வங்கிகள் இணைப்பு - அரசைக் காப்பாற்றுமா சீர்திருத்தங்கள்?



Image result for nirmala sitharaman




வங்கிகள் இணைப்பு!


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை அறிவித்துள்ளார். ஊழியர்கள் சங்கம் பயத்தையும் திகைப்பையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதனால் பயன்கள் அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 2017 ஆம் ஆண்டு 21 வங்கிகளை 12 ஆக மாற்றும் யோசனையை தேசிய ஜனநாயக கூட்டணி கூறியது. பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த இணைப்புக்கான முதலீடாக 55 ஆயிரத்து 200 கோடி ரூபாயைக் கொடுப்பதமாக அரசு கூறியுள்ளது.

பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகிய வங்கிகள் இணைகின்றன. இவற்றின் மதிப்பு 18 லட்சம் கோடி. கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி இணைப்பு மதிப்பு 15.2 லட்சம் கோடி. யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி இணைப்பு - 14.6 லட்சம் கோடி, இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைப்பு 8.08 லட்சம் கோடி

கடன் கொடுப்பதை வழங்க தனி ஏஜன்சி, 250 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கண்காணிப்பு, தன்னாட்சி அதிகாரம் என பல்வேறு விஷயங்களை அறிவித்துள்ளார். கடந்தவாரம் அறிவித்த 70 ஆயிரம் கோடி ஊக்கத் தொகையும் இதில் இணையும். 8 சதவீதமாக இருந்த ஜிடிபி 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அரசின் மோசமான நிதிக்கொள்கைக்கு ரிசர்வ் வங்கி முட்டுக்கொடுத்து வருகிறது. இதுவே அதன் பணக்கொள்கையையும் தடுமாற வைக்கிறது. டிவிடெண்ட கடந்து உபரியையும் அரசுக்கு கொடுப்பது எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

தற்போதைய நிலையில் மக்கள் சிறுசேமிப்பும் மெல்ல வீழ்ச்சியடைந்து வருகிறது. அரசு தன் கையிலுள்ள முதலீட்டை சந்தையில் முதலீடு செய்தே பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நிலையில் உள்ளது. இதற்காகவே வெளிநாடுகளில்  கடன் பத்திர வெளியீட்டையும் மத்திய அரசு செய்தது. இது அதிக அபாயத்தைக் கொண்டதுதான். ஆனால் வேறுவழியில்லை என்று அரசு கையை  விரித்துள்ளது.

அரசு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள மக்களுக்கு அரசின் திடீர் அறிவிப்புகள் வயிற்றில் புளியைக் கரைத்து வருகின்றன. பொருளாதாரத்தை முன்னேற்றும் எண்ணமில்லை அரசின் நிதிக்கொள்கையால் வங்கி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், 75 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடிகள் நடைபெற்றுள்ளதை கூறியுள்ளது. மோடி சாமர்த்தியமாக இதுபற்றி பேசாமல் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தாவியுள்ளார். மக்கள் தாம் நம்பிக்கை வைத்துள்ள தலைவர் பற்றி சிந்திக்கவேண்டிய நேரமிது.

நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா









பிரபலமான இடுகைகள்