய இருவரும் இருநூறு பேர்களை கொன்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களை காவல்துறை விசாரித்தபோது, தாங்கள் ஏழு பேர்களை மட்டுமே கொன்றதாக சொன்னார்கள். அடித்து கேட்டாலும் அப்படித்தாங்க சார் என்றார்கள்.   ஜெர்மனியைச் சேர்ந்த ப்ரூனோ லுட்கே, ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரேய் சிக்காட்லோ முறையே 85, 52 என ஆட்களை போட்டுத்தள்ளியவர்கள். இவர்களுக்கு அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜெரால்டு ஸ்டானோ வருகிறார். இவர் 41 பேர்களை கொன்றார். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந மோசஸ் சிட்கோல் என்பவர் 38 பேர்களைக் கொன்றுள்ளார். இவர்களுக்கு அடுத்துதான் கேரி ரிட்ஜ்வே, ஜான் வேய்ன்

சீரியல் கொலைகாரர்கள் ஏழையா, பணக்காரர்களா ? - சைக்கோ டைரி

படம்
  சைக்கோ டைரி ஆபாசப்படங்களும் மனநிலையும் இதற்கு பதில் சொன்னவுடன் நீங்கள் உங்களிடம் உள்ள பிளேபாய் இதழ்களையும், காமசூத்ரா படங்களையும் எரித்துவிடக்கூடாது. சீரியல் கொலைகாரர்கள் தாங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் எளிதாக அது சரிதான் என்ன தப்பு என்று வாதிடுவார்கள். எனவே இவர்களின் பதில்களை வைத்து நாம் எதையும் முடிவு செய்யமுடியாது.  இளைஞர்கள் வளரும் பருவத்தில் ஆபாச இதழ்களை படுக்கையில் வைத்து படிப்பது இயல்பான ஒன்றுதான். பெரும்பாலான படங்களில் பெண்கள் நிர்வாணமாக இருப்பார்கள். உறுப்புகள் சில இடங்களில் மறைந்தும் மறையாமலும் இருக்கும். இதெல்லாம் இயல்பானதுதான். இணையத்தில் விரல் சொடுக்கும் நேரத்தில் ஒருவருக்கு ஆபாசப்படங்கள் கிடைத்துவிடுகின்றன. அதனை ஒருவர் பார்ப்பது, ரசிப்பது பிரச்னையில்லை. இதில் ஹார்டுகோர், ரேப் என்ற பிரிவுகளை திறந்து பார்த்துக்கொண்டிருந்தால் உடனே எச்சரிக்கையாவது அவசியம். தனக்கு நடக்கும் கொடுமைகளை ஒருவர் ஏற்றுக்கொள்வது போல ஆபாசப் படங்கள் இந்த பிரிவுகளில் இருக்கும். இதனை பார்க்கும் ஒருவருக்கு பெண்கள் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சரியானவர்கள், நடத்தை கெட்டவர்களை இப்படித்தான் நடத்தவேண்டும

அம்மா மீதான வெறுப்பு கொலைகளுக்கு முக்கிய காரணமா இல்லையா? - சைக்கோ டைரி

படம்
      சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்களை படங்களில் யாரும் உள்ளது உள்ளபடியே காட்டமாட்டார்கள் . அப்படி காட்டினால் தியேட்டரில் , ஓடிடியில் படம் எப்படி ஓடும் . அப்படியானால் எந்த படமும் சீரியல் கொலைகாரர்களை நிஜமாக ரத்தமும் சதையுமாக காட்டவில்லையா என்று கேள்வி எழும் . An eye for an eye என்ற படம் ஓரளவுக்கு சீரியல் கொலைகா ர்களை திரையில் சரியாக காட்டியது என்று கூறலாம் . படத்தை விமர்சகர்களை கழுவி ஊற்றினர் . ஆனாலும் நடித்தவர்கள் தங்கள் பணியை சிறப்பாகவே செய்திருந்தனர் . வேறுபடங்களைக் கூட இந்த வகையில் கூறலாம் . தி பேட் சீட் , சிட்டிஷன் எக்ஸ் , எ ஸ்ட்ரேஞ்சர் அமாங் அஸ் , டு கேட்ச் எ கில்லர் ஆகிய படங்களை எப்படி நிதானமாக பாருங்கள் . ஸ்டான்லி குப்ரிக் தனது மனவோட்டத்தின்படி எடுத்த எ கிளாக்வொர்க் ஆரஞ்ச் என்ற படமும் முக்கியமானது . இப்படியொரு குற்றவாளியை அதுவரை யாரும் யோசித்தே பார்த்ததில்லை என்று கூறலாம் . வில்லன் யார் சீரியல் கொலைகாரர்கள் நூறு சதவீதம் வில்லன்கள் என்று கூறிவிட முடியாது . அவர்களிடம் சில நல்ல அம்சங்கள் இருக்கலாம் . ஆனால் வன்முறையும் , கொலை மீதான ஆர்வமும் பிற விஷயங்களை அமுக்கிவ

தங்கள் குழந்தைகளை தாங்களே கொல்லத் துணியும் பெண்கள்! - சைக்கோ டைரி

படம்
          சைக்கோ டைரி தொடர் கொலைகாரர்கள் குறிப்பிட்ட நாடுகளை மட்டும் சேர்ந்தவர்களா ? உலகமயமாக்கல் காலத்தில் இப்படி கூறினால் எப்படி ? உளவியல் பாதிப்பு என்பது அனைத்து நாடுகளில் வாழும் மக்களுக்கும் உண்டு . இங்கிலாந்து , ரஷ்யா , தென் ஆப்பிரிக்கா , ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் தொடர் கொலைகார ர்கள் உண்டு . அமெரிக்காவில் நிறையபேர் இருப்பதாக தோன்றக் காரணம் . அவர்கள் குற்றவாளிகளை பெருமளவு ஆவணப்படுத்துவதுதான் . மேலும் அமெரிக்காவில் சுதந்திரமாக துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதிக்கிறார்கள் . இதனால் அவர்களுக்கு மனதின் சமநிலை தவறும்போதெல்லாம் துப்பாக்கியை எடுத்து பத்துக்கும் மேற்பட்ட ஆட்களை சுட்டுக்கொல்கிறார்கள் . ஆனால் அனைத்து நாடுகளிலும் இது சாத்தியமில்லை . சிலர் ஒருமுறை இதுபோல குற்றங்களை செய்தால் ஆயுளுக்கும் சிறையில் இருக்கும்படி சட்டங்களும் உள்ளன . அமெரிக்காவில் உள்ள இடது , வலதுசாரி ஊடகங்கள் போல துடிப்பாக குற்றங்களை பல்வேறு நாட்டு ஊடகங்களும் ஆவணப்படுத்துவதில்லை . இதனால் மெக்சிகோ போன்ற நாட்டில் அதிக கொலைகள் , குற்றங்கள் நடைபெற்றாலும் கூட வெளியே தெரிவதில்லை . குற்றங்கள் அதிகமாக

பெற்றோரைக் கொன்ற கொலைகாரரை பின்தொடரும் தடயவியல் வல்லுநர்! டாக்டர் ஷின் சீனத் தொடர்

படம்
                டாக்டர் ஷின் சீன தொடர் தடயவியல் வல்லுநர்களை கதாநாயகர்களாக்கும் படைப்பு . இதற்காகவே தடயவியல் வல்லுநரை விட புத்தியில் குறைந்த கேப்டனாக பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் . தடயவியல் தொடர்பான இரண்டாவது சீனதொடரை இங்கு எழுதுகிறோம் . இரண்டிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன . குடும்பம் சார்ந்த மர்மமான பிரச்னைகள் தடயவியல் வல்லுநருக்கு இருக்கிறது . அதாவது தடயவியல் பிரிவின் தலைவருக்கு… அந்த பிரச்னைகளோடு பிற வழக்குகளையும் இணைத்து அவர் தடயங்களை சேகரிக்கிறார் . குற்றவாளிகளை பிடிக்க கேப்டனுக்கு உதவுகிறார் . இதோடு தலைவரின் கீழ் உதவியாளராக இருக்கும் பெண்ணை காலம் கடந்தேனும் நம்பிக்கை இழக்காமல் காதலிக்கிறார் . இவை மாறாது நடக்கின்றன . டாக்டர் ஷின் தொடரில் புதுமை என்னவென்றால் , வன்முறையைக் குறைத்து காதலையும் இருக்கிறதா இல்லையா என பார்வையாளர்களை தேட வைத்திருக்கிறார்கள் . ஷின்னை நாயகனாக்குவது சரிதான் . ஆனால் அதற்கான போலீஸ் குழுவை வழிநடத்தும் கேப்டனை காஸனோவா அளவுக்கு காட்டி , புத்தியில்லாதவராக மாற்றிருக்க வேண்டுமா ? கதையில் சுவாரசியமான இடம் எதுவ

ஆபாசப்பட நாயகன் லேக்- திருடுவதில் சூரன் இணைந்து செய்த கொலைகள்!

படம்
அசுரகுலம் லியோனார்டு லேக் - சார்லஸ் என்ஜி எனக்கு பெண்களோடு விளையாடு பிடிக்கும். எனக்கு தேவைப்படும் போது அவர்களைப் பயன்படுத்திக்கொள்வேன். அதேசமயம் எனக்கு போரடித்தால் அவர்களை கூண்டில் அடைத்து வைப்பேன். அதுவும் கூட சலிப்பு தந்தால் அவர்களை என் கண்பார்வையிலிருந்து அகற்றுவேன். முடிந்தவரை என் வாழ்க்கையிலிருந்தும் கூட ------ இப்படி சொன்னவர்தான் லேக். தன் வீடியோ டேப்பில் மனதில் இருந்தவற்றை உடைத்து பேசியிருந்தார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் 1945ஆம் ஆண்டு அக்.29 அன்று பிறந்தவர், லேக். சிறுவயதில் அனைத்து அமெரிக்க குடும்பங்களிலும் நடக்கும் சங்கடங்கள் அவருக்கும் நடந்தன. குடும்பம் பிளவுபட்டது. அப்பா, அம்மா திசைக்கு ஒருவராக பிரிய பாட்டியை தஞ்சமடைந்தார் லேக். அப்போதே தன் சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்களை பார்ப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அதுவும் போக கிடைத்த நேரத்தில் தவளை, பல்லி ஆகிய உயிரிகளை வேதிப்பொருட்கள் கொண்ட கலவையில் முக்கி கொன்று அதனைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார். 1965ஆம்ஆண்டு அமெரிக்காவின் கடற்படையில் பணிக்குச் சேர்ந்தார். ராடார் கருவியை இயக்கும் ஆப