இடுகைகள்

எழுத்தாளர் கருப்பினத்தவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பர் என்று நினைக்க வற்புறுத்தாதீர்கள்! - ஜேம்ஸ் பேல்ட்வின்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜேம்ஸ் பேல்ட்வின்! அமெரிக்காவின் ஹர்லேமில் 1924 ஆம் ஆண்டு பிறந்த பேல்ட்வின் எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். ஓவியரான பியுஃபோர்டு டெலனி, கருப்பினத்தில் எதிர்பார்க்காத கலைஞன் என்று இவரைப் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். இவரது படைப்புகள் 1947 ஆம் ஆண்டில் முதன்முறையாக  வெளியாகின. பின்னர், கட்டுரைகள் வெளியாகி கவனம் பெற்றன. பின் நோட்ஸ் ஆஃப் நேட்டிவ் சன் என்ற நாவல் (1950) வெளியானது. ஜியோனிஸ் ரூம் என்ற இரண்டாவது நாவல் இவரை உலகறிய வைத்தது. காரணம் அதிலிருந்த பாலுறவு பற்றிய விஷயங்கள்தான். இதில் ஓரினச்சேர்க்கை விவகாரங்கள் ஏராளம் இருந்த்தால் சர்ச்சைகள் சுழன்றடித்தது. அதனால் நூலை வெளிநாடுகளில்தான் வெளியிட்டார்.  இருபதாம் நூற்றாண்டுகளில் மழை, பனி என சக கவிஞர்கள் எழுதி பிரசவிக்க, கருப்பினத்தவர்களின் வாழ்க்கை பற்றி எழுதி மிரட்டியவர் ஜேம்ஸ் பேல்ட்வின். இன்றும் அக்கால வாழ்க்கை பற்றி அறிய இவரது கட்டுரைகளைப் படித்தால் போதும்.  பேல்ட்வின் பிறக்கும்போது, தாய் தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று வயதாகும்போது டேவிட் பேல்ட்வின் என்பவரை மணந