உலகப்போரில் கருப்பின வீரர்களுக்கு நடந்த அநீதி!





Image result for ww1 black people



மறக்கப்பட்ட கருப்பின வீரர்கள்!

முதலாம் உலகப்போரின் 100 வது ஆண்டு. அமெரிக்க ஜெனரல் ஜான் பெர்ஸிங், 1,500 அமெரிக்க வீரர்களை பிரான்சில் படையில் இணைந்து போரிட்டதாக பெருமைப்படுகிறார். ஆனால் இப்போரில் பங்கேற்ற 3 லட்சத்து ,80 ஆயிரம் ஆப்பிரிக்க- அமெரிக்க வீரர்களின் பங்களிப்பை வெற்றிபெற்ற பின்பு யாரும் பேசவேயில்லை.
“அமெரிக்க ராணுவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நிறவேற்றுமை இதற்கு காரணம். கருப்பின வீரர்களின் நினைவுகளை மக்களிடமிருந்து அழிக்கவே ராணுவம் முயற்சித்து வருகிறது” என்கிறார் அமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலையில் ஆப்பிரிக்க-அமெரிக்க வரலாற்று பேராசிரியரான சாட் வில்லியம்ஸ்.

“உலகம் ஜனநாயகத்திற்கேற்றதாக இருப்பது அவசியம்” என்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் 1917 ஆம் ஆண்டு போர் அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவில் இனவெறுப்புக்குள்ளான கருப்பின வீரர்கள் தம் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையில் ராணுவத்தில் சேர்ந்தனர். ஆனால் முதலில் அவர்களை ராணுவம் பணியில் சேர்க்க மறுத்துவிட்டது. பின்னர் அமெரிக்க அரசின் சட்டம் மூலமாக வீரர்கள் சேர்க்கப்பட்டனர். சமையல் சுகாதாரப் பணிகளை தந்தாலும் சில பிரிவுகளுக்கு ராணுவப்பணி தரப்பட்டது. இதற்கான உரிமைகளை கேட்ட கருப்பின வீரர்கள் 1919 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது.



பிரபலமான இடுகைகள்