கலக்கும் சோலார் கார்!- வாங்க முடியுமா? - லைட்இயர் ஒன்!
உலகம் முழுக்க சோலார் காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால் பேட்டரி கார்களை, பைக்குகளை நம்பி பயணிப்பது பலருக்கும் அலர்ஜியாக உள்ளது. டக்கென எங்காவது நின்றுவிட்டால் என்ன செய்வது என்று? டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. வந்தாலும் விலை அதிகம். என்ன செய்வது?
நெதர்லாந்தைத் சேர்ந்த லைட் இயர் எனும் நிறுவனம் ஆற்றல் வாய்ந்த சோலார் காரை உருவாக்கி நம்பிக்கை தருகிறது. இதன் ஒன் எனும் வகைக்கார் ரேசில் கலந்து வெற்றி வாகை சூடியுள்ளது. 2013, 15,17 ஆண்டுகளில் இந்த சம்பவத்தை ஒன் கார் நிகழ்த்தியது.
சோலார் காருக்கு வானிலை முக்கியம். இந்த ஒன் வகைக்கார் மழை பெய்யும் காலத்தில் 400 கி.மீ, வெயில் காயும் நேரங்களில் 725 கி.மீ தூரம் என பயணிக்கும் என்று கம்பெனி கூறுகிறது.
பொதுவாக ஒருநாள் இரவு மட்டும் சார்ஜ் செய்தால், 250 வோல்ட்ஸ் கரண்ட் தேவை. 350 கி.மீ தூரம் ஜரூராக பயணிக்கலாம் என கேரண்டி தருகிறது லைட் இயர்.
இந்தியா போன்ற நாடுகளில் சார்ஜிங் பாய்ண்ட் தேவையில்லை. காரணம் இங்கு கொளுத்தும் வெயில்தான். கார் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும். எனவே, பாரத் பெட்ரோல் பங்க் சென்று சார்ஜ் போடும் அவஸ்தை கிடையாது. இதன் காரின் மேற்கூரை நன்கு உறுதியான எடையற்ற சோலார் செல்களால் ஆனது. இதன் தொழில்நுட்பத்தை நாம் விளக்கவும் முடியாது. அதனை லைட்இயர் கூறவும் இல்லை. ஒரு மணிநேரத்திற்கு வெயில் இதன்மீது பட்டால் அதில் சேகரமாகும் மின்சார சக்தி மூலம் 12 கி.மீ பயணிக்கலாம். போதாதா?
ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகிய வசதிகள் இதில் இணைக்கப்படும் என்று தெரிகிறது. விலை நீங்கள் வாங்கும்படி இப்போது கிடையாது. எதிர்காலத்தில் வாங்கலாம் என நம்புங்கள். பதினைந்து ஆண்டுகளில் விலை குறையும். எனவே, அதனை வாங்க வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை அதானே எல்லாம்.
நன்றி: பிபிசி