நிழல் இல்லாத பைசாசிகம்! - கோட்டயம் புஷ்பநாத்
நிழல் இல்லாத மனிதன்
கோட்டயம் புஷ்பநாத்
தமிழில் - சிவன்
கேரளத்திலுள்ள பிரபலமான மருத்துவமனை சிட்டி ஹாஸ்பிடல்ஸ். இதன் உரிமையாளருக்கு காசும் தேவை அதோடு அதன் மூலம் நிறைய புகழும் தேவை. இதற்காக மருத்துவச்சேவை செய்துவருகிறார். கூட்டம் அள்ளுகிறது.
கூடுதலாக இதய மாற்று மருத்துவம் சார்ந்த படிப்புக்கு லூயிஸ் என்பவரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். இவருக்கு தன் பெண நான்சியைக் கட்டிக்கொடுத்து தன் சொத்தையும் மருத்துவத் தொழிலையும் நடத்தும் எண்ணம் அவருக்கு.
அப்போதுவரை மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஸ்டீபன். அவருக்கும் ஷைனி என்ற நர்ஸ் ஒருவருக்கும் கசமுசா என மருத்துவமனை கிசுகிசுக்கும் அளவு நெருக்கம் செல்கிறது. ஆனால் கல்யாணம் செய்தால் வேலை போய்விடும். மருத்துவமனை உரிமையாளர் நர்ஸ்களை அழகு என்ற காரணத்தை வைத்து மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்.
கல்யாணம் செய்தால் வேலையில் கவனமாக இருக்கமாட்டார்கள் என்பதால், ஆன்டிகளுக்கு அங்கே இடமில்லை என்று கூறிவிட்டார். இதனால் ஜோடிகள் என்ன செய்வது என்றபோதுதான் லூயிஸ் உள்ளே நுழைகிறார்.
லூயிஸ் உள்ளே நுழைந்த பிறகு, அங்கு நடக்கும் ஆபத்து, அபாயங்கள்தான் கதை. மருத்துவர் ஸ்டீபன், மருத்துவமனையில் நடைபெறும பல்வேறு சம்பவங்களுக்குக் காரணம் யார் என தேடுகிறார். உடனே அவரை அச்சுறுத்தும் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால், பாதிரியார் ஒருவரின் உதவியை நாடுகிறார். இதற்குப் பிறகு நடைபெறும் சம்பவங்கள்தான் கதை.
ஆனால் இந்தக் கதையில், லூயிஸ் என்பவர் பலவீனமான வில்லனாக இருக்கிறார். நாயக பாத்திரம் மிக எளிதாக தோற்கடிக்கும்படி, இருக்கிறது. பிற கதாபாத்திரங்கள், அழுத்தமாக இல்லை. எளிதில் இதற்கு காரணம் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. இச்சூழ்நிலையில், கதை படிக்க பெரிய ஆர்வம் இல்லை. புஷ்பநாத், இந்தக் கதையில் பெரிதாக சோபிக்கவில்லை. இது வருத்தமாக இருந்தாலும் உண்மை அதுவே.
நன்றி: பாபு பெ.அகரம், தமிழ்நேசன்