தெரிஞ்சுக்கோ - செக்லிஸ்டுகளால் என்ன பிரயோஜனம்?
தெரிஞ்சுக்கோ!
நைரோபியில் ஓர் மருத்துவமனை. நோயாளியின் மூளையிலுள்ள ரத்தக்கட்டியை அகற்றும் அறுவைசிகிச்சை. ஆபரேஷன் சக்சஸ். அப்போதுதான் தெரிந்தது. அந்த ஆபரேஷனை செய்யவேண்டிய ஆள் மாறிய கதை. ஆம். இங்குதான் மனிதர்களின் மறதியின் கதை தொடங்குகிறது; செக் லிஸ்டுகளின் அருமையும் கூடத்தான். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் செக் லிஸ்டுகளை மருத்துவர்கள் சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன்படி, 2000 இல், அதுல் கவாண்டே என்ற ஆராய்ச்சியாளர் மருத்துவர்கள், தாதியர் கவனிக்கவேண்டிய செக் லிஸ்ட ஒன்றை தயாரித்தார். இது முழுக்க அறுவைசிகிச்சை செய்யும்முன்பு அவர்கள் சரிபார்க்கவேண்டிய விஷயம். இதில் 20 விஷயங்கள் இருந்தன.
இது மருத்துவர்களுக்கு மட்டுமல்ல அண்ணாச்சி கடையில் சம்சாரம் ஏதோ வாங்கச்சொன்னாளே என்ன இது தலையைப் பிய்த்துக்கொள்பவர்களுக்கும்தான். இதுபற்றி அதுல் கவாண்டே, 2009 இல் தி செக்லிஸ்ட் மானிஃபெஸ்டோ என்ற நூலை எழுதினார்.
செக்லிஸ்டுகளை எத்தனை பக்கம் இருக்கலாம். ம்ஹூம் பக்கங்கள் எல்லாம் கிடையாது. ஒருபக்கம்தான் அதிகபட்சம் கூட.
என்ன செய்யலாம், படிக்கவேண்டியது என இரண்டுவகையாக லிஸ்டுகளைத் தயாரிக்கலாம்.
2008 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உலக சுகாதார நிறுவனத்தின் செக்லிஸ்ட்டைப் பின்பற்றினர். இதன் விளைவாக 37 சதவீத அறுவை சிகிச்சை இறப்புகள் குறைந்தன.
அப்போலோ 11 விண்கலத்தில் செக்லிஸ்டுகளின் பக்கங்கள் 113. இதற்காக 100 மணிநேரங்கள் செலவாயின.
ஃபிஷர் ஸ்பேஸ் பேனா எதற்கு உருவானது? ஈர்ப்புவிசையற்ற இடத்திலும் சரியாக எழுதுவதற்குத்தான். இதற்கான செலவு பத்து லட்ச ரூபாய்.
ஹார்வர்டு சட்டப் பல்கலையின் செக்லிஸ்டில் எத்தனை படிநிலைகள் உண்டு தெரியுமா? 32
நன்றி: க்வார்ட்ஸ்
படம் - ஜிபி