ஐரோப்பிய ராணுவம் சாத்தியமான கனவா?






Related image



ஐரோப்பிய ராணுவம் சாத்தியமா?

ராணுவ உதவிகளுக்கு ட்ரம்பின் அமெரிக்காவை சார்ந்திருப்பது பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஆர்மி தேவை என்ற கோரிக்கையை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எழுப்பினாலும் நேட்டோ படைக்கு வேலையென்ன என இங்கிலாந்து இந்த யோசனையை மறுத்து வருகிறது.

நகைமுரணாக ஐரோப்பிய ஆர்மி திட்டத்தை 1950 ஆம் ஆண்டு தடுத்ததே பிரான்ஸ் அரசு என்பதை அறிவீர்களா? ஐரோப்பிய ஆர்மி நிறைவேற வாய்ப்பு இப்போது கூடிவருவதற்கு பிரெக்ஸிட்டும், ட்ரம்ப் நேட்டோவிலிருந்து விலக முயற்சிப்பதும் முக்கியமான காரணம். இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதால் அதன் ராணுவ பலம் பெருமளவு குறையும் அபாயம் உள்ளது. பிரான்ஸ்,ஜெர்மனி என இரண்டு நாடுகளும் ஆயுத உற்பத்தி, தளவாடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்று பெரும் சக்தி வாய்ந்தவை கிடையாது. அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பாக இருக்க ரோமானியா, செக், டச்சு ஆகிய ராணுவங்களை இணைத்து ஐரோப்பிய ராணுவம் உருவாவது அவசியம். போருக்கு இல்லையெனினும் தங்களை பாதுகாக்கவாவது ஐரோப்பிய ராணுவம் அவசியம்.



பிரபலமான இடுகைகள்