இடுகைகள்

திவால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாராக்கடன் வசூலிப்பில் பேட் பேங்க் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது!

படம்
        பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வருகிறது . இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி தற்போது பேட் பேங்க் என்ற கான்செப்டை கையில் எடுத்துள்ளது . இத்தனை ஆண்டுகளாக இதனை பலர் கூறியபோதும் மறுத்து வந்த ரிசர்வ் வங்கி தற்போது இதனை செயல்படுத்த என்ன காரணம் என்று பார்ப்போம் . பேட் பேங்க் என்பது வணிக வங்கிகள் வழங்கிய வாராக்கடன்களை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை செய்வதற்காக அமைக்கப்படும் வங்கி . இந்த வங்கி யாருக்கும் கடன்களை வழங்காது . யாரிடமும் டெபாசிட்களைப் பெறாது . கடன்களை குறிப்பிட்ட கால அளவில் திரும்ப பெறும் நடவடிக்கைகளை செய்யக்கூடியது . வணிக வங்கிகளின் இருப்பில் உள்ள வாராக்கடன்களை திரும்பப் பெற்றுத்தர பேட் பேங்க் உதவுகிறது . வாராக்கடன்களை வாங்கிய அளவுக்கு குறைந்தாலும் முடிந்தவரை வேகமாக மீட்க முயல்கிறது . முன்னார் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் , பேட் பேங்க் முறைக்கு தனது நூலில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வாராக்கடன்களை இன்னுமொரு நிறுவனம் அமைத்து அதற்கு மாற்றிவிட்டால் எப்படி நிலைமை முன்னேறும் என்று எழுதியிருந்தார் . அமெரிக