ஹோட்டலில் புகுந்த கஜா!





Image result for brahmanandam


ஹோட்டலில் கஜா!

சீனாவின் யுன்னானிலுள்ள ஹோட்டல் ஓனர் சூ ஹாங்வெய், அதிகாலையில் உணவகத்தில் காலை உணவு தயாரிப்பிலிருந்தார். அப்போது அங்கு கொலைப்பசியில் வந்த காட்டு யானை அவரது ஹோட்டலின் ஸ்டோர்ரூமில் புகுந்தது. சோளம், ஆரஞ்சு உள்ளிட்ட பழவகைகளை நிதானமாக 4 மணிநேரம் ஷெட்யூல் போட்டு ருசித்து சாப்பிட்டு விட்டு சென்றது. விடுதி உரிமையாளர் நஷ்டத்தை கஜா புயல் கணக்கில் எழுதலாமா என யோசித்து வருகிறார்.

தொலைந்த பர்சுக்கு போனஸ்!

அமெரிக்காவின் தெற்கு டகோடாவை சேர்ந்த ஹன்டர் ஷமத், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த சகோதரியின் திருமணத்திற்கு சென்றார். பர்ஸை விமானத்தில் தவறவிட்டுவிட்டதை தாமதமாக உணர்ந்து ஷாக் ஆனார் ஹன்டர். ஆனால் சில நாட்களில் ஹன்டரின் வீட்டு முகவரிக்கு அவர் தொலைத்துவிட்டதாக நினைத்த பர்ஸ்,  வந்துவிட்டது. ஹன்டரின் 60 டாலர்களுடன் 40 டாலர்களை போனஸாக சேர்த்து கடிதத்துடன் அனுப்பியிருந்தார் டாட் என்ற மர்ம மனிதர்.
கிளாசிக் ரயில்!

1932 ஆம் ஆண்டு மக்கள் பயணித்த ரயிலை நியூயார்க்கின் மன்ஹாட்டனில் அரசு இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களுக்கு பயண சேவை அளிக்கவுள்ள ரயில் 1932-77 வரை புழக்கத்திலிருந்தவை. “ரயிலின் விளக்குகள், விளம்பரங்கள், சீட்டுகள் என கடந்த காலத்தை நினைவுகூரவைக்கின்றன” என மகிழ்கின்றனர் ரயிலில் பயணித்த சீனியர் குடிமக்கள்.

சுடச்சுட திருட்டு!

அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் நடந்த திருட்டு இணையத்தில் ஹாட் வைரல். பார்க்கிங்கில் நின்ற ட்ரக் ஒன்றிலிருந்து பெட்ரோலை சூதானமாக வாயில் உறிஞ்சி திருட முயன்றார் அதிமேதாவி திருடர் ஒருவர். ஆனால் எசகுபிசகான தவறுகளால் பெட்ரோல் பேன்ட்டில் பட்டு தீப்பிடிக்க திருடர் நெருப்புடன் உயிர்பிழைக்க பாய்ந்து ஓடும் சிசிடிவி வீடியோவை போர்ட்லேண்ட் தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ளது. பேண்டேஜூடன் எஸ்கேப்பான பெட்ரோல் திருடரை போலீஸ் தேடி வருகிறது.    








பிரபலமான இடுகைகள்