இடுகைகள்

அச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவை ஆராய்ச்சியாளரும், அவரது நம்பிக்கைக்குரிய குருதேவரும்! - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
 மயிலாப்பூர் டைம்ஸ்  ஆராய்ச்சியாளரின் அவதி... நான் வேலை செய்யும் இதழில் எனது பணிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இதுவரை எதிர்கொள்ளாத சிக்கல்களை அந்த மாதவப் பெருமாள் எனக்கு கொடுத்து வருகிறார். அவர் நல்லவை, அல்லவை என எது கொடுத்தாலும் மறுக்கவா முடியும். அப்படித்தான், காலை பதினொரு மணிக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆராய்ச்சியாளர் பற்றி தவறாக எழுதியிருக்கிறீர்கள்.  பெயர் தவறு, தவறாக அவரை காட்டியிருக்கிறீர்கள் என ஒருவர் கொச்சையான தமிழில் பேசினார். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், அவர் கூறும் கோவை ஆராய்ச்சியாளர் ****************** பற்றி இரண்டே பத்திகள்தான் எழுதப்பட்டன. அதுவும் அவர் யார், என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பது மட்டுமே.  போனில் பேசிய பிரகஸ்பதி, நேபாள நாட்டு குகை ஆராய்ச்சியாளர் பற்றிய செய்தியை எதற்கு பிரசுரம் செய்தீர்கள்? டெய்லி புஷ்பம் எல்லோருடைய வீட்டுக்கும் வருகிறது. தவறாகிவிடுமே என நான் செய்த குற்றங்களின் பட்டியலை எக்ஸ்டென்ஷன் செய்துகொண்டே போனார்.  ஸாரி சார் இனி அவர் பற்றி எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கு சாரி என சொல்லி அழைப்பை துண்டித்தேன்.  இதற்குப் பிற

புதிய எழுத்தாளர்களை வரவேற்று வாய்ப்பளிக்கும் சுயபதிப்பு வலைத்தளங்கள்! - இங்கிட், வாட்பேட், கிரிட்டிக் சர்க்கிள், பிரதிலிபி

படம்
            இலக்கிய தளத்தை சுயபதிப்பு வலைத்தளங்கள் மாற்றியமைத்துள்ளனவா ?   இன்று ஒருவருக்கு எழுதும் ஆர்வமும் வேக மும் இருந்தால் போதும் . அவர் இலக்கிய சன்னிதானங்களிடம் ஆசி பெற்று நூலை வெளியிடவேண்டிய அவசியம் இல்லை . ஏராளமான இணையத்தளங்கள் இதற்கெனவே உருவாகியுள்ளன . பல்வேறு மொழிகளிலும் எழுதும் ஆ்ர்வம் கொண்டவர்கள் இதில் பங்கேற்று எழுதி வருகின்றனர் . நன்றாக எழுதும் திறன் கொண்டவர்களின் நூல்களை புகழ்பெற்ற பதிப்பகங்கள் வாங்கி பதிப்பித்து வருகின்றன . இதற்கு வலைத்தளங்களே களம் அமைத்துக் கொடுக்கின்றன . அமெரிக்க எழுத்தாளர் அன்னா டாட் இப்படித்தான் எழுத தொடங்கினார் . ஆப்டர் என்ற நாவலை தொடராக வாட் பேட் தளத்தில் எழுத தொடங்கினார் . இந்த நாவல் ஒன் டைரக்ஷன் இசைக்குழுவை அடியொற்றியது . இந்த தொடர் வாசகர்களிடையே பெரும் புகழ்பெற்று 1.5 பில்லியன் வாசகர்களின் பார்வையைப் பெற்றது . பிறகு சைமன் ஸ்சஸ்டர் பதிப்பகத்தின் மூலமாக அச்சுப்பிரதியாகி 11 மில்லியன் பிரதிகளும் விற்றுள்ளது . இணையம் இன்று அனைத்து இடங்களிலும் உள்ள மக்களை ஒன்றாக இணைத்துள்ளது . அவர்களின் வாசிப்பு பழக்கமும் முன்னேறி இணையத

காணாமல் போகும் அச்சகங்கள்! - திருநெல்வேலி, கோவை, மதுரையில் தள்ளாடும் பழமையான அச்சகங்கள்

படம்
            கணினி வந்தபிறகு டிஜிட்டல்ரீதியான போஸ்டர்கள் , பேனர்கள் என்று தொடங்கி வெற்றிகரமாக நடந்துவருகின்றன . இன்னொருபுறம் இதன் விளைவாக எந்திர அச்சகங்கள் அதிக வாய்புப்புகளின்றி மெல்ல மூடப்படும் நிலையில் உள்ளன . அவற்றில் சில அச்சகங்களைப் பார்ப்போம் . ஶ்ரீ ரத்னம் பிரஸ் , திருநெல்வேலி ஜெயபால் என்பவர் தற்போது இதனை நடத்தி வருகிறார் . இவரது தந்தை ரத்னம் மேலப்பாயத்தில் பிரஸ்ஸில் பணிபுரிந்துவிட்டு தனியாக அச்சகத்தை தொடங்கியுள்ளார் . முதலில் நிறைய ஆட்கள் வேலை செய்து வந்தனர் . தற்போது ஒருவர் மட்டுமே இருக்கிறார் . நகைக்கடைகள் , காபி கடைகளிலிருந்து கிடைக்கும் ஆர்டர்களை செய்து கொடுத்து வருகின்றனர் . பல்லாண்டுகளாக சோறு போட்ட தொழில் என்பதால் , ஜெயபாலுக்கு இதனை விட மனமில்லை . ஆனால் வேலைகளே இல்லாத நிலையில் எத்தனை ஆண்டுகாலம் இப்படியே நடத்த முடியும் என்பதுதான் அவர் முகத்தில் தொக்கி நிற்கும் கேள்வி . நியூ சரவணா புக் பைண்டிங் , கோவை . மேட் இன் இந்தியா பொருட்களை பயன்படுத்துவோம் என பலரும் ஊக்கம் கொண்டிருந்தபோது டவுன் ஹாலில் புகழ்பெற்றிருந்த அச்சகம் நியூ சரவணாதான் . காகிதத்தை வெட்டும் மெஷ