இடுகைகள்

சிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நரசிம்மராவின் நூற்றாண்டு விழா மறக்கப்பட்டுவிட்டதா?

படம்
  முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நூற்றாண்டு பற்றி காங்கிரஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.அவர்களுக்கு நரசிம்மராவ் பற்றி நினைக்கும்போது பாபர் மசூதி இடிப்பு நினைவுக்கு வந்திருக்கலாம். காங்கிரஸின் பின்னாளைய தோல்விகளுக்கும், பாஜகவின் எழுச்சிக்கும் பாபர் மசூதி அளவுக்கு வேறெந்த விஷயமும் உதவியிருக்காது என்பதே உண்மை. நரசிம்மராவை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி , ஆந்திர, தெலுங்கானா அரசுகள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றன.  இந்தியா அந்நிய செலவாணி பிரச்னையில் தவித்த போது 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்தார். இந்தியாவை கடன் பிரச்னையிலிருந்து மீட்க அவர் செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் இன்றுவரை நாட்டிற்கு உதவி வருகின்றன. தங்களிடமிருந்த  தங்கத்தை உலக வங்கியில் அடமானம் வைத்து 200 மில்லியன் டாலர்களை திரட்ட இந்தியா திணறி வந்தது. நரசிம்மராவ் 2004இல் காலமானபோது, நாட்டில் 140 பில்லியன் டாலர்கள் அந்நியசெலவாணி இருப்பில் இருந்தது. இதனை அவர் எளிதாக சாதித்து விடவில்லை. டாக்டர் மன்மோகனை நிதியமைச்சராக நியமிக்க பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறுவார்கள். மன்மோகனை நிதியமைச்சராக நியமித்த