இடுகைகள்

அறிவியல்-Q&A லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அண்டார்டிகாவில் குடியேற முடியுமா?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? -Mr. ரோனி அண்டார்டிகா அல்லது ஐஸ்லாந்தில் பனி உருகியபிறகு அங்கு குடியேறமுடியுமா ? அப்படி தங்க பல்லாண்டுகள் தேவை . அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்தில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகினால் கடல்மட்டம் 68 மீட்டர் உயரும் . இதன்விளைவாக ஐரோப்பாவின் பெரும்பாலான இடங்கள் நீருக்குள் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் . கூடவே ஆசியா , கனடா , தென் அமெரிக்காவின் பலபகுதிகளும் பாதிக்கப்பட்டிருக்கும் . தற்போது ஐஸ்லாந்து மற்றும் அன்டார்டிகாவின் மேலுள்ள ஐஸ்கட்டிகள் உருகி கீழே வந்துகொண்டிருக்கின்றன . பனிக்கட்டிகள் உருகிவிட்டால் நீரிருந்த பரப்பு வாழும் இடமாக பல நூறு ஆண்டுகள் தேவை . அன்டார்டிகா ஆஸ்திரேலியா போலவும் , ஐஸ்லாந்து குவளை போன்றிருப்பதால் தங்குவதற்கான வாய்ப்பு உள்ளது . ஆனால் அன்டார்டிகா , காசாகிராண்டே போலவெல்லாம் ரியல் எஸ்டேட் விளம்பரம் கொடுக்கும்படி கிராக்கி வராது என நம்புவோம் . தொகுப்பு: கா.சி.வின்சென்ட் நன்றி: முத்தாரம்