பிறர் என்னைப் பின்பற்றவேண்டும் என ஆசைப்பட்டேன்! - லாவெர்னே காக்ஸ்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்!
இசைக்குயில் நான் - லாவெர்னே காக்ஸ்
ஆங்கில ஊடகங்களில் அதிகம் தென்படும் புகழ்பெற்ற மாற்றுப்பாலினத்தவர் லாவர்னே. இவரின் சமூக வலைத்தளக் கணக்கு முழுவதும் மாற்றுப்பாலினத்தவராக எப்படி சமூகத்தில் தனக்கான இடத்தைப் பிடித்தேன் என்பதைப் பற்றிய சிறுசிறு பதிவுகள் உள்ளன. அவை படிப்பவர்களுக்கு மாற்றுப்பாலினத்தவர்களின் மீது கரிசனத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. டைம் வார இதழில் இடம் பிடித்த முதல் மாற்றுப்பாலினத்தவர், லாவர்னே காக்ஸ்தான்.
மேலும் டிவியில் ஆரஞ்ச் இஸ் தி நியூ பிளாக் எனும் டிவி தொடர் உட்பட பல்வேறு ஊடகத் தொடர்களில் பங்கேற்று சாதனை செய்துள்ளார். மேலும் டே டைம் எம்மி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் இவரே. மாற்றுப்பாலினத்தவருக்கான தொலைக்காட்சி தொடர்களிலும் லாவர்னே நடித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இவரது தாய் கருப்பினத்தவர்களின் வரலாற்று நூலை வாங்கிப் படிக்க கொடுத்துள்ளார்.
அதில் அவருக்குப் பிடித்தது, ஓபரா பாடகரான லியோன்டைன் பிரைஸைத்தான். ”எனக்கு அவரின் டர்பன், உதடுகள், பெரிய உதடுகள் என என்னை அவராக கற்பனை செய்துகொண்டு நிகழ்ச்சியை ரசித்துப் பார்ப்பேன். அன்றைய பாடகர்களில் அவர் சிறப்பாக செயல்பட்டார். அனைவரையும் ரசிக்க வைத்த பிரபலங்களில் அவரும் ஒருவர். மற்றவர்கள் என்னைப் பின்தொடரும்படி வாழ வேண்டும் என நினைத்திருக்கிறேன்” என்கிறார் லாவெர்னே காக்ஸ். இன்று உலகம் முழுக்க மாற்றுப்பாலினத்தவர்களுக்கான உரிமைகளுக்காகப் பேசி வருகிறார். அந்த வகையில் தொழில்முறையில் நடிகையாக உழைத்து வருகிறார்.
ஆங்கிலமூலம் - Out.com
தமிழில்- வின்சென்ட் காபோ