இடுகைகள்

இருளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழை மக்களின் நோய்களைத் தீர்க்க உதவும் ஃபெமா! - மோகன் முத்துசாமி, உதயகுமாரின் புதிய முயற்சி

படம்
  சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்தவர் மோகன் முத்துசாமி. இவர், தனது வீட்டருகே வாழ்ந்து வந்த சிறுமி, டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனதைப் பார்த்தார். அச்சிறுமியை மருத்துவம் செய்து காப்பாற்றும் அளவுக்கு அவளது தந்தையிடம் பணமில்லை. இது மோகனை யோசிக்க வைத்தது. பின்னாளில் ஃபெமா எனும் அமைப்பை தனது நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து தொடங்க வைத்தது. ஃபெமா என்ற தன்னார்வ அமைப்பு, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவிகளை, நோய்களை கண்டறியும் ஆய்வகத்தை நடத்தி வருகிறது. இங்கு 30 ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொண்டால் போதும். ஆலோசனை, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்த சோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஃபெமா செயல்படுகிறது.   ஏழை, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கான இலவச மருத்துவ சேவைகளை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. நோய்களைப் பற்றிய விழிப்புணர்வுக்கு தெரு நாடகங்களை நடத்துகிறார்கள். கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் தவிர, படுக்கையில் படுத்துவிட்ட நீண்டகால நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை, மருந்துகளை வழங்குகிறார்கள். வீட்ட

இருளர் குழந்தைகளை படிக்க வைக்க அரும்பாடுபடும் ஆசிரியர்!

படம்
  கிருஷ்ணகிரியிலிருந்து அறுபது கிலோமீட்டர்களைக் கடந்தால் கேளமங்களம் கிராமத்தை அடையலாம்.இங்கு, மலை மீது அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்பது பிள்ளைகள் படிக்கிறார்கள். இங்கு ஆசிரியராக இருந்தவர், அதிக தூரம் பயணித்து வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை சித்திரவதையாக நினைத்து பணிமாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதனால், ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்ட தொடக்கப்பள்ளியை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா? அப்படித்தான் ஓசூரிலிருந்து டி ஜான்சன் என்ற ஆசிரியர் இங்கு மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆசிரியராக பொறுப்பேற்றவர், இன்றுவரை அங்கிருந்து கிளம்புவதற்கான வழியைத் தேடாதது ஆச்சரியம். பள்ளியில் படிக்கும் இருளர் குழந்தைகளுக்கு கல்வியை சிறப்பாக சொல்லித் தரவே முயன்றார். ஜான்சன், ஓசூரைச் சேர்ந்தவர். அங்கிருந்து இரு நாட்களுக்கு சோறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அந்த வாரம் முழுக்க ஊருக்கு செல்லமாட்டார். அங்கேயே தங்கி பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு வகுப்பறையில் தங்கிக் கொள்கிறார். பிறகு, வார விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்.