இடுகைகள்

விநோதம் பிட்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹைவே காம்போஸர்! -என்னாச்சு தெரியுமா?

படம்
பிட்ஸ்! ஆமைக்கு வலை! குவாத்திமாலாவில் ஜாலியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தது கேரி சென் நண்பர்கள் குழு. அப்போது நீரில் பிளாஸ்டிக் பை அசைவதைப் பார்த்து அருகில் சென்றபோது ஆமை பிளாஸ்டிக் பையில் சிக்கி உயிருக்குப் போராடுவதைப் பார்த்தனர். உடனே சைட்டிஷ் உணவாக்கும் நோக்கமின்றி அதனை விடுவித்த கேரிசென்னின் சூழல்நேய வீடியோ இணையத்தில் பாராட்டுக்களோடு பகிரப்பட்டு வருகிறது. ஹைவேயில் பாட்டுக்குப் பாட்டு! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாகச ஓட்டுநர், கார் ஓட்டிச்செல்லும்போது ட்ரம்பெட் வாசித்து சக பயணிகளை பீதியூட்டியுள்ளார். குயின்லாந்தின் எம்1 நெடுஞ்சாலையில் பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் எழுபது கி.மீ வேகத்தில் பாயும் காரில் ஓட்டுநர் ரசித்து ட்ரம்பெட் வாசிப்பது பதிவாகியுள்ளது. சாலைவிபத்துக்கு இதுபோன்ற ஆட்கள்தான் காரணம் என அந்த வீடியோ உலகெங்கும் கண்டனங்களை குவித்து வருகிறது. சோளத்தில் சாதனை! அமெரிக்காவின் இலினாய்ஸ் நூலகத்தில் பல்குத்தும் குச்சியில் 241 உதிர்த்த சோளங்களை மூன்றே நிமிடத்தில் குத்தி தின்று கின்னஸ் சாதனை செய்திருக்கிறார் டேவிட் ரஷ். முன்னரே 83 கின்னஸ் சாதனைகளை செய்த

ஹோட்டலில் புகுந்த கஜா!

படம்
ஹோட்டலில் கஜா! சீனாவின் யுன்னானிலுள்ள ஹோட்டல் ஓனர் சூ ஹாங்வெய், அதிகாலையில் உணவகத்தில் காலை உணவு தயாரிப்பிலிருந்தார். அப்போது அங்கு கொலைப்பசியில் வந்த காட்டு யானை அவரது ஹோட்டலின் ஸ்டோர்ரூமில் புகுந்தது. சோளம், ஆரஞ்சு உள்ளிட்ட பழவகைகளை நிதானமாக 4 மணிநேரம் ஷெட்யூல் போட்டு ருசித்து சாப்பிட்டு விட்டு சென்றது. விடுதி உரிமையாளர் நஷ்டத்தை கஜா புயல் கணக்கில் எழுதலாமா என யோசித்து வருகிறார். தொலைந்த பர்சுக்கு போனஸ்! அமெரிக்காவின் தெற்கு டகோடாவை சேர்ந்த ஹன்டர் ஷமத், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த சகோதரியின் திருமணத்திற்கு சென்றார். பர்ஸை விமானத்தில் தவறவிட்டுவிட்டதை தாமதமாக உணர்ந்து ஷாக் ஆனார் ஹன்டர். ஆனால் சில நாட்களில் ஹன்டரின் வீட்டு முகவரிக்கு அவர் தொலைத்துவிட்டதாக நினைத்த பர்ஸ்,   வந்துவிட்டது. ஹன்டரின் 60 டாலர்களுடன் 40 டாலர்களை போனஸாக சேர்த்து கடிதத்துடன் அனுப்பியிருந்தார் டாட் என்ற மர்ம மனிதர். கிளாசிக் ரயில்! 1932 ஆம் ஆண்டு மக்கள் பயணித்த ரயிலை நியூயார்க்கின் மன்ஹாட்டனில் அரசு இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களுக்கு பயண சேவை அ

ஐபோனை உடைக்கும் தேசபக்தி!

படம்
பிட்ஸ்! பப்பி ஐஸ்க்ரீம்! தைவானின் காவோஷியங் நகரிலுள்ள ஜே.சி.கோ ஆர்ட் கிச்சன் கஃபேவில்,   நாய்க்குட்டிகளைப் போன்ற அச்சு அசல் வடிவில் ஐஸ்க்ரீம்களை டிசைன் செய்து வாடிக்கையாளர்களை திகைக்க வைத்துள்ளனர். பல்வேறு ப்ளேவர்களில் லேப்ரடார், பக் வகை நாய்களின் உருவத்தில் செய்து தரும் ஐஸ்க்ரீம்களை சாப்பிடுவதா, ரசிப்பதா என வாடிக்கையாளர்கள் மலைத்துபோயுள்ளனர்.  சதுரங்க ஆசை! அமெரிக்காவின் மிசௌரியைச் சேர்ந்த உலக செஸ் செஸ் சங்கத்தினர், 20 அடி உயரத்தில் ராஜா செஸ் காயை ஆப்பிரிக்க மரத்தில்(sapele mahogany) உருவாக்கி கின்னஸ் செய்துள்ளனர். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டில் 14 அடியில் செஸ் காய்களை செயின்ட் லூயிஸ் அமைப்பினர் உருவாக்கியிருந்தனர். “செஸ் அமெரிக்காவில் தாக்கம் ஏற்படுத்திய விளையாட்டு என்பதை இப்படைப்பு வலியுறுத்தும்” என்கிறார் சங்க ஒருங்கிணைப்பாளரான பிரையன் ஃப்ளவர்ஸ். கண்ணுக்குள் லென்ஸ்! இங்கிலாந்தைச்சேர்ந்த பெண்மணி அங்குள்ள மருத்துவமனையில் கண்களில் வலி என அட்மிட் ஆனார். இடதுகண்ணின் இரப்பையில் வலி என்றவரை ஸ்கேன் செய்தபோது லென்ஸ் உள்ளே இருப்பது உறுதியாக, அறுவை சிகி

முதலைக்கடி வாங்கிய பயிற்சியாளர்!

படம்
பிட்ஸ் ! சிக்னலில் வேலைவாய்ப்பு ! அமெரிக்காவில் சிலிக்கன் வேலிக்காரரான டேவிட் கஸாரெஸ் " வீடற்றவன் ; பசியோடு இருக்கிறேன் . என்னுடைய ரெஸ்யூமை கொஞ்சம் பாருங்கள் " என போர்டுடன் ட்ராஃபிக் சிக்னலில் வேலை தேடி நின்றார் . உடனே அவரது கோரிக்கை ட்விட்டரில் வைரலாக , தற்போது கூகுள் , நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளன . வேலை உங்கள் சாய்ஸ் ! ஜஸ்ட் முதலைக்கடி ! தாய்லாந்தின் சியாங்ராயிலுள்ள புகழ்பெற்ற வனவிலங்கு பூங்காவான போக்கதாராவில் முதலை சாகசங்கள் வெகு பிரபலம் . அன்றும் அப்படித்தான் பயிற்சியாளர் குன் புசாவிட் முதலையின் வாயில் கைவைத்து சாகசம் செய்தார் . அப்போது திடீரென முதலை வாயை லாக் செய்ய புசாவிட்டின் கை உள்ளே மாட்டிக்கொண்டது . ஆயிரக்கணக்கான ஆடியன்ஸ் சூழ்ந்திருக்க நடந்த பெரும்போராட்டத்தில் புசாவிட்டின் கையோடு அவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் . கோபம் வர்ற மாதிரி வீரச்செயல் எதற்கு ? தமிழ்பேசும் சீனக்கண்மணி ! சீனப்பெருஞ்சுவரை சீனப்பெண் தமிழில் அறிமுகம் செய்து பேசும் வீடியோதான் இன்று இணையத்தில் வைர