எர்டோகனின் தோல்வி கூறுவது என்ன?





Image result for erdogan
துருக்கி அதிபர் எர்டோகன்\ தி எகனாமிஸ்ட்




துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், அங்காராவில் தோற்றுப் போய் உள்ளார். 2003 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்து வருபவர், எர்டோகன். அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு மக்கள் கட்சி 51 சதவீத வாக்குகளுடன் வென்றிருக்கிறது.  நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி 47 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த கலகத்திற்கு பிறகு இது துருக்கி அதிபரை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. எர்டோகன் இன்றும் 44 சதவீத ஆதரவுடன் வலுவாகவே இருக்கிறார். அண்மையில் நடந்த மேயர் தேர்தல், மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் என்பதையே உணர்த்தியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு எர்டோகனுக்கு எதிராக நடந்த கலகத்தை அவரே முன்னின்று ஒடுக்கினார். அதிலிருந்து அமெரிக்காவுக்கு எதிரான போரை நடத்தத்தொடங்கினார் இதனால், நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கி சரிந்துள்ளது. எர்டோகனுக்கு இப்போது எதிரான மனநிலை உருவாகியுள்ளது. குர்தீஷ் மக்கள் ஜனநாயக கட்சி இதற்கான பலன்களைப் பெறப்போகிறது. இதன்விளைவாக, முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்யவே தயங்குகின்றனர். அரசியல் நிலைமை மோசமாக இருப்பது தொழில்துறைக்கும் சாதகமாக இல்லை.

தற்போது மேயர் தேர்தலில் வென்ற இக்ரம் இமாமோக்லு, சிரியா அல்லது பாலஸ்தீன் பிரச்னைகளைப் பேசி வெல்லவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நாட்டின் கழிவுகளை எப்படி அகற்றுவது என்பதை சொல்லியே வென்றிருக்கிறார். ஆகஸ்டில் நாட்டின் கரன்சி லிரா, 30 சதவீதம் சரிந்திருக்கிறது. நாடு முழுக்க எர்டோகனுக்கு எதிரான நிலையில் உள்ளது. ஆனாலும் முழுக்க காலம் அவரைக் கைவிடவில்லை.


2023 ஆம் ஆண்டு வரை அவருக்கு நேரமுள்ளது. அதனால் மக்களின் மனத்தை மாற்றுவதற்கு நிறைய நேரம் உள்ளது. தாராளமய வணிகத்திற்கு கதவு திறந்தால் மட்டுமே நாடு பொருளாதாரப் பிரச்னையிலிருந்து மீள வாய்ப்பு உள்ளது. எர்டோகன் ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற கடுமையாக உழைத்தே ஆகவேண்டியுள்ளது.

பிரபலமான இடுகைகள்