பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா?-ஏன்?


பெண்களுக்கு ஆயுசு அதிகம்!


Image result for women immune system





நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல்படி, உலகளவில் பெண்களுக்கு 5- 7 ஆண்டுகள் ஆயுள் அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கியகாரணம், ஆண்களின் வன்முறை மனோபாவம், கொலை, தற்கொலை, விபத்து, இதயநோய்கள்தான். முக்கியமான காரணம், மரபணுக்கள்தான்.
ஆண்களின் செல்களிலுள்ள மைட்டோகாண்ட்ரியாவின் வேகம் அதிகம் என்பதால் முதிர்ச்சியடையும் தன்மை ஓப்பீட்டளவில் பெண்களைவிட அதிகம்.
மேலும் செக்ஸ் குரோசோம்களில் வித்தியாசம் உண்டு. ஆண்களின் எக்ஸ், நோயால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்ககாரணம் அதில் ஒரேயொரு எக்ஸ் குரோமோசோம் இருப்பதுதான். பெண்களில் இரண்டு எக்ஸ் குரோசோம்கள் உண்டு.
பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு இதயநோய்கள் வரும். ஆனால் ஆண்களுக்கு இதயநோய்கள் முன்னரே தாக்க, டெஸ்ட்ரோஸ்டோன் ஹார்மோனே காரணம். ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியும்(லிம்போசைட்ஸ்) பெண்களின் உடலை விட வேகமாக முதிர்ச்சியடைந்து இறப்பதால் ஆண்களின் வாழ்நாள் பாதிக்கப்படுகிறது. சிவப்பணுக்களும் ஆண்களுக்கு இம்முறையில் முதிர்ச்சியடைகிறது. பொதுவாக ஆண்களுக்கு வாழ்நாள் குறைய காரணம், ரிஸ்க்குகளை ரஸ்காக எடுத்து சொதப்ப சமாதிக்கு சென்றுசேர்வதுதான். எனவே கால்குலேட்டட் ரிஸ்க் எடுங்க ப்ரோ!  




பிரபலமான இடுகைகள்