மாந்த்ரீகனுக்கு எதிராக காதல் மந்திரம் - கோட்டயம் புஷ்பநாத்தின் சூப்பர் நாவல்!
புத்தக விமர்சனம்
காதல் மந்திரம்
கோட்டயம் புஷ்பநாத்!
தமிழில்: சிவன்
உதயநல்லூர் என்ற ஊரில் நடக்கும் மாந்த்ரீகச்சண்டை. அங்கு அரண்மனையில் வாழும் கார்த்தியாயினி எனும் இளவரசிக்கும், பிரம்ம தத்தன் என்ற நம்பூதிரி வம்சத்திற்கு பழங்கால பகை உள்ளது. இளவரசி முந்நூறு ஆண்டுகளாக பிரம்ம தத்தனை பழிவாங்கி தேவியின் கையிலுள்ள ஓலைச்சுவடிகளைக் கைப்பற்ற நினைக்கிறாள். பிரம்ம த த்தனுக்கும் அதே ஆசைதான். ஆனால் அது நிறைவேறுவதற்கான வழி இளவரசிக்கு தெரியவில்லை. ஆனால் பிரம்ம த த்தன், இளம்பெண்களை பலியிட்டு அந்த வழியை சென்றடை முயற்சிக்கிறார். ஊரில் இருக்கும் பெண்களை பலாத்கார வல்லுறவு செய்து கொன்று துர்சக்திகளுக்கு பலியிடுகிறார்.
நாற்பது பெண்களை பலியிட்டால் நான் வில்லாதி வில்லன், மகா மாந்த்ரீகன் என கொக்கரிக்கிறார் பிரம்ம த த்தன். அவருக்கு தன்னார்வமாக வந்து உன்னைக் கொல்வேன் என்கிறார் கேசவன் குட்டி. ராகவன் குறுப்பு என்பவரின் மருமகன். நகரத்தில் படித்தவன். ஆச்சா?
இனி கதையை நான் சொல்ல வேண்டுமா? அதேதான். பிரம்ம த த்தனின் மருமகளை கர்ப்பவதியாக்கி பிரம்ம த த்தனை கூண்டோடு பொலி போட்டு, தேவியிடம் ஆசிர்வாதம் வாங்கினால் புத்தகம் முடிந்துவிடும். முந்நூறு பக்கங்கள். கிளைமேக்ஸை நீங்கள் ஊகித்தாலும் திருப்பங்களை எதிர்பார்க்கவே முடியாது.
கார்த்தியாயினி, வசந்தசேனை, துர்சக்தி பெண்கள், ஊர்மிளா, பலியாடுகளாக இறக்கும் ஸ்ரீகலா, மாலதி, யட்சிகள், விஷ்ணுமாயா எந்திரம் என பெண்களுக்கும் திடீர் திருப்பங்களுக்கும் யாதொரு குறையும் இல்லை.
சிவனின் பிரமாதமான மொழிபெயர்ப்பில் நூல் தொடங்குவதும், முடிவதும் தெரியாது.
-கோமாளிமேடை டீம்
நன்றி: பாபு பெ.அகரம்
படம் - தி இந்து