மரம் நடுவது கார்பனைக் குறைக்காது - புதிய ஆய்வு என்ன சொல்கிறது?




Image result for tree illustration






மரம் நடுவது மட்டுமே தீர்வல்ல!

செய்தி: வெப்பமயமாதல் விளைவால் 2050 ஆம் ஆண்டு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மரக்கன்றுகள் நடுவதைக் கடந்து கார்பன் அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர். 

நீராதாரம் பெருகவும், வெப்பநிலை பாதிப்பைக் குறைக்கவும் சூழலியலாளர்கள் சொல்லும் ஒரே தீர்வு, மரக்கன்றுகளை நடுவதுதான். ஆனால் உலகில் வெளியாகும் டன் கணக்கிலான கார்பன் வெளியீட்டுக்கு மரக்கன்றுகள் நடுவது தீர்வாகுமா என ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம், வெப்பமயமாதலின் விளைவாக ஐரோப்பாவில் வெப்ப அலை பாதிப்புகள் தொடங்கிவிட்டன.

விவசாயம், விமானத்துறை, இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி ஆகியவை மூலமாக வெளியேறும் கார்பன் வெளியீடு அதிகம். இதனைக் குறைந்த விலையில் சமாளிக்க மரங்கள் உதவலாம். இதற்கு மாற்றாக சூழலியலாளர்கள் சொல்லும் யோசனை, மரங்களை வளர்த்து, வெட்டி மின்சாரத்திற்கு பயன்படுத்தலாம். பின்னர், அதிலிருந்து வரும் கார்பனை சேகரித்துவைக்கும் இம்முறைக்கு பயோஎனர்ஜி கார்பன் கேப்சர் அண்ட் ஸ்டோரேஜ் (BECCS) என்று பெயர். ஆனால் இம்முறையைச் செயற்படுத்த அதிகளவிலான நிலங்கள் தேவை.

இதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் யோசனை சதுப்பு நிலங்களில் கார்பனைச் சேமிப்பது. இதில் பலநூறு ஆண்டுகளில் சேமிக்கப்படும் கார்பன்தான் நிலக்கரி ஆகிறது.  இதற்குப் பயன்படும் நிலங்களை உணவுப்பயிர்களை விளைவிக்கப் பயன்படுத்த முடியாது என்பது இதிலுள்ள குறை. காற்றிலுள்ள கார்பனை மண்ணில் சேமித்து கார்பன் வாயு அளவைக் கட்டுப்படுத்தும் சாய்ல் கார்பன் சீக்வெஸ்ட்டிரேஷன் (Soil Carbon Sequestration) முறையை ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். 

மரங்களின் மூலம் கார்பன் சேகரித்தால் ஆண்டுக்கு 5 ஜிகாடன் கார்பன் மாசைக் குறைக்க முடியும். ஆனால், தற்போது உலகளவில் கார்பன் வெளியீடு ஆண்டுக்கு 40 ஜிகா டன்களாக உள்ளது. நேரடியாக காற்றிலிருந்து கார்பனை அகற்றும் திட்டத்தை முன்வைத்தாலும் அது நடைமுறைக்கான திட்டமாக இன்னும் மாறவில்லை. ””இம்முறையில் உங்களுக்கு அதிகளவு நீரும், நிலமும் கூடத் தேவையில்லை ” என்கிறார் கிரான்தம் சூழலியல் கழகத்தைச் சேர்ந்த அஜய் கம்பீர். கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்திவிட்டால், தற்போதுள்ள மரங்களே கார்பனை நீக்க போதுமானவை. இல்லாதபோது, வேறுவழிகளைத் தேடியாகவேண்டும்.

தகவல்: New Scientist

வெளியீடு - தினமலர் பட்டம்

படம்: free vintage illustration
Free Vintage Illustrations


பிரபலமான இடுகைகள்