நம் குரலை ஸ்பீக்கர்களில் கேட்கும்போது நமக்கே பீதியாவது ஏன்?
ஏன்?எதற்கு?எப்படி? –
நமது குரலை ஸ்பீக்கர்களில் கேட்கும்போது
அதனை வெறுப்பது ஏன்?
எந்த உடல் உறுப்புகளுக்கும் பிறருடையதோ,
அல்லது செயற்கையாக கூட தயாரித்து பொருத்திக்கொள்ளமுடியும். ஆனால் குரலுக்கு மட்டும்
ஆப்ஷனே கிடையாது. அவரவருக்கு என்ன வாய்க்கிறதோ அதுவேதான். அப்படிப்பட்ட குரலை பிறரோடு
பேசும்போது சகிக்கும் நாம், ஸ்பீக்கர்களில் ரெக்கார்ட் செய்தபின் கேட்டால் கண்றாவியாக
தோன்றும். அதற்குகாரணம், உச்சஸ்தாயியில் ஒலிக்கும் குரலின் தன்மையே. கேட்கும் குரல்
நமது ஆளுமையின் வெளிப்பாடு என பிறர் நினைப்பார்கள் என்பதால் பொது இடங்களில் மைக் மோகனாக
பாடும்போதும் பேசும்போதும் பலருக்கும் பயப்பந்து வயிற்றில் உருள தடுமாறுகிறார்கள்.