இடுகைகள்

சஷாந்த் ஷா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாணச் சரக்கா பெண்கள்? - ஆஃபேட் சீரிஸ் சொல்வது என்ன?

படம்
news bugz ஆஃபேட்(AAFAT) எம்எக்ஸ் பிளேயர் இயக்கம்: சஷாந்த் ஷா எழுத்து:  ஸ்ருதி மதன் சித்தாந்த் மாகோ, இஷிதா மிஸ்ரா கதை, திருமணம். ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க ஆண் வீட்டார் என்னென்ன விஷயங்களைப் பார்ப்பார்கள் என்று ஆறு எபிசோடுகளில் உரி உரி என உரித்துவிட்டார்கள். ரிக்கி மல்ஹோத்ரா(சித்தார்த் பரத்வாஜ்), உடம்பு வளர்ந்தளவு மூளை வளராத ஆள். ஒரே தகுதி ஆண். அதை வைத்தே குடும்ப பிசினஸ் செய்துகொண்டு அம்மா ஆதரவில் பெண் தேடுகிறார். அந்த பெண்தேடும் முயற்சியில் உதவுகிறார் ரிஸ்தே பரிஸ்தே எனும் கல்யாண மாலை கம்பெனி ஓனர் ரீதா மொகந்தி(சீமா பாவா). இவர் காட்டும் ஐந்து பெண்களின் கதைதான் ஆஃபேட். இதில் வரும் அதிதி(புஷ்டி சக்தி), ஆயிஷா(அன்சுல் சௌகான்), ஃபைஸா (சித்ராஷி ராவத்), அனு(நீலம் சிவியா), டிட்லி (நிகிதா தத்தா)  இவர்களின் ஆங்கிலப்பெயரே வெப் சீரிஸ் டைட்டில். movieskickkz ஐந்து பெண்களில் அதிதிக்கு உடல் எடைதான் பிரச்னை. அறிவு சூரியன் போல. சொந்த பிசினஸே இருந்தாலும் வெளிக்கம்பெனியில் அறிவைத் தேடுபவர். உடல் எடையால் தன்னம்பிக்கை குறைந்த தடுமாறுகிறார். ஆயிஷா, குறையொன்றுமில்லாத குரல். உடல் ர