அறிவியலில் இனவேற்றுமை காட்டும் இங்கிலாந்து! - எழுத்தாளர் ஏஞ்சலா சைனி
என் முன்னோர்கள் என்பவர்கள் என் பெற்றோர்கள் மட்டுமே!
நேர்காணல்
ஏஞ்சலா சைனி
இந்தியாவை பூர்விகமாக கொண்ட அறிவியல் எழுத்தாளர். இங்கிலாந்தில் வாழும் இவர், அங்கு அறிவியல் துறையில் நிகழும் இனரீதியான பல்வேறு பிர்சனைகளை தான் எழுதியுள்ள புதிய நூலான சுப்பீரியர் தி ரிடர்ன் ஆப் தி ரேஸ் சயின்ஸில் கூறியுள்ளார்.
நீங்கள் ஒரு இந்தியர் என்பதால் இனவெறுப்பை சந்தித்திருக்கிறீர்களா?
நான் பள்ளியில் படிக்கும்போது இனவெறுப்பு சம்பவங்களைச் சந்தித்துள்ளேன். இங்கு இனவெறுப்பு என்பது சாதாரண பேச்சுகளிலிருந்து தொடங்குகிறது. நான் லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் வசிக்கிறேன். இங்கு அனைத்து வித மக்களும் வாழ்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.
நீங்கள் இந்த நூலை எழுவதற்கான காரணம் என்ன?
1930 களில் ஜெர்மன் நாஜிகள், ஆரியர்களின் இனத்தூய்மை என்ற வாத த்தை கையில் எடுத்தனர். இன்று உலகம் அதே வழியில் பயணித்து வருகிறது. வலது சாரி பாபுலிச அரசுகள் தங்களது அரசியல் வெற்றிக்காக அனைத்து துறைகளிலும் இனவாதத்தை தூண்டி வருகின்றனர். உயிரியல் அடிப்படையில் அறிவியல் அமைப்புகளிலும் இனவாதம் புகுந்துள்ளதை விளக்கவே இந்த நூலை எழுதினேன்.
மரபணுக்களை வைத்து ஒருவரின் முன்னோர்களைக் கண்டுபிடிக்கும் நிறுவனங்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்.
மரபணுக்களை வைத்து முன்னோர்களைக் கண்டுபிடிப்பது என்பது துல்லியமான முறை அல்ல. பொதுவாக நம் மரபணுக்களில் நாம் மனிதர்கள் என்பதற்கான பொதுவான மரபணுக்கள் உண்டு. ஆனால் நீங்கள் சொல்லும் நிறுவனங்களின் ஆய்வுகள் பொதுவான தகவல் முறையாக உள்ளதே ஒழிய, அதில் துல்லியம் கிடையாது. இந்தியா போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் உருவாக்கிய வெள்ளை இனவாதம் உயரியது என்ற வாதத்தை அழகு க்ரீம்கள் முதற்கொண்டு சொல்லி மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
நீங்கள் உங்களின் முன்னோர் என் பெற்றோர் மட்டுமே என்கிறீர்கள்.ஏன்?
மரபணுக்களை வைத்து முன்னோர்களை கண்டுபிடிக்கும் நிறுவனங்களை கிண்டல் செய்ய கூறினேன். இவை அதிக செலவை ஏற்படுத்தும் சோதனைகள். நான் அறிமுகமில்லாத ஒருவரை சந்தித்தால் அவருக்கு பிடித்தவை என்ன ஆர்வங்கள் என்று கேட்பேன். அது பற்றிய ஜோக்குகளைப் பகிரலாம். நிச்சயம் இனம் சார்ந்த தாக நான் பேசவோ முன்முடிவுகளை எடுக்கவோ மாட்டேன். என் பெற்றோரை ஏன் முன்னோர் என்று கூறினேன் தெரியுமா?
அவர்கள் என்னை இங்கிலாந்துக்கு அழைத்து வந்தனர். .வாழ்க்கையில் முக்கியமானவை அனைத்தையும் கற்றுக்கொடுத்தனர். நீங்கள் ஆய்வில் ஆராய்ந்து சொல்லும் யாரோ முன்னோர்கள் அல்ல.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
எழுத்து மூலம்: சர்மிளா கணேசன் ராம்.