லினக்ஸில் எது பெஸ்ட்? - கட்டற்ற அறிவு (அத்.10)


கட்டற்ற அறிவு! – - வின்சென்ட் காபோ
லினக்ஸில் எது பெஸ்ட்?

இன்டெல் புதிய சிப்களின் செயல்பாட்டிற்கான சோதனையை லினக்ஸில் நேரடியாக சோதித்து மேம்படுத்த உதவுவது லினக்ஸின் தன்னிகரற்ற சாதனை.

லினக்ஸை இன்ஸ்டால் செய்யும்போது அதில் கெர்னல், ஜிஎன்யு மென்பொருட்கள், பொதுவான வேர்ட்பேட் போன்றவை, நிறுவனத்தின் ஆதரவு, அப்டேட் உள்ளதா என கவனிப்பது அவசியம். விண்டோஸ் மற்றும ்மேக் சிஸ்டங்களில் தனியாக மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யும் அவதி உண்டு. லினக்ஸில் அனைத்தும் காம்போதான். இன்ஸ்டால் செய்யும்போதே தேவையான மென்பொருட்கள் கம்ப்யூட்டருக்குள் வந்துவிடும்.

ஐபிஎம் அண்மையில் ரெட்ஹேட் நிறுவனத்தை 34 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. ஐபிஎம் தொடங்கியதிலிருந்தே லினக்ஸை ஆதரித்து வந்த கணினி நிறுவனம். மேலும் மைக்ரோசாஃப்ட் தன்னுடைய அஸூர் எனும் மேக கணிய கட்டமைப்புக்கு லினக்ஸையே பயன்படுத்தியுள்ளது நம்பிக்கை தருகிற முயற்சி.

ரெட்ஹேட் நிறுவனத்திற்கு இந்தியாவில் ரூ.444 கோடி(2017) வருமானம் கிடைக்கிறது. இந்தியாவிலுள்ள பிஎஸ்இ, என்எஸ்இ, வருமானவரித்துறை, ஓய்வூதியத்துறை, இந்தியரயில்வே ஆகிய அரசு துறைகள் ரெட்ஹேட் லின்க்ஸ் ஓஎஸ்ஸை பயன்படுத்தி வருகின்றன. உலகளவில் இந்தியாவில் கிடைக்கும் வருமானம் என்பது 3 சதவிகிதம்தான். 

பிற ஓஎஸ்களை பயன்படுத்துவதை விட 80% கணினிக்கான செலவுகள் குறைந்துள்ளது லினக்ஸை அரசு அமைப்புகள் பயன்படுத்துவதற்கான முக்கியமான காரணம். 2016 ஆம் ஆண்டு பிஎஸ்இயில் லினக்ஸ் பயன்படுத்த தொடங்கியபோது ரெஸ்பான்ஸ்டைம் பத்து மில்லி செகண்டிலிருந்து 6 மில்லி செகண்டாக குறைந்து முன்பை விட ஆயிரம் மடங்கு வேகமாகியிருக்கிறது நிதிச்சந்தை. இந்த நிறுவனத்தில் மட்டும் 66% பராமரிப்பு செலவுகள் மிச்சமாகியுள்ளன.

Ubuntu Linux/linux Mint

எளிதாக இன்ஸ்டால் செய்யும் லினக்ஸ் ஓஎஸ். இணையத்தில் இலவசமாக கிடைக்கும் என்றாலும் டிவிடி மென்பொருளை தனியாக தரவிறக்கித்தான் இதில் இணைக்கமுடியும். லினக்ஸ் மின்ட் மற்றும் உபுண்டுவை தொடக்க நிலையில் உள்ளவர்கள் முதல் கோடிங் எழுதுபவர்கள், சர்வர் வரை பயன்படுத்தலாம்.

Redhat/Cent os/Fedora

இந்த மூன்றிலும் ரெட்ஹேட் வழங்கும் லினக்ஸ் சிறப்பான ஒன்று. சென்ட் மற்றும் ஃபெடோரா ரெட்ஹெட் இன்ஸ்டாலரை சார்ந்து நிற்கும் பிரச்னை உண்டு. ரெட்ஹேட்டில் லினக்ஸை கட்டணம் செலுத்தி வாங்கினால் உங்களுக்கு நிறைய சலுகைகள் உண்டு.