இடுகைகள்

ஐஸ்லாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐஸ்லாந்தில் அமையப்பெற்ற அழகிய தேசியப்பூங்கா!

படம்
  திங்வெல்லிர் அமைந்துள்ள இடம் – ஐஸ்லாந்து கலாசார அங்கீகாரம் பெற்ற ஆண்டு – 2004 ஐஸ்லாந்து நாட்டில் அமைந்துள்ள பழமையான தேசியப் பூங்காவின் பெயர் திங்வெலிர். 930ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்துள்ள இடம் இது. இரண்டு மலைச்சிகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ள அல்மனாக்ஜாவில் தேசியப் பூங்கா உள்ளது. நாட்டின் முதல் ஜனநாயக நாடாளுமன்றமும் இங்குதான்   முதன்முதலில் உருவாகி இயங்கி வந்தது. வடக்கு அட்லாண்டிக் நடுவில் உள்ள தீவை நார்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். இதற்கான காலம் அறுபது ஆண்டுகள்.   1262ஆம் ஆண்டு நார்வே ஐஸ்லாந்தை கட்டுப்படுத்தி ஆண்டது. திங்வெல்லிர் என்ற இடமானது கிறிஸ்துவ மக்களுக்கான புனித இடம். இங்குள்ள மக்கள் எந்த வன்முறையும் இல்லாமல் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டனர். இங்கு செல்பவர்கள் வட அமெரிக்க கண்டத்தட்டு, ஐரோப்பிய கண்டத்தட்டு என இரண்டிலும் பயணிக்க முடியும்.அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் நீளமான மலைத்தொடர்களைக் கொண்ட நாடு ஐஸ்லாந்து. ஆக்சாரா என்ற ஆறு இங்கே ஓடுகிறது. அல்மனாக்ஜாவிலிருந்து திங்வல்லவட்டன் எனும் இடத்திற்கு அருவியாக மாறி செல்கிறது. திங்வல்லவட்டான் எனும் இயற்கை

இரண்டாம் உலகப்போரில் உருவான சிண்ட்ரோம் கே! - உண்மையா, உடான்ஸா

படம்
  இரண்டாம் உலகப்போரில் கண்டறியப்பட்ட சிண்ட்ரோம் கே என்பது நோயல்ல! உண்மை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி மருத்துவர்களால், சிண்ட்ரோம் கே என்ற நரம்பியல் சார்ந்த தொற்றுநோய் செய்தி உருவாக்கப்பட்டது. உண்மையில் மருத்துவர்கள்  யூதர்களை காப்பாற்ற  முயன்றே இப்படி நோய் பரவி வருவதாக பொய் சொன்னார்கள். இதன்மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூதர்களை தற்காலிகமாக பாதுகாக்க முடிந்தது.  9 நானாஸ் (The 9 Nanas) என்பது அமெரிக்க பெண்களின் ரகசியக் குழு! உண்மை.  இக்குழுவினர் கெடுதலான செயல்களை ஏதும் செய்யவில்லை. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்த 9 பெண்கள்தான் 9 நானாஸ் என்ற ரகசியக்குழு. இவர்கள், தினமும் அதிகாலை 4 மணிக்கு பொதுவான இடத்தில் சந்தித்து, குறிப்பிட்ட அளவு காசு சேர்த்து உணவு, உடைகளை ஏழைகளுக்கு வழங்கி வந்திருக்கின்றனர். இக்குழுவினர், 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கணவர்களுக்குக் கூட தெரியாமல் தங்களது அறச்செயல்பாடுகளை செய்து வந்திருக்கிறார்கள்.  பாலின சமநிலை கொண்ட நாடு, ஐஸ்லாந்து! உண்மை. உலகளவில் எடுக்கப்பட்ட பாலின சமநிலை அறிக்கையில், ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இதற்கடுத்து, நார்வ

ஐஸ்லாந்தின் திமிங்கில வேட்டை தடையால் உருவாகும் மாற்றம்!

படம்
  திமிங்கில வேட்டைக்குத் தடை! ஐஸ்லாந்து நாட்டின், ஃபேக்ஸாபிளோய் விரிகுடா பகுதி. இங்கு, படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றும்போதே வழிகாட்டி, திமிங்கில இறைச்சியை தவிருங்கள். அதனை பாதுகாக்க முயன்று வருகிறோம் என்று கூறிவிடுகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில், 2024ஆம் ஆண்டுக்குள் வணிகரீதியான திமிங்கில வேட்டையை நிறுத்தவேண்டும் என ஐஸ்லாந்து நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.   ஜப்பான் நாடு, சில ஆண்டுகளாக திமிங்கில வேட்டையை நிறுத்தி வைத்திருந்தது. பிறகு, 2019ஆம் ஆண்டு வணிகரீதியான திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்கியது. இதன் விளைவாக, ஐஸ்லாந்து நாட்டு திமிங்கில இறைச்சிக்கான தேவை குறைந்துவிட்டது. ஆனால் அரசின் மீன்வளத்துறைத்துறை அமைச்சர் ஸ்வாண்டிஸ் ஸ்வாவர்ஸ்டோட்டிர், ”திமிங்கிலப் பாதுகாப்பே முக்கியம். பொருளாதாரப் பயன் முக்கியமல்ல” என்று  நாளிதழில் எழுதியுள்ளார்.  இதெல்லாம் தாண்டி சூழல் அமைப்புகள், திமிங்கில வேட்டையைத் தடுக்க 15 ஆண்டுகளாகப் போராடி வருகின்றன.   ஐஸ்லாந்தில் , 1600 ஆம் ஆண்டிலிருந்தே திமிங்கில வேட்டை நடைமுறையில் உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் ஐஸ்லாந்தில் நுழைந்த அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள்  திமிங்கி

வேற்றுகிரகத்திற்கு செல்ல விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வது இங்குதான்! - ஐஸ்லாந்து

படம்
  நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு! முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது.  1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர்.  ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு  சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு.  2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆனதை விண்வெளி அறிவி

ஆண், பெண் சம்பள உரிமைக்காக குரல் கொடுத்த ஆட்சியாளர்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜோகன்னா சிகுர்டர்டோடிர் ஐஸ்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர். அரசு சேவைகளில் பெரிய மாற்றத்தை இவர் உருவாக்கவில்லை. ஆனால் மாற்றுப்பாலினத்தவர் திருமணம் செய்வதற்கான சட்டத்திருத்தங்களை உருவாக்கினார்.  அதன் மூலம் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கான சட்டத்தை முதன்முதலில் உருவாக்கியது இவர் தலைமையிலான அரசுதான். 1942 ஆம் ஆண்டு பிறந்த ஜோகன்னா, ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். மேலும் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று சொல்லி ஆட்சி நடத்தினார். 1962-71 ஆம் ஆண்டு விமானநிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். தொழிலாளர் சங்கத்தின் தீவிரமாக இயங்கியவர் இவர். 1978 ஆம் ஆண்டு சமூக தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று ஐஸ்லாந்தின் பிரதமரானார். ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் என்ற உரிமையை முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் 2010 ஜூலை 27 அன்று, ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். ஐஸ்லாந்தில் 1978 முதல் 2013 ஆம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்த ஒரே அரசியல்வாதி இவர்தான். இவரைக்