குழந்தைகளை கொல்லும் அதிகாரப்போர்!



Image result for starvation



பசியால் இறக்கும் குழந்தைகள்!


ஏமனின் ஹஜ்ஜா நகரில் குழந்தைகள் எலும்பும் தோலுமாக பெற்றோர்களின் கண்முன்னே பசியால் துடித்து இறந்து வருகின்றனர். காரணம், சவுதி அரேபியாவின் இரக்கமற்ற போர்வெறிதான்.

உள்நாட்டு சந்தையில் உள்ள காய்கறிகளை, ரொட்டிகூட வாங்கமுடியாத வறுமையில் ஏமன் நாட்டினர் தவித்து வருகின்றனர். அலி அல் ஹஜாலியின் கண்முன்னே அவரது மூன்றுவயதுமகன் இறந்ததும் அப்படித்தான். ஹூதி புரட்சியாளர்கள் வடக்கு ஏமனைக் கட்டுபாட்டில் வைத்துள்ளனர். 

அவர்களை எதிர்த்து நடக்கும் போரில் வீசப்படும் ஏவுகணையால் பலநூறு மக்கள் பலியாகிவருகின்றனர். உணவுக்கு அரசை நம்பியுள்ள எட்டு மில்லியன் ஏமன் நாட்டு மக்களின் எண்ணிக்கை விரைவில் 14 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 4 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர். 2 மில்லியன் டாலர்களை ஏமன் மத்திய வங்கிக்கு அரபு அமீரகத்துடன் இணைந்து அளித்துள்ளதாக சவுதி கூறினாலும் சன்னி- ஷியா இனவெறுப்புக்கு ஏதுமறியாத மக்கள் பலியாகவேண்டுமா என்ற கேள்விக்கு சவுதி அரேபியா என்ன பதில் சொல்லப்போகிறது?