இடுகைகள்

உலகவங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வயது 30!

படம்
                  1991 சீர்திருத்தங்களுக்கு வயது 30 நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் டாக்டர் மன்மோகன் நிதியமைச்சராக இருந்து கொண்டு வந்த தாராளமயமாக்கள் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்து நடப்பு ஆண்டோடு 30 ஆண்டுகள் ஆகின்றன . 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில் தடுமாறிய இந்தியா சீர்திருத்தங்களின் விளைவாக 6.5 சதவீத வளர்ச்சியை இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்றது மகத்தான சாதனை . உடனே நாம் சீனாவுடன் நம்மை இணைத்துப் பார்க்க கூடாது . அங்கு ஒரு கட்சி ஆட்சிமுறையோடு அரசியல் கொள்கையும் வலுவாக இருந்ததால் பொருளாதாரத்தில் இந்தியா எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்கள் . உள்நாட்டிற்கான வணிகத்திலும் நிலையான இடத்தை பிடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும்படி வளர்ந்துவிட்டார்கள் .    இந்திய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஐந்து மடங்கு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது . ஆனால் வறுமை ஒழிப்பில் பெரிதாக சாதிக்க முடியவில்லை . நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள வர்க்கத்தினரை பெரிதாக மேலே கொண்டு வர இயலவில்லை . ஆனாலும் சந்தையை விரிவாக்கியதில் இந்தியா முக்கியமான சாதனையை செய்துள்ளது