இந்தியாவில் எந்த மருந்துகளுக்கு தடை தெரியுமா?


மருந்துகளுக்கு தடை!
Image result for Amoxicillin+Dicloxacillin


Amoxicillin+Dicloxacillin

ஆன்டிபயாடிக் மருந்துகளாக இவையிரண்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்விளைவுகளை தர இந்திய அரசு தடைசெய்துள்ளது. அமாக்ஸிசிலின்- டைகிளாக்சிலின்- லேக்டோபேசில்லஸ் கலந்த மருந்துகளுக்கு அரசு தடைவிதிக்கவில்லை.
Nimesulide+ Paracetamol

பனிரெண்டு வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்கு இந்த ஊசி மருந்தை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இம்மருந்து கல்லீரை பாதிக்கும் பக்கவிளைவு கொண்டது.

Clobetasol propionate + Ofloxain+ Ornidazole+Terbinafine

பூஞ்சை, பாக்டீரியாக்களுக்கு எதிரான மருந்து. ஆனால் அதிக ஆற்றல் வாய்ந்த ஸ்டெராய்டாக செயல்பட்டதால் பின்விளைவுகளின் வேகம் அதிகம்.

Cefuroxime + Linezolid

காசநோய்க்கு ஆன்டிபயாடிக்காக மிக அரிதாக அளிக்கப்படுவது லைன்ஸோலிட். கடுமையான பாக்டீரியா தொற்றுகளுக்கு மருத்துவரின் பரிந்துரையை ஒட்டி வழங்கப்படும் மருந்து. சிறுநீரகத்தில் ஏற்படும் பாக்டீரியத் தொற்றுக்கு செஃப்யூரோசைம் பயன்படுகிறது.

Azithromycin + Levofloxacin

அஸித்ரோமைசின்(Zithromax, Azithrocin) வயிற்றுப்போக்கு, தொண்டைவலி, நிமோனியா என பல்வேறு பாக்டீரியா தொற்றுகளை சரியாக்க உதவுகிறது. இரைப்பை அழற்சி, நிமோனியா பிரச்னைகளுக்கு லெவோஃப்ளோஸாசின் உதவுகிறது.  



 

பிரபலமான இடுகைகள்