இடுகைகள்

துருக்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாபியா குழுவில் அண்ணன் உளவாளி, காவல்துறையில் தம்பி ஒற்றன்! - இன்சைடர் - துருக்கி தொடர்

படம்
       இன்சைடர் துருக்கி தொடர் 10 +--- மார்டின் ஸ்கார்சி எடுத்த ஆங்கிலப்படத்தை நினைவூட்டுகிற டிவி தொடர். அதாவது, மாபியா தலைவர், தனது வளர்ப்பு மகனை போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை செய்ய வைத்திருப்பார். அதேசமயம், அவரது குழுவில் போலீஸ் அதிகாரி ஒருவன் உளவாளியாக வேலைக்கு சேர்வான். இந்த இருவருமே உளவாளிகள்தான். யார் வெற்றி பெற்றார்கள் என்பதை ஆங்கிலப்படத்தில் காட்டியிருப்பார்கள். அதுவேறு. அதே லைன்தான். ஆனால் இங்கு வேறுபாடு ஒன்றுதான். இப்படி உளவாளிகளாக இருப்பவர்கள் அண்ணன், தம்பியாக இருந்தால் எப்படியிருக்கும்? துருக்கிக்காரர்கள் உணர்ச்சி கொந்தளிப்பு கொண்டவர்கள். தொடரும் கூட சாமானியமாக முடியாது. இழுத்துக்கொண்டே போகும். அதற்கு இந்த தொடரும் விதிவிலக்கல்ல. மெதின் என்பவர், செலால் என்ற கெபாப் கடையை நடத்தி வரும் மாபியா தலைவரிடம் வேலை செய்கிறார். மேற்பார்வைக்கு கெபாப் கடை என்றாலும் உள்ளுக்குள் சட்டவிரோத வேலைகளை செலால் செய்து வருகிறார். இவருக்கான ஆட்களை பிச்சைக்கார குழு மூலம் காஸ்குன் என்பவன் உருவாக்கித் தருகிறான். செலாலிடம் வேலை செய்பவர்கள் அனைவரும் அவரை அப்பா என்றே அழைக்கிறார்கள். அத...

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு சென்ற ஆசிரியர், விடுதலையாகி தனது மகன், மகளைத் தேடி அலையும் கதை!

படம்
   சீக்ரெட் ஆப் பியர்ல்ஸ் துருக்கி டிவி தொடர் யூட்யூப் 36 அத்தியாயங்களை தாண்டிப்போனாலும் நாயகனது பிளாஷ்பேக் கதையை சொல்லாமல் இழு இழுவென இழுத்துவிட்டார்கள். அதெல்லாம் கடந்து தொடர் கொஞ்சமேனும் பார்க்கும்படி இருக்கிறதென்றால் அதற்கு துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வரும் நாயகனின் நடிப்பையே அடையாளமாக சுட்டிக்காட்ட வேண்டும். வயதானவரை நாயகனாக வைத்து டிவி தொடர் எடுத்து அதை எப்படி வெற்றிகரமாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அசீம் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் உடல்மொழி, முக உணர்வு, வசனம் என அத்தனையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அசீம், அவரது மனைவி ஹண்டேவைக் கொன்றதாக குற்றம்சாட்டி சிறையில் பல்லாண்டுகள் தள்ளப்படுகிறார். தண்டனை முடிந்து வரும்போது அவரின் ஆண், பெண் என இருபிள்ளைகளும் அரசு விதிகள்படி காப்பகத்தில் இருந்து தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அசீம் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. மேற்சொன்ன கதை மட்டுமே வைத்துக்கொண்டாலே கதையை உணர்ச்சிகரமாக கொண்டு செல்லமுடியும். ஆனால் இயக்குநர், அதோடு சேர்ந்து அசீம் தங்கும் மலிவான குறைந்த விலை விடுதியில் நடனக்...

பொதுவாழ்க்கையை மதம் கட்டுப்படுத்தும்போது, மதச்சார்பற்றவராக இருப்பதே நல்லது - எழுத்தாளர் எலிஃப் சாஃபாக்

படம்
      நேர்காணல் எலிஃப் சாஃபாக் ஆங்கில துருக்கி பூர்வீகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சாஃபாக். தனது பத்தொன்பதாவது நூலை எழுதியிருக்கிறார். அந்த நாவலின் பெயர், தேர் ஆர் ரிவர்ஸ் இன் தி ஸ்கை.  நாவலின் கதை தொன்மைக்கால மெசபடோமியா, விக்டோரியா காலகட்ட இங்கிலாந்து எனச் சுற்றி நவீன கால துருக்கியில் வந்து நிறைவு பெறுகிறது. இந்த விஷயங்களை ஒன்றாக இணைக்கும் புள்ளியாக நீர் உள்ளது. ஹெவி மெட்டல் இசை கேட்டபடியே நாவல் எழுதும் பழக்கம் கொண்டவரிடம் பேசினோம். புதிய நாவலில், வரலாறு, நிலப்பரப்பு என இரண்டுமே கலந்துள்ளது. இப்படியான அம்சங்களை தொடர்ச்சியாக எடுத்து எழுத என்ன காரணம்? எழுத்தாளராக எனக்கு கதைகள் மட்டும் பிடித்தமானதில்லை, மௌனமும் பிடிக்கும். வரலாற்றில் மக்கள் மௌனமாக்கப்பட்ட இடங்கள் உண்டு. துருக்கியில் கூறப்பட்ட கதைகள் பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் கோணத்தில் அமைந்தவைதான். நமக்கு கூறப்படும் பெரும்பான்மை கதைகள் இப்படியான பின்னணி கொண்டவைதான். அதிகாரமற்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண் ஆகியோரின் கதைகள் மறந்துபோனவையாக உள்ளன. கூறப்படாத கதைகளைக் கூறுவதில் எனக்கு ஆர்வமுண்டு. மௌனம், இட...

எர்டோகனுக்கு ஆதரவில்லாத நிலைமை - உள்ளூர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

படம்
  துருக்கியில் அதிபருக்கு எதிரான நிலை - உள்ளூர் நிர்வாகத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி துருக்கியில் அதிபராக உள்ளவர் ரிசெப் எர்டோகன். இவரது கட்சி, நீதி மேம்பாட்டு கட்சி. அண்மையில் அங்கு நடந்த உள்ளூர் தேர்தலில் அவரது கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிகாரத்தை சுவைத்து வரும் எர்டோகனுக்கு இது பெரிய சறுக்கல்.  துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, குடியரசு மக்கள் கட்சி. இந்த கட்சியினர், உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டு 36 முனிசிபாலிட்டிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர், புர்சா, அன்டால்யா ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளடங்கும்.  தேசிய அளவிலான தேர்தலில் எர்டோகன் வென்று ஓராண்டு கூட நிறைவடையவில்லை. அதற்குள் அதிபருக்கும், அவரது கட்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  தேர்தலில் எதிர்க்கட்சிகள் 37 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. 2019ஆம் ஆண்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதிபரின் நீதி மேம்பாட்டுக் கட்சி, 36 சதவீத வாக்குகளை உள்ளூர் தேர்தலில் பெற்றது. அதிபரின் கட்சி, இஸ்தான்புல் நகரை இழந்து...

வெற்றிபெற்ற தருணத்தை மறக்கமுடியாது! - நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர்

படம்
  வெற்றி பெற்ற தருணம்.... நிகாட் ஜரீன் உலக சாம்பியன் பட்டம் பெற்ற குத்துச்சண்டை வீரர் நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர் வெற்றிபெற்ற பிறகு என்ன செய்தீர்கள்? நான் அந்த இரவு முழுக்க தூங்கவில்லை. என் குடும்பம், மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். போனில் வந்த பல்வேறு குறுஞ்செய்திகளை வாசித்துக்கொண்டு இருந்தேன்.  உங்களது பயணம் துருக்கியில் 2011ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் ஜூனியர், யூத், இப்போது சீனியர் என பட்டங்களை வென்றிருக்கிறீர்கள். இந்த பதினொரு ஆண்டுப் பயணம் எப்படியிருந்தது? நிறைய ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்விகள் இந்த காலகட்டத்தில் இருந்தது. நான் தங்கமெடலை வென்றபோது நான் சந்தித்த சவால்கள், கஷ்டங்கள் தகுதியானவைதான் என்று தோன்றியது. எனக்கு நேர்ந்த சம்பவங்கள்தான் என்னை வலிமையானவளாக ஆக்கியது.  போராட்டம் சவால்களைப் பற்றி சொன்னீர்கள். அதனால்தான் ரெஃப்ரி உங்கள் கையை உயர்த்தியதும் அந்தளவு உணர்ச்சியை வெளிக்கொட்டினீர்களா? இதுவரை நீங்கள் இப்படி இருந்ததே இல்லை? எனது கை உயர்த்தப்பட்ட நொடியில் நான் உலகின் மிக மகிழ்ச்சியான மனிதராக மாறியிருந்தேன். ஆனால் அதேசமயம் இந்த வெற்றிக...

உயிருக்கு உயிரான காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஆல்பட்ரோஸ் பறவை! - டே ட்ரீமர் - துருக்கி தொடர்

படம்
                    டே ட்ரீமர் துருக்கி தொடர் 50 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சனீம் என்ற பெண்தான் தொடரின் மையப் பாத்திரம் . எப்போதும் புதிய தீவு ஒன்றுக்கு சென்று தனக்கு பிடித்த காதலனுடன் வாழவேண்டும் . அதுவும் ஆல்பட்ரோஸ் பறவையைப் போலவே தன்னைக் கருதுகிறாள் . தனக்கான ஆண் இணையைக் கண்டுபிடிப்பதே அவளது வாழ்க்கை லட்சியம் . சனீமைப் பொறுத்தவரை தனக்கு தோன்றுவதை அப்படியே பேசிவிடுவாள் . எதிரிலிருப்பவர்கள் யார் , என்ன நினைத்து கேட்கிறார்கள் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படமாட்டாள் . இதனால் அவளது குடும்பம் , தோழி அய்ஹான் , அக்கா லைலா என் எல்லோருமே அவளைப் பார்த்து மிரள்கிறார்கள் . குடும்பத்தின் மளிகைக்கடையை பார்த்துக்கொண்டு பகல் கனவு காண்பதுதான் அவளது வேலை . குடும்பத்தின் கடன் வேறு அதிகமாகிக்கொண்டிருக்க , மகள் வேறு அதிக வருமானம் வரும் வேலைக்கு போனால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள் . அப்படி எந்த வேலைக்கு போக எனத் தேடும்போது அக்கா லைலா தனது நிறுவனத்திற்கு கூட்டிச்செல்கிறாள் . விளம்பர நிறுவனமான அங்கு அவளு...

மகனின் அறுவை சிகிச்சைக்காக மோசடியில் இறங்கும் பொருளாதார பேராசிரியர்! - தி சாய்ஸ் - துருக்கி தொடர்

படம்
              தி சாய்ஸ் துருக்கி பத்து எபிசோடுகள் writers..... Nuket Bicakci Özlem Yücel Damla Serim மூளையில் கட்டி ஏற்பட்டதால் அடிக்கடி கண்பார்வை மங்கி , கைகளில் பலமின்றி மயங்கி விழும் மகனைக் காப்பாற்ற பொருளாதார பேராசிரியர் செய்யும் மோசடி வேலைகள்தான் கதை ..   இர்பான் சாயூன் என்ற பொருளாதாரப் பேராசிரியர்தான் கதை நாயகன் . பொருளாதாரமும் , பணமும் பற்றிய அத்தனை நுணுக்கங்களும் அறிந்த பேராசிரியர் . ஆனால் பல்கலைக்கழகம் ஒன்றில் தற்காலிக வேலை பார்த்து வருகிறார் . பல்கலைக்கழக அரசியலால் வேலை இழக்கிறார் . அதேசமயம் அவரது மகன் டென்னிஸிற்கு மூளையில் கட்டி எனும் தகவலையும் அறிந்துகொள்ள மனமுடைந்து போகிறார் . அவனைக் காப்பாற்ற நாற்பது ஆண்டுகளாக நேர்மையாக வாழ வேண்டும் என்ற கொள்கையையும் தூக்கிப்போட்டுவிட்டு மோசடிக்காரனாக மாறுவதுதான் மையக் கதை . இதைச்சுற்றி அவனை காதலித்துவிட்டு பின்னர் தூக்கியெறிந்த இலாய் , எப்போதும் மோசடிகளில் ...

தந்தையைக் கொல்லத் துடிக்கும் கணவனைத் தடுக்க நினைக்கும் காதல் மனைவியின் போராட்டம்! பிரேவ் அண்ட் பியூட்டிஃபுல் - துருக்கி

படம்
          பிரேவ் அண்ட் பியூட்டிஃபுல் துருக்கி வெப்சீரிஸ் தமிழ் 53, இந்தி 54-101 எம்எக்ஸ் பிளேயர். Written by:Ece Yörenç, Elif Usman, Serdar Soydan, Deniz Büyükkirli Starring:Kıvanç Tatlıtuğ, Tuba Büyüküstün Theme music composer    Toygar Işıklı ஓவியராக உள்ள ஹசன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவரது ஓவியங்களை தாசின் கோர்லுதாக் என்பவர் திருடிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அறிந்த ஹசனின் மறைந்து வாழ்ந்த மகன் சீசர் அலாந்தர் எப்படி கோர்லுதாக் வந்து பழிக்குப்பழி வாங்குகிறார் என்பதை 101 அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடும் 49 நிமிடங்கள் என்பதால் முன்னரே நேரம் ஒதுக்கி பாருங்கள். படம் திரில்லர் ரொமான்ஸ் வகையைச் சேர்ந்தது. பழிக்குப்பழி கதை என்றாலும் சீசர், சுகான் என்ற இரு பாத்திரங்களுக்கு இடையிலான அன்பும், நெகிழ்ச்சிமயமான உரையாடல்களும்தான்  வெப்சீரிசை திரைப்படத்தின் தரத்திற்கு உயர்த்துகின்றன. சீசரும், சுகானும் கண்ணோடு கண் பார்த்து பேசும் அனைத்து காட்சிகளும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளன. கோபத்தையும...

சல்லீசு ரேட்டில் கல்வி கற்க எந்த நாடு பெஸ்ட்?

படம்
துருக்கிதான் காசு குறைவாக தரம் நிறைவாக கல்வி தருகின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள். இதுபற்றிய ஆய்வு 58 நாடுகளில் உள்ள 360 பகுதிகளில் நடத்தப்பட்டு, துருக்கிதான் அனைத்து நாடுகளிலும் பெஸ்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிப்புக்கு ஆண்டுக்கட்டணம் 9,250 பவுண்டுகள் ஆகிறது. இதில் பாதியை செலவழித்தாலே பட்டம் வாங்கிவிடலாம் என்றால் நீங்கள் அதைத்தானே தேர்ந்தெடுப்பீர்கள். அந்த வாய்ப்பை துருக்கி அளிக்கிறது. அந்நாட்டில் வாழ்வதற்கும், படிப்பதற்குமான தோராய செலவு 4, 899 பவுண்டுகள்தான் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இம்முறையில் மாணவர் ஒருவர் துருக்கியில் படித்தால் 26 ஆயிரத்து 618 பவுண்டுகளை சேமிக்க முடியும். ஆய்வுப்பட்டியலில் கட்ட ரேட்டில் எங்கு படிக்கமுடியும் என ஆராய்ந்தோம். அதில் இந்தியா, பாகிஸ்தான், மால்டா, மலேசியா ஆகிய நாடுகளில கல்விக்கட்டணம் குறைவாக உள்ளது. டாப் 20 பட்டியலில் இந்த நாடுகள் வந்துவிட்டன. இங்கிலாந்து மாணவர்கள் இந்த நாடுகளுக்கு படிக்க வந்தால், அவர்கள் தாய்நாட்டில் செலவழிக்கும் 71 சதவீத பணத்தை மிச்சம் பிடிக்கலாம். என்ன இந்தியா வந்தால் அதற்கென தேர்வ...

நம்பிக்கை மனிதர்கள் - புரட்சியைக் காற்றில் பரப்பும் பாடகன்!

படம்
நம்பிக்கை மனிதர்கள்/ நாயகர்கள் பாடகர் எசல் பத்திரிகையாளன், பாடகன், நடிகன் இவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது நடப்பு நிகழ்ச்சிகளை த த்தமது துறை சார்ந்து வெளிப்படுத்தும் திறமை. மக்களைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் அரசியல் பற்றியோ, நாட்டின் நிலை பற்றியோ, ஏழைகளைப் பற்றியோ, பட்டினிச்சாவுகளைப் பற்றியோ எப்படி பேசாமல் இருக்க முடியும். இங்கும் துருக்கியைச் சேர்ந்த பாடகர் அதைத்தான் தன் பாட்டில் செய்தார். செய்துகொண்டிருக்கிறார். ஆனால் தன் நாட்டில் அல்ல; ஜெர்மனியில். என்ன காரணம்? அரசின் சிறை தண்டனைக்கு பயந்துதான். முன்னமே விதித்த ஐந்தாண்டு தண்டனை இவரை பெரியளவு பயமுறுத்தி இருந்தது. பாடல்களில் போதைப்பொருள் மற்றும் செக்ஸ் பற்றி பேசியதுதான் குற்றச்சாட்டாக பதிவானது. ஆனால் உண்மை என்ன என்பது அங்குள்ள மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். துருக்கி சர்வாதிகாரியான எர்டோகனின் குருட்டு ஆட்சி குறித்தும், அதன் வழியாக மக்கள் படும் பாட்டையும் மக்களிடமே சென்று பாடினார் புரட்சிப்பாடகர் எசல். அதுதான் அரசு இவரை தன் ஹிட் லிஸ்டில் சேர்க்க காரணம். ஒரு காலத்தில் 50 டாலர்களைக் கொடுத்து ஸ்பாட்டிஃபை இண...

எர்டோகனின் தோல்வி கூறுவது என்ன?

படம்
துருக்கி அதிபர் எர்டோகன்\ தி எகனாமிஸ்ட் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், அங்காராவில் தோற்றுப் போய் உள்ளார். 2003 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்து வருபவர், எர்டோகன். அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு மக்கள் கட்சி 51 சதவீத வாக்குகளுடன் வென்றிருக்கிறது.  நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி 47 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த கலகத்திற்கு பிறகு இது துருக்கி அதிபரை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. எர்டோகன் இன்றும் 44 சதவீத ஆதரவுடன் வலுவாகவே இருக்கிறார். அண்மையில் நடந்த மேயர் தேர்தல், மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் என்பதையே உணர்த்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு எர்டோகனுக்கு எதிராக நடந்த கலகத்தை அவரே முன்னின்று ஒடுக்கினார். அதிலிருந்து அமெரிக்காவுக்கு எதிரான போரை நடத்தத்தொடங்கினார் இதனால், நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கி சரிந்துள்ளது. எர்டோகனுக்கு இப்போது எதிரான மனநிலை உருவாகியுள்ளது. குர்தீஷ் மக்கள் ஜனநாயக கட்சி இதற்கான பலன்களைப் பெறப்போகிறது. இதன்விளைவாக, முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்யவே தயங்குகின்றனர். அரசி...