உண்ணாவிரதம் உடல்நலனை காக்குமா?
ஏன்?எதற்கு?எப்படி? –
உண்ணாவிரதம் இருப்பது உடல்நலத்திற்கு
நல்லதா?
அகோர பசி உடலில் அடங்குவதற்கு
காரணம், உணவுப்பொருட்களிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸ். உண்ணாவிரதம் இருக்கும்போது
உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு உடலின் பசியை குறைத்து உடல் இயங்குவதற்கு
உதவுகிறது.
உண்ணாவிரதம் இருக்கும்போது பசி
மெல்லியகோடாக தோன்றக்காரணம், கொழுப்பில் இருந்து கிடைக்கும் கீட்டோன் என்ற பொருள்.
எடைக்குறைப்புக்கு உண்ணாவிரதம் உதவும் என கூறினாலும் நான்கு நாட்கள் முழுமையாக மாவுச்சத்துப்பொருட்களே
சாப்பிடாமல் இருந்தால் அது சாத்தியம். இதனை மருத்துவரின் பரிந்துரைப்படி ஏற்பதே நல்லது.
உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதும், மார்பக புற்றுநோயை ஊக்குவிக்கும்
காரணிகள் குறைவதாகவும் மருத்துவர்கள் டிம் ஸ்பெக்டர், மிட்செல் ஹார்வி ஆகியோர் ஆய்வுகளின்
அடிப்படையில் தகவல் தெரிவிக்கின்றனர்.