ஆண், பெண் சம்பள உரிமைக்காக குரல் கொடுத்த ஆட்சியாளர்!



20 LGBTQ+ People Who Changed the World







மாற்றுப்பாலின சாதனையாளர்கள்

ஜோகன்னா சிகுர்டர்டோடிர்

ஐஸ்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர். அரசு சேவைகளில் பெரிய மாற்றத்தை இவர் உருவாக்கவில்லை. ஆனால் மாற்றுப்பாலினத்தவர் திருமணம் செய்வதற்கான சட்டத்திருத்தங்களை உருவாக்கினார்.  அதன் மூலம் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கான சட்டத்தை முதன்முதலில் உருவாக்கியது இவர் தலைமையிலான அரசுதான்.

1942 ஆம் ஆண்டு பிறந்த ஜோகன்னா, ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். மேலும் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று சொல்லி ஆட்சி நடத்தினார். 1962-71 ஆம் ஆண்டு விமானநிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். தொழிலாளர் சங்கத்தின் தீவிரமாக இயங்கியவர் இவர். 1978 ஆம் ஆண்டு சமூக தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று ஐஸ்லாந்தின் பிரதமரானார். ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் என்ற உரிமையை முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் 2010 ஜூலை 27 அன்று, ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார்.

ஐஸ்லாந்தில் 1978 முதல் 2013 ஆம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்த ஒரே அரசியல்வாதி இவர்தான். இவரைக் குறித்து இவரது இணையரே நூல்களை எழுதியுள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம் சரிந்ததைப் பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் ஆண்,பெண் சம்பள வேறுபாட்டை பெருமளவு குறைத்தது ஜோகன்னாவின் புகழ்பாடும் சாதனை. எனது நேரம் வரும் என்று இவர் கூறிய வார்த்தை அன்றைய அரசியல் அரங்கில் மிகவும் பிரபலமான பன்ச் லைன்.

நன்றி: அவுட்.காம்

தமிழில்: வின்சென்ட் காபோ


பிரபலமான இடுகைகள்