முதல் உலகப்போரை தூண்டிய இளைஞர்!
உலகப்போரை தூண்டிய இளைஞர் இவர்தான்!
1914 ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று
செர்பிய தேசியவாதி இளைஞரான கவ்ரில் பிரின்சிபோ, ஆஸ்திரிய –- ஹங்கேரி மன்னரை நோக்கி
சுட்ட இரண்டு தோட்டாக்கள், உலகெங்கும் 40 மில்லியன் மக்கள் உயிரிழக்க(ww1) காரணமானது.
1894
ஆம் ஆண்டு போஸ்னியாவிலுள்ள ஆப்ஜாஸ் என்ற நகரில் பிறந்தார் காவ்ரில் பிரின்சிபோ. “நான்
போகுமிடங்களில் என்னை பார்ப்பவர்கள் பலவீனமானவன் என சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தனர்.
ஆனா்ல் நான் பலவீனமானவன் அல்ல” என்று பேசியவர் தம் விவசாய பெற்றோருக்கு தெரியாமல் புரட்சி
நண்பர்களிடம் பேசிவந்தார்.
பின்னர் கருப்பு கரங்கள்(1911) என்ற அமைப்பில் இணைந்தபோது,
செர்பியா சுதந்திரநாடாக தன்னாட்சி அதிகாரத்தோடு இயங்கவேண்டுமென என்ற இயக்கத்தின் கொள்கையை
காவ்ரில் ஆதரித்து செயல்பட்டார். அப்போது ஆஸ்திரியாவின் கை ஓங்குவதை கருப்பு கரங்கள்
தீவிரமாக எதிர்த்தது. பயிற்சி பெற்ற ஆட்களை அரசின் ராணுவம் உள்ளிட்ட அமைப்புகளில் ஊடுருவச்செய்தது.
திறந்தவெளி காரில் வந்த ஆஸ்திரி மன்னர் பிரான்ஸ் ஃபெர்டினான்ட் அவரது மனைவி சோபி இருவருக்கும்
ஆளுக்கொரு தோட்டாவை நெஞ்சில் பாய்ச்சினார் கவ்ரில். 20 ஆண்டு சிறைதண்டனை கிடைத்தாலும்
காசநோயால் 4 ஆண்டு சிறைவாசத்தில் காலமானார் கவ்ரில் பிரின்சிபோ.