சிவன் ஆடும் தாண்டவம்! - கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்!


Image result for தாண்டவம் கோட்டயம் புஷ்பநாத் நாவல்




தாண்டவம்

கோட்டயம் புஷ்பநாத்

தமிழில் - சிவன்


ஹரி கிருஷ்ணன், நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனது அப்பா காசிக்கு போகும்முன்பு கொடுத்த ஓலைச்சுவடிகளை வாசிக்கிறான். அதில் எழிமலைக்காவு கோவில் பற்றி தகவல்கள் இருக்கின்றன. அங்கு போகவேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாகிறது. அந்த ஊருக்குச் சென்றால் தங்குமிடம் கறையான்கள் அரித்துக் கிடக்கிறது. அங்கு சென்று மோகினிகளோடு சேர்ந்து துர் மந்திரவாதிகளோடு போரிட்டு தேவியை வெளியே கொண்டு வருவதுதான். கதை.

ஸ்பெஷல் என்ன?

கோபிகா, ஸ்ரீதேவிக்குட்டி, நாகவதி, விஷ்ணுப்பிரியா ஆகியோர்தான் ஹரி கிருஷ்ணனின் இன்ஸ்டன்ட் காதலிகள். இதில் நாகவதிக்கு இடம் அதிகம். நாகவதியும் பெண் கிடையாது என்பது ட்விஸ்ட்.

புஷ்பநாத் பொதுவாக சர்ச், லூசிபர் என்றால் கதையை மேலே நகர்த்த தடுமாறுகிறார். ஆனால் தறவாடு, கோவிலகம், பகவதி என்றால் கையில் கூடுதல் பலம் வருகிறது. மோகினிகள், பைசாச சக்திகள், கருடன், யட்சினி, தேவி ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி பரவசத்தைத் தருகிறார்.

இதில் ஹரிக்கு வில்லன்கள் அதிகம். அதேசமயம் ஹரி தன் செய்யும் உதவிக்கு பரிகாரமாக மோகினிகளின் பாலைப்பூ, தாமரைப்பூ வாசம் வரும் மேனிகளை சாந்தப்படுத்துகிறார். எனவே இரவில் நீங்கள் படிக்கலாம். குஜாலாக இருக்கும். இதில் கூடுதலாக நிறைய மந்திரங்களை அப்படியே எழுதிவிட்டார். கதைக்கு அது கூடுதல் பலமாக உள்ளது.

மனிதர்களுக்கு நிகராக இங்கு கழுகு, பாம்பு ஆகியவற்றுக்கு இடம் இருக்கிறது. பாராட்டலாம்.


ஐயையோ!

ஹரி கேட்கும் அதனால என்னாகும் என்ற கேள்விகள். முடியல சாமி. நமக்கே அவரின் குமட்டில் நாலு குத்து குத்தலாமா? இல்லை ஹோமம் வளர்த்து அவரை அதில் ஹோமித்து விடலாமா என்று தோன்றுகிறது. மோகினிகளிடம் இவர் கேட்கும் கேள்விகளை தொகுத்தால், அதை ராஜேஷ்குமாரிடம் அனுப்பி பதில்களை வாங்கி பிரசுரிக்கலாம். சாமி...

கறுப்பசாமி அத்தியாயங்கள் அவ்வளவு சுவாரசியமாக இல்லை. சிலசமயங்களில் அது கதையை நீட்டுவதற்காக செய்வது போல உள்ளது. நாகவதி, ஹரிக்கும் உதவும் கதையும் பாதியோடு நிற்கிறது. அதை அடுத்த பகுதியாகவும் எழுதலாம்.  கோயில் புனரமைப்புக்குழு அநியாயத்திற்கு டம்மியாக வருகிறது. கொஞ்சமேனும் உயிர்கொடுத்து தேவிக்காக ஏதேனும் செய்திருக்கலாம். ஊர் வைத்தியரைக் கொல்கிறார்கள். பெண்களை பலி கொடுக்கிறார்கள். இப்படி கள்ள மௌனம் காக்கும் ஊரைக் காக்கவா தேவி சிரமப்படுகிறாள்..

தேவி குறிப்பிட்ட ஒருவர் உள்ளே வந்த தால் அசுத்தமாகி இருக்கிறாள். அவள் தூய்மையாக யாரோ ஒருவரின் உதவி தேவை. அந்த உதவி கிடைக்காமல் தேவி எப்படி சூலத்தைப் பயன்படுத்தி கறுப்பசாமியைக் கொல்லமுடியும் என்கிற லாஜிக் மேஜிக்காக நினைவில் நிற்கிறது.

புஷ்பநாத் நாவல்கள் என்றால் என்ன இருக்கும்? அழகான மோகினி, விம்மி புடைக்கும் மார்பகங்கள், மென்மயிர்கள், ஆழமான பாதி தெரியும் தொப்பூழ் என அனைத்துமே இருக்கிறது. எனவே நீங்கள் சந்தோஷமாக தேவியின் சக்தி பெற உதவும் ஹரிகிருஷ்ணனின் லீலா வினோதங்களைப் படித்து பரவசம் பெறலாம்.

- கோமாளிமேடை






பிரபலமான இடுகைகள்