மோடிக்கு அமைதிப்பரிசு எதற்கு?




Image result for modi caricature




பார்வையற்றவர்களை அரவணைக்கும் தெலங்கானா! –

தெலங்கானாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு செய்யும் பல்வேறு வசதிகள் இந்தியளவில் கவனம் ஈர்த்துள்ளன.
பார்வையற்றோர்களுக்கான EPIC எனும் ப்ரெய்லி புகைப்பட அட்டையை தெலங்கானா அரசு தயாரித்து அசத்தியுள்ளது. “இந்தியாவிலேயே தெலங்கானா அரசு முதல்முறையாக பார்வையற்றோர்களுக்கு ப்ரெய்லி புகைப்பட அட்டைகளை தயாரித்து வழங்கவிருக்கிறது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகனப்போக்குவரத்து வசதியையும் அரசு அளிக்கவிருக்கிறது” என உற்சாகமாக பேசுகிறார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனரான பி. சைலஜா. தெலங்கானா மாநிலத்தில் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளை அரசு அடையாளம் கண்டு வாக்களிக்கும் பூத்தில் அவர்களுக்கு வீல்சேர் உள்ளிட்ட வசதிகளை வழங்க ஆயத்தமாகியுள்ளது. டிசம்பர் 7 அன்று சட்டமன்றதேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


2

39 லட்சம் அலட்சிய மரணங்கள்! 


இந்தியாவில் விபத்துகளால் நேர்ந்த 39 லட்சம் மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
2004-2015 காலகட்டத்தில் விபத்துகளுக்கு பலியான 39 லட்சம் பேர்களில் ரயில் விபத்துகளில் மட்டும் தினசரி ஆறுபேர் என 26 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். சாலைவிதிகளை கடைபிடிக்காத அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்பு பனிரெண்டு ஆண்டுகளில் 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது. 2004 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால் உயிரிழப்பின் அளவு 64% உயர்ந்துள்ளது. ஒழுங்கற்ற சாலைகள், அலட்சியமான விதிமீறல்கள் ஆகியவற்றோடு வெள்ளம், தீவிபத்துகள், மின்சார தாக்குதல்கள் ஆகியவற்றாலும் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.  


3

மோடிக்கு அமைதி பரிசு! –

அண்மையில் ஐ.நா சபையின் சாம்பியன் ஆஃப் தி எர்த் விருதினை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வென்ற இந்திய பிரதமர் மோடி, சியோல் அமைதிப் பரிசையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

ஏழை, பணக்காரர் இடைவெளியை குறைக்கும் விதமாக பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்திய மோடியின் துணிச்சலை பாராட்டி தென்கொரியாவின் சியோல் அமைதி கமிட்டி, அவருக்கு அமைதி விருது வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விருதைப் பெறும் பதினான்காவது நபர் மோடி.
பனிரெண்டு பேர்களைக் கொண்ட அமைதிப்பரிசு கமிட்டி இவ்விருதுக்காக உலகளவில் பல்துறைகளை சார்ந்த நூறுபேர்களை பரிசீலித்து இறுதியில் இந்தியப்பிரதமர் மோடியை ஒருமித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

தென்கொரியாவில் சியோலில் 24 ஆவது ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தபின்னர் 1990 ஆம் ஆண்டு அமைதிப்பரிசு உருவாக்கப்பட்டது. அமைதிப்பரிசை இதற்கு  முன்னர் ஐ.நா சபை செயலர்களாக இருந்த கோபி அன்னான், பான்கி மூன், அமெரிக்க செயலரான பிராட் ஷூல்ஸ், டெனிஸ் முக்வேகே ஆகியோர் பெற்றுள்ளனர். 



பிரபலமான இடுகைகள்