பாலம் கட்டிய கிராமத்து மக்கள் - இது கர்நாடக நமக்கு நாமே முயற்சி!
நமக்கு நாமேதான் உதவி!
மத்திய அரசு, மாநில அரசு என நம்பாமல் தம்முடைய வாழ்க்கையை தானே தோளில் சுமக்க முடியும் என நம்புகிறவர்கள் தென்னிந்தியர்கள். இதனால்தான் எத்தனை இக்கட்டான நிலையிலும் அரசு கைவிட்டாலும் கடவுளே கைவிட்டாலும் மனிதர்கள் உதவுகிறார்கள். இதற்கான எடுத்துக்காட்டுகளை இயற்கைப் பேரிடர்களில் நாம் காணலாம்.
தற்போது கர்நாடகத்திலும் இத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இம்மாநிலத்திலுள்ள சிவமோகா மாவட்டத்திலுள்ள பிராமணகெபிகே என்ற ஊரில் மழை வெள்ளத்தில் பாலம் ஒன்று உடைந்து நொறுங்கிவிட்டது. அதனை சரிசெய்ய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. உடனே ஊடகங்களிடம் புகார் சொல்லாமல், கிராமத்தினரே களமிறங்கி கிடைக்கும் பொருட்களை வைத்து தற்காலிகமாக பாலத்தை கட்டியிருக்கிறார்கள்.
காலை 7.30க்கு வேலையைத் தொடங்கி மாலை 4.30க்கு வேலையை முடித்துவிட்டனர். பின்னே தினசரி வேலை நடக்கவேண்டுமே! கிராம பஞ்சாயத்து 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்த பாலத்தைக் கட்டியுள்ளனர்.
ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி கூட உங்களுக்குத் தோன்றலாம். அரசு அதிகாரிகள் பசி என்ற உணர்வு தோன்றும் முன்பே உணவுத்தட்டுகள் அவர்கள் முன் அடுக்கப்பட்டுவிடும். ஆனால் ஏழைகள் வேலை செய்தால் மட்டுமே அவர்களுக்கு அன்றைய தினம் சோறு கிடைக்கும். இந்த எளிய உண்மைதான் அவர்களை உழைக்க வைத்திருக்கிறது. சமாளிக்காமல் சமர்த்தாய் உழைத்திருக்கிறார்கள்.
நன்றி: தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா