இடுகைகள்

கருத்தில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மாற்றுவது எப்படி?

படம்
                        உலகை எப்படி மாற்றுவது ? இப்படி யாராவது இருபதுகளில் யோசிக்காமல் இருக்கமுடியுமா ? அனைவருக்கும் இந்த எண்ணம் வந்திருந்தாலும் இதனை எப்படி செய்வது என்பதை அறியாமல் இருப்பார்கள் . இதனால் நல்லது செய்ய அரசியலுக்கு செல்லலாமா என சேகர் கம்முலா பட நாயகர்கள் போல யோசிப்பவர்கள் நிறையப் பேர் உண்டு . ஆனால் அது எடுபடவேண்டுமே ? உலகம் மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை . கிரேக்க கணிதவியலாளர் ஆர்க்கிமிடிஸ் , பூமியில் நிற்பதற்கு எனக்கு இடம் கொடுங்கள் . நான் அதனை நகர்த்தி காட்டுகிறேன் என்றார் . உலகில் மாற்றங்களை நாங்கள் தருகிறோம் என்று செயல்பட்டவர்கள் , அதன்வழியே மக்களை கொன்று குவித்திருக்கிறார்கள் . நேர்முகமாகவும் , மறைமுகமாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . உலகப்போர் குறிப்பிட்ட தலைவர்களின் ஆதிக்க வெறியால் நடந்தது என்றாலும் அதனால் பட்டினியில் விழுந்து இறந்துபோனவர்கள் மக்கள்தான் . ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து போல்ஷ்விக்குகள் ஆட்சிக்கு வந்தது மாற்றம் என்றாலும் அதனால் 20 மில்லியன் மக்கள் தங்கள் உயிரைக் கொடுக்கவேண்டியிருந்தது . கிறிஸ்துவ மதமாற்றம் , யூத