பப்ஜி விளையாட்டு!
PUBG காய்ச்சல்!
தென்கொரியாவைச் சேர்ந்த ப்ளூஹோல்
நிறுவனத்தின் தயாரிப்பான பப்ஜி, காயின் மாஸ்டர்,
டீன் பட்டி உள்ளிட்ட கேம்களை பின்தள்ளி கூகுள் பிளேஸ்டோரில் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த மார்ச்சில் ஸ்மார்ட்போனில் விளையாடும்படி உருவான பப்ஜியை நூறு மில்லியன் பேர்
தரவிறக்கி விளையாடிவருகின்றனர். இதில் சீனநிறுவனமான டென்சென்ட்டின் முதலீடும் உண்டு.
உலகளவில் மல்ட்டி பிளேயர்கள் இணைந்து
விளையாடும் பப்ஜி, இளைஞர்களை கிடுகிடுவென ஈர்த்ததற்கு ஆக்சன் விளையாட்டின் திகட்டாத
சாகச த்ரில்தான் காரணம். கூகுளின் டாப் லிஸ்டில் மட்டுமல்ல, ஆப்பிள் ஸ்டோரிலும் சக்கைபோடு
போடுவது பப்ஜிதான். பப்ஜி விளையாடுவதற்கான வணிக மால்களில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டு
திருவிழாக்களும், பரிசுகளும் இளைஞர்களை ஈர்த்து வருகிறது. ரூ.50 லட்சம் வரையிலான பரிசுத்தொகை
அறிவிக்கப்படுவதும் அரைமணிநேரத்தில் ஒரு லெவலைத் தாண்டுவதும் பப்ஜி ஸ்பெஷல்.