இடுகைகள்

தற்சார்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணெய் வித்துகளில் தற்சார்பை இழந்த இந்தியா!

படம்
  கி.மு 3500 காலகட்டத்திலேயே ஹரப்பாவில் எள் பயிரை பயன்படுத்தியுள்ளனர் என்று 1930ஆம் ஆண்டு அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால், இதனை எதற்காக எப்படி பயன்படுத்தினர் என்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால் எண்ணெய் உற்பத்திக்காக அதை பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம்.  எள்ளின் பயன்பாடு பற்றி வேதகால எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பேஷர்னா, யந்த்ரா, சக்ரா என மூன்று வடிவங்களில், பயன்படுத்தியதாக எழுதப்பட்டுள்ளது என உணவு வரலாற்று வல்லுநர் கே டி அச்சயா தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். தொடக்க கால வணிகத்தில் பயன்பட்ட பொருளும் எண்ணெய் வித்துகள்தான். இந்தியாவில் எள் என்றால் மத்திய தரைப்பகுதி நாடுகளில், ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தினர். இன்றுவரை எண்ணெய் வித்துகள் சார்ந்த தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் வலிமையான வகையில் செயல்பட்டு வருகின்றன.  ஆர்ச்சர் டேனியல்ஸ், பங்கே, கார்ஜில் லூயிஸ் டெரிஃபஸ், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்கள் உலகளவில் எண்ணெய் வித்துகளை அரைத்து விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவில் எண்ணெய் என்பது இந்துஸ்தான் லீவரின் டால்டா வனஸ்பதியிலிருந்து தொடங்குகிறது. இதனை பங்கே நிறுவனம்

பெருந்தொற்று காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றமுடியும்? ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வர்

படம்
                    ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் கடந்த ஓராண்டாக உங்கள் அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள் . என்ன சவால்களை சந்தித்தீர்கள் . வெளிமாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை மாநிலத்திற்கு அழைத்துக்கொண்ட மாநிலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் . கோவிட் -19 தொற்றை வெற்றிகரமாக சமாளித்து மீண்டுள்ளோம் . சிறப்பாக செயல்பட்டு நோய்த்தொற்றை குறைத்த மாநிலங்களில் நாங்களும் முக்கியமான மாநிலம் . தினமும் பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றிகரமாக அதற்கு தீர்வு கண்டு வருகிறோ்ம் . எதிர்க்கட்சிகள் கடந்த ஓராண்டாக உங்கள் அரசு ஏதும் செய்யவில்லை என்று பிரசாரம் செய்து வருகிறார்களே ? பெண்கள் , சமூகப் பாதுகாப்பு , சுகாதாரம் , கல்வித்துறைக்கான சட்டங்களை உருவாக்கியுள்ளோம் . மேலும் கோவிட் -19 சமாளிப்பதற்கான உதவிகளை வழங்கியுள்ளது . நிதித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை மாற்றியுள்ளோம் . சுற்றுலா , விளையாட்டு தொடர்பான புதிய விஷயங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளோம் .   ஜிஎஸ்டி வருவாய் வழங்குவது தொடங்கி மத்திய அரசுடன் பல்வேறு