இடுகைகள்

மருந்து தடை 2018 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் எந்த மருந்துகளுக்கு தடை தெரியுமா?

படம்
மருந்துகளுக்கு தடை! Amoxicillin+Dicloxacillin ஆன்டிபயாடிக் மருந்துகளாக இவையிரண்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்விளைவுகளை தர இந்திய அரசு தடைசெய்துள்ளது. அமாக்ஸிசிலின்- டைகிளாக்சிலின்- லேக்டோபேசில்லஸ் கலந்த மருந்துகளுக்கு அரசு தடைவிதிக்கவில்லை. Nimesulide+ Paracetamol பனிரெண்டு வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்கு இந்த ஊசி மருந்தை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இம்மருந்து கல்லீரை பாதிக்கும் பக்கவிளைவு கொண்டது. Clobetasol propionate + Ofloxain+ Ornidazole+Terbinafine பூஞ்சை, பாக்டீரியாக்களுக்கு எதிரான மருந்து. ஆனால் அதிக ஆற்றல் வாய்ந்த ஸ்டெராய்டாக செயல்பட்டதால் பின்விளைவுகளின் வேகம் அதிகம். Cefuroxime + Linezolid காசநோய்க்கு ஆன்டிபயாடிக்காக மிக அரிதாக அளிக்கப்படுவது லைன்ஸோலிட். கடுமையான பாக்டீரியா தொற்றுகளுக்கு மருத்துவரின் பரிந்துரையை ஒட்டி வழங்கப்படும் மருந்து. சிறுநீரகத்தில் ஏற்படும் பாக்டீரியத் தொற்றுக்கு செஃப்யூரோசைம் பயன்படுகிறது. Azithromycin + Levofloxacin அஸித்ரோமைசின்( Zithromax, Azithrocin ) வயிற்றுப்போக்கு, தொண்டைவலி, நிமோன