ரோஷினி - வட இந்திய மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி- கேரளச்சாதனை!

Image result for roshini education plan in kerala
எர்ணாகுளத்தில் மாணவர்களுக்கு கல்வி!


இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தாய்மொழிக்கல்வி!

கேரள அரசு, அரசுப்பள்ளிகளில் வட இந்திய  மாணவர்களுக்கு,  அவர்களது தாய்மொழியையும், அதன்வழியாக மலையாள மொழியையும் கற்றுத்தருகிறது.

கேரள அரசு, ரோஷினி என்ற திட்டத்தை அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயற்படுத்தி வருகிறது. இதன்நோக்கம், பிறமொழி மாணவர்களுக்கு தத்தமது தாய்மொழி மற்றும் மலையாளத்தைக் கற்பிப்பது ஆகும்.  நாற்பது தன்னார்வலர்களின் உதவியுடன் அரசு, 38 பள்ளிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

கேரளத்தில் 2013ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, மேற்கு வங்காளம் (20%), பீகார் (18.10%), அசாம் (17.28%), உ.பி (17.28%) ஆகிய அளவுகளில் வட இந்தியர்கள் வாழ்கின்றனர். மலையாளத்தைப் புரிந்துகொண்டால் பணியாற்றுவது எளிது என்ற முயற்சியில் அரசு, ரோஷினி திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

Image result for roshini education plan in kerala
தன்னார்வலர்களான ஆசிரியர்கள்


 2017ஆம் ஆண்டு எர்ணாக்குளம் மாவட்டத்தில் அறிமுகமான திட்டத்தால், 48 சதவீத அளவுக்கு மாணவர்களின் இடைநிற்றல் அளவு குறைந்திருக்கிறது. கேரள அரசு, வட இந்தியர்களால் பொருளாதார பலம் பெற்றிருக்கிறது. மக்கள்தொகையில் அவர்களின் அளவு 11% இருக்கலாம் என்கிறது மேம்பாட்டு ஆராய்ச்சிக்கழகத்தின் (CMID) 2017 அறிக்கை. இடம்பெயரும் தொழிலாளர்களுக்காக 'அப்னா கர் 'எனும் வாடகை தங்குமிடங்கள், 'ஆவாஸ்' எனும் பெயரில் மருத்துவக்காப்பீடு என கேரள அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளது. ஆண்டுக்கு அரசு ரோஷினி திட்டத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்குகிறது. இதோடு பாரத் பெட்ரோலியம் சமூகப் பொறுப்புணர்வு திட்டம் மூலமாக இத்திட்டத்திற்கான செலவுகளைக் கவனித்துக்கொள்கிறது. தினசரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர், ரோஷினி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தகவல்: indiaspend.com

வெளியீடு- தினமலர் பட்டம்