இடுகைகள்

நேர்காணல்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறப்புக் குழந்தைகளை ஒதுக்கும் கஜகஸ்தான் அரசு!

படம்
மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறைபாடுகளைக் கொண்ட சிறப்புக்குழந்தைகளை அரசு பள்ளிகளிலிருந்து அதிரடியாக நீக்கி வருகிறது. எந்த அரசு, கஜகஸ்தான் அரசின் புதிய சீர்திருத்தம் இது. இதன்மூலம் சிறப்புக்குழந்தைகள் சமூகத்திலிருந்து பிரிக்கப்படும் அவலம் நேருகிறது.  நேர்காணல்: மிஹ்ரா ரித்மன் செய்தியாளர் பிலிப்பா ஸ்டீவர்ட்.  மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதுகுறித்த செய்தியை எப்படி அறிந்தீர்கள்? கஜகஸ்தான் அரசு, தன் நாட்டு பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஏதேனும் நடவடிக்கைகளை செய்யும் என்று பலரும் கருதிவந்தோம். ஆனால் இன்று அரசின் நடவடிக்கைகளை அறியவரும்போது அந்த நம்பிக்கை வீண் என்று உணருகிறோம். சிறப்பு குழந்தைகளுக்கு ஏன் பிற குழந்தைகள் பெறும் கல்வியைப் பெறத் தகுதியில்லை? அரசு இதுகுறித்து நிச்சயம் எங்களுக்கு விளக்கியே ஆகவேண்டும். அரசு என்ன விதிகளை மீறியுள்ளது? 2015 ஆம் ஆண்டு கஜகஸ்தான் அரசு, சிறப்புக்குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளைப் போலவே கல்வி அளிப்பதாக ஒப்புக்கொண்டது. தற்போது அந்த விதியை க் குற்றவுணர்வின்றி மீறியிருக்கிறது. மேலும் பள்ளிகளில் சிறப்புக...

புலிகளைப் பெருக்குவது எளிதான காரியமல்ல

படம்
நேர்காணல் ராஜேஷ் கோபால் (முன்னாள் வனத்துறை அலுவலர்) வேட்டையாடுதல் அதிகரிக்க காரணம் என்ன? புலிகள் காப்பகத்தில் வேட்டையாடுதல் அதிகரித்திருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. புலிகளை பாதுகாப்பதில் உள்ளூர் காரர்களின் ஆதரவும் தேவை. இல்லையெனில் அதனை சாத்தியப்படுத்த முடியாது. குளோபல் டைகர் ஃபாரம் இதற்கு என்ன திட்டம் வைத்துள்ளது.? தெற்காசிய நாடுகளில் புலிகளின் பாதுகாப்பை குளோபல் டைகர் ஃபாரம் உறுதி செய்கிறது. திட்டம், அதற்கான விஷயங்களை தீர்மானிப்பது ஆகியவற்றை எங்கள் அமைப்பு செய்கிறது. காட்டு விலங்குகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என கூறலாமா? இந்த வாதத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பதிமூன்று புலிகள் காப்பகத்தில் அதிக புலிகளை பாதுகாத்திருப்பது இந்தியாதான். ஏறத்தாழ 70 சதவீதம்தான். உலகிலுள்ள 60 சதவீத காடுகளில் இந்தியாவின் பங்கு 0.06 ஹெக்டேர்கள்தான். காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல்களை தவிர்க்க அரசு இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 2020 ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கிவிட முடியுமா? புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது இயற...

சோதனை ஜெயித்தால் இந்தியா நொறுங்குவது உறுதி!

படம்
படம்: தி இந்து நேர்காணல் அசாமின் குடியுரிமைச்சட்ட மசோதா இந்தியாவின் அடிப்படைடையைத் தகர்க்கிறது.  யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியா கட்சி தலைவர் தமிழில்: ச.அன்பரசு ஆங்கில மூலம்: பிரீத்திகா கன்னா(லிவ் மின்ட்) அசாமின் குடியுரிமை சட்ட மசோதாவை எப்படி பார்க்கிறீர்கள்? இந்திய நாடாளுமன்றத்தில் அமலான மசோதாக்களிலேயே பெரும் நாசகர அழிவை ஏற்படுத்தும் மசோதா இதுவே. ஏனெனில் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது இம்மசோதா. மதம் சார்ந்து மக்களை குடியுரிமை பெற வற்புறுத்துவதாக இம்மசோதா அமைகிறது. மதம் பொறுத்து  ஒருவரை தீண்டத்தகாதரவராக கருதமுடியாது என்று கூறும் அரசியலமைப்பின்  15 ஆம் பிரிவுக்கு இது எதிரானது. முஸ்லீம்கள் வாழ்வது பாகிஸ்தான், இந்துக்கள் மட்டுமே வாழ்வது இந்தியா என்ற பொருளை அழுத்தமாக இம்மசோதா ஏற்படுத்துகிறது. ஜின்னா மற்றும் சாவர்க்கரின் சிந்தனைவழியே இச்சட்ட மசோதா செல்கிறது. இவ்வழியில் நாம் நடப்பது குடியரசு நாடான இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றாக  அழித்துவிடும். இம்மசோதாவுக்கு எதிராக நிற்பது இந்தியர் ஒவ்வொருவரின் கடமையும் கூடத்தான். வடகிழக்கு மாநிலங்களை பி...

இந்திய அணி சிறந்த அணியா என்று தெரியவில்லை

படம்
எண்பதுகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடியதற்கும் இப்போது விளையாடியதற்கும் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள். இன்றைய வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். நல்ல வலிமையாக இருக்கிறார்கள். மேலும் இதில் ஒப்பீடு தேவையில்லை. அணிக்கு என்ன  தேவையோ, அதனை அளிக்க தயாராக இருக்கிறார்கள். டெஸ்டில் ஜெயிக்க தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதை இந்திய அணி உணர்ந்திருக்கிறது. இருபது விக்கெட்டுகளை சாய்க்கும் திறன்கொண்ட வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். ஆல் ரவுண்டராக இருப்பதன் சவால்கள் என்னென்ன? கிரிக்கெட்டை ஆறுமாதங்கள் விளையாடுகிறீர்கள் என்றால் அனைத்து துறைகளிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதுவே பத்து மாதங்களாகும்போது பந்து வீச, பேட்டிங், பீல்டிங் என பல்துறையிலும் உங்களை தக்க வைக்க போராட்டம் தொடங்கிவிடும். என்னால் இவற்றை இயல்பாக சமாளிக்க முடிந்தது இயற்கையின் இறைவனின் கருணை என்றுதான் கூறவேண்டும். காயங்களை எப்படி சமாளித்தீர்கள்? சிறிது இடைவெளி எடுத்து பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் போதும். ஆனால் இப்போதைய அணி இதுபோல சொகுசை விரும்புவதில்லை. நீங்கள் பந்துவ...

நாட்டின் முடிவுகளில் பெண்களுக்கு பங்கில்லையா?

படம்
நடுவிலுள்ள பெண் தாரா கிருஷ்ணமூர்த்தி நேர்காணல் தாரா கிருஷ்ணசாமி, பெண் உரிமை ஆர்வலர். அரசியலுக்கு பெண்கள் வரவேண்டுமென ஏன் கூறுகிறீர்கள்? பெண்கள் நிறையப்பேர் எம்எல்ஏ, எம்பியாக உருவாவது அவசியம். சுதந்திரமாகி எழுபது ஆண்டுகளாகியும் மக்களவையில் பெண்களுக்கு 11 சதவிகித இடம்தான் உள்ளது. மாநில சட்டமன்றத்தில் 9 சதவிகித இடம்தான் உள்ளது. மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பெயருக்கு கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கிடையாது. நாட்டின் முக்கிய தீர்வுகளில் பெண்களுக்கான பங்கே இல்லாமல் போனால் என்னாகும்? பாலின பாகுபாடாக உங்களுக்கு தெரியவில்லையா? பெண்களை அரசியலுக்கு இழுக்க இது சரியான நேரமா? இது இந்தியக்குடிமக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு உறுதியளித்த உரிமைகள். மீடூ முதல் பெண்ணுரிமைகள், அரசியல் சமநிலை என அனைத்தையும் பெற பெண்கள் தகுதியானவர்கள்தான். ஆனால் அதிகாரமளிக்க பயப்படுபவர்கள், பெண்கள் மீது அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர். பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அவர்கள் அரசியலுக்கு வரவில்லை என புரிந்துகொள்ளலாமா? அரசியல் கட்சிகளில் லட்சக்கணக்கான பெண் தொண்டர்கள் உண்டு. 8 ச...

ஜஹாங்கீருக்கு பேரரசர் ஆகும் ஆசை இருந்தது

படம்
நேர்காணல் பார்வதி சர்மா, எழுத்தாளர் ஜஹாங்கீரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு பாபர் பற்றிய குழந்தைகள் நூல் ஒன்றை எழுதினேன். பிறகு, நாவல் எழுதுவதற்கான முனைப்பில் இருந்தேன். அப்போது என் நண்பர்கள் வரலாற்று நூல் ஒன்றை எழுதலாமே என பரிந்துரைத்தனர். ஜஹாங்கீரைத் தேர்ந்தெடுத்து எழுத நினைத்தேன்.  வரலாற்றில் ஜஹாங்கீர் பலவீனமான அரசர், குடிகாரராக அறியப்படுகிறார். அவரை சித்தரிப்பதில் என்ன வித சவால்களை சந்தித்தீர்கள்? அக்பரின் மகன் ஜஹாங்கீர். நீங்கள் கூறியதுதான் அவரைப்பற்றி பலரும் அறிந்த செய்தி. வேறு செய்திகளும் அவரைப்பற்றி யாருக்கும் தெரியாது. முகலாயர்கள் கூட அவரைப்பற்றி மறந்துவிட்டார்கள். அக்பரின் நிழலில் வளர்ந்தவருக்கு அடையாளம் கூட ஷாஜகானின் அப்பா என்பதுதான். இரண்டு மன்னர்களுக்கு இடையே ஜஹாங்கீர் காணாமல் போய்விட்டார் என்றுதான் கூறவேண்டும். அவர் மதுவில் மயங்கி கிடந்தார் என்பதில் பொய் இல்லை. ஆனால் பேரரசர் என்ற பதவியின் மேல் பேராசை கொண்டவர் ஜஹாங்கீர். எளிதாக அந்த விஷயம் நடக்கவில்லை என்பதோடு மகனுடன் ஒப்பிடப்படும் அவலத்தையும் அவர் சந்தித்தார்.  ...

"மக்களைப் பற்றி அரசு கவலைப்படவேயில்லை"

படம்
பெல்ஜியத்தில் பிறந்த ஜீன் ட்ரெஸ், புகழ்பெற்ற இந்திய பொருளாதார வல்லுநராக உள்ளார்.  எஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேத்தமேட்டிகல் எகனாமிக்ஸ் படித்தவர், 1982 ஆம் ஆண்டு இந்திய புள்ளியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் ஜீன். லண்டன் பொருளாதார பள்ளி, டெல்லி பொருளாதார பள்ளியில் பாடம் கற்றுத்தருவதோடு ராஞ்சி பல்கலையிலும் வருகைதரும் பேராசிரியராக உள்ளார் ஜீன் ட்ரெஸ். கிராம மேம்பாடு, சமூக பாகுபாடு, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு, உடல்நலம், உணவு பாதுகாப்பு, தொடக்க கல்வி ஆகியவற்றைக் குறித்த பல்வேறு ஆய்வுகளை செய்து நூல்களை ( An Uncertain Glory: India and Its Contradictions, Hunger and Public Action ,  India: Development and Participation , and  India: Economic Development and Social Opportunity )எழுதியுள்ளார். அண்மையில் எழுதிய நூல்  Sense and Solidarity: Jholawala Economics for Everyone . பணமதிப்பு நீக்கம் அமுலாகி இரு ஆண்டுகளாகின்றன. இதன் விளைவாக 82% மக்களின் பணம் செல்லாது போன விளைவுகளை தாக்கத்தை இன்றும் அனுபவிக்க முடிகிறது. பொருளாதார வல்லுநராக இது பற்றி தங்கள் கருத்து? ...

குடும்ப வன்முறையை ஆதரிக்கும் ரஷ்ய அரசு!

படம்
நேர்காணல்! "அரசுக்கு சாதாரண தாக்குதல்களுக்கும் குடும்ப வன்முறைக்கும் வேறுபாடு தெரியவில்லை" யூலியா கார்புனோவா, ஆய்வாளர்(மனித உரிமை கண்காணிப்பகம்) தமிழில்: ச.அன்பரசு ரஷ்ய பெண்களுக்கு வீட்டில் இழைக்கப்படும் வன்முறைச்சம்பவங்களுக்கு தண்டனை கிடையாது என்பது உண்மையா? ரஷ்யாவில் குடும்ப வன்முறைகளுக்கென தனிச்சட்டம் கிடையாது. பெண்களை தாக்குபவர்களுக்கு தாக்குதல் சட்டப்பிரிவில் தண்டனை உண்டு. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அரசு இந்த சட்டத்தையும் பலவீனமாக மாற்றியுள்ளது சரியான அணுகுமுறை அல்ல. குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு இனி தீர்வு கிடைப்பது மிக கடினம். அரசு, தாக்குதல்களுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் உள்ள வேறுபாடு புரியாததே இதற்கு காரணம். சட்டத்தின் தண்டனையை சற்று விளக்குங்களேன். குடும்பத்திலுள்ள ஒருவர் பெண்களை தாக்கினால் அவர் ஓராண்டுக்கு கைது செய்யப்படமாட்டார். பார்க்கிங் குற்றத்திற்கு விதிக்கப்படும் வகையில் சிறிய அபராதத்தை கட்டினால் போதும். இது கணவர்களுக்கு உங்கள் மனைவியை தாக்கினாலும் பிரச்னையில்லை என க்ரீ...

பசுக்கள் கொல்லப்பட்டது ஏன்? கசாப்பு கடைக்காரரை தேடும் போலீஸ்!

படம்
டிச. 3 அன்று உ.பியின் புலந்த்சாஹரில் நடந்த பசுப்படுகொலையில் இன்ஸ்பெக்டர் ஒருவரோடு இளைஞரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுபற்றி முதல்வர் யோகி எதுவும் பேசவில்லை. பசுவைக்கொன்றதை மட்டும் சாதுர்யமாக பேசி விலகிக் கொண்டுவிட்டார். நேர்காணல் உத்தரப்பிரதேச டிஜிபி ஒபி சிங். வலதுசாரி குழுக்களின் கொலைவெறித்தாக்குதல் அது. வழக்கு விசாரணையில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா? கலவர படுகொலை தொடர்பாக  எட்டு நபர்களை கைது செய்துள்ளோம். இது குறித்த விசாரணை இன்னும் நடந்து வருகிறது. கலவரத்திற்கு காரணமான ஒவ்வொரு வரும் கைது செய்யப்படுவது நிச்சயம. காவல்துறை இதுவரை கலவரத்திற்கு காரணமான வலதுசாரி இயக்கங்களை சேர்ந்தவர்களை ஒருவரைக்கூட பெயரை கூறவில்லையே? பசுப்படுகொலை செய்தவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சியா இது? ஏன் குறிப்பிட்ட அமைப்புகள்தான் காரணம் என முடிவு செய்து இப்படி கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக 27 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.  ஒவ்வொருவரையும் பற்றிய விஷயங்களை நாங்கள் பதிவு செய்து வருகிறோம். இப்போது ராணுவத்தைச் சேர்ந்த ஜீத்து என்பவரைப் பற்றி...

இந்தியாவின் சகிப்புத்தன்மை என்னை ஈர்க்கிறது!

படம்
நேர்காணல் ஸ்டீவன் பிங்கர் உலகம் மோசமான திசையில் செல்கிறது என்று எப்படி கூறுகிறீர்கள்? உலகில் பல்வேறு நாடுகளிலுள்ள மக்கள் நேர்மறையான விஷயங்கள் நடந்துவருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், அவர்கள் பெரும்பான்மையாக ஊடகங்களில் வரும் செய்தியை நம்பியிருக்கிறார்கள். உலகில் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு நாட்டில் இடையறாத போர், அரசியல் படுகொலைகள், தொற்றுநோய்கள் ஆகிய  பிரச்னைகள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால் ஊடகங்கள் இவற்றை மறைத்து செய்தி என்ற பெயரில் வேறொன்றை உருவாக்கி மக்களுக்கு அளிக்கிறார்கள். இன்று உலகின் தேவை டேட்டா மட்டுமே. அதில் மக்களின் அனைத்து விருப்பங்களையும் உள்ளடக்கி விடுகின்றனர். உலகில் நடக்கும் சீர்கேடுகளுக்கு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறுகிறீர்களா? அரசு அமைப்புகளில் நடைபெறும் ஊழல் , மெத்தனங்கள், அநீதிகளை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதாக பத்திரிகையாளர்கள் நினைக்கின்றனர். ஆனால் இது பைத்தியக்காரத்தனம். பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகளை தேடாமல் அடுத்தடுத்த பிரச்னைகளை தேடி செல்வது சரியான அணுகுமுறை அல்ல. கடந்த காலத்தின் மீது பேரார்...

66ஏ சட்டம் காலாவதியான ஒன்று!

படம்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் குற்றவழக்குகளை ஃபேஸபுக்கில் பட்டியலிட்ட ஜாகிர் அலி தியாகி, காவல்துறையால் கைது செய்யப்பட்டு  செக்‌ஷன் 66 ஏ மூலம் குற்றச்சாட்டு பதியப்பட்டது(2017). நேர்காணல்: அபினவ் சேக்ரி, அபர் குப்தா(Freedom foundation) கைது செய்து 42 நாட்களுக்கு பிறகு அலி மீது தகவல்தொழில்நுட்ப சட்டத்தில் குற்றம் பதிவாகிறது. பின்னர் பெயில் கிடைத்து வெளிவந்தபின்பு தேசதுரோக குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்வது நீதிமன்றம் மற்றும் சட்டத்தை மீறுவது ஆகாதா? போலீஸ் தியாகியை கைது செய்து வேறு வழக்கில் குற்றம் பதிவு செய்தாலும் ஊடகங்களில் அவ்வழக்கு பேசப்பட்டவுடன் பல்வேறு குற்றங்களை சொல்லி வேறு பிரிவுகளில் வழக்கினை மாற்றிவிட்டது.  கணினி தொடர்பான குற்றங்களை பதிவு செய்வதை தேசிய குற்றப்பதிவு ஆணையம் 2016 ஆம் ஆண்டே நிறுத்திவிட்டது. 66ஏவுக்கு பதிலாக 67 ஐ காவல்துறை தற்போது பயன்படுத்தி வருகிறது என்பதை மும்பையில் செயல்படும் பாய்ண்ட் ஆஃப் வியூ அமைப்பு கண்டறிந்து கூறியுள்ளது.  உச்சநீதிமன்றம் 66ஏ வகை வழக்குகளை பெருமளவு கைவிட்டாலும் கீழ் கோர்ட்டுகள், காவல்துறை அதில் வழக்கு ...

பேச்சுக்கள் உங்களை மாற்றும் என்பது நிச்சயம்! - TED இயக்குநர்!

படம்
TED சொற்பொழிவுகள் உலகம் முழுக்க பிரபலமானவை. அதனை தொடங்கியவர் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட கிறிஸ் ஆண்டர்ஸன். டெட் சொற்பொழிவு நிகழ்ச்சியை தொடங்கியதற்கு காரணம் என்ன? தொண்ணூறுகளில் நான் ரசித்து கேட்ட மாநாடு வெகுநேரம் அமர்ந்துகேட்டாலும் சலிக்கவில்லை. காரணம், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கருத்துக்கள்தான். தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, டிசைன் என மூன்று தலைப்பில் சாதித்தவர்களை பேச வைக்கும் திட்டம் அப்போதுதான் எனக்கு தோன்றியது. சொற்பொழிவுகளை இணையத்தில் உருவாக்கி பின்னர் அதனை மொழிபெயர்த்து வெளியிட்டோம். இது லாபநோக்கு நிறுவனம் அல்ல. எப்படி பேச்சாளர்கள் கிடைக்கின்றனர்? தங்களது ஐடியாக்களை மக்கள் முன்பு வைக்க இது ஒரு தளம். அவர்களாக பேசுவதற்கு முனவருகிறார்கள். இதில் பேசுபவர்களுக்கு பணம் தரப்படுவதில்லை. எங்களிடமுள்ள குழு மூலம் அறிவியல், டிசைன் துறையில் வித்தியாச முயற்சிகளை செய்பவர்களை நாங்கள் பேச அழைக்கிறோம். விருப்பமிருந்தால் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். பேசுவது என்பதை கலை என்கிற கண்ணோட்டம் உங்களுக்கு இருக்கிறதா? வெறும் கலை மட்டுமல்லை; தொன்மையான கலை. மக்கள் மு...

'சிலிகன்வேலி தனிநபரின் ஆதிக்கத்திலுள்ளது'

படம்
நேர்காணல்! "சிலிகன் வேலி தனிநபர்களின் கைப்பிடிக்குள் வந்துவிட்டது" ஆடம் ஃபிஷர், டெக் எழுத்தாளர். தமிழில்: ச.அன்பரசு வேலி ஆஃப் ஜீனியஸ் நூலிற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்திருப்பீர்கள். குறிப்பாக நூலெங்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டுள்ளீர்கள். எழுதியது உண்மை. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒருமுறை கூட பேட்டி எடுக்கவில்லை. மக்களுக்கு வெற்றிபெற்ற ஸ்டீவ்ஜாப்ஸின் கருத்துக்களை அறியபிடித்திருக்கிறது. 200 மனிதர்களைப் பற்றி பலமணிநேரங்கள் பேசி பதிவு செய்த பத்து மில்லியன் வார்த்தைகளை 500 பக்கங்களாக மாற்ற 4 ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டது. நீங்கள் எழுதியதில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன? ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவுதினத்திற்கு வரவேற்கப்பட்டும் கூட அங்கு போகமுடியாத ஸ்டீவ் வோஸ்னியாக்கிடம் பேசியது முக்கியமானது. அதோடு ஸ்டீவ் ஜாப்ஸ் தன் படுக்கையில் இறக்கும் முன்பு அமிலத்தை அருந்தினார் என பல்வேறு நூல்களில் வதந்தியாக எழுதப்பட்டிருந்ததன் உண்மையை அறிந்து கண்டுபிடித்தது பெரும் சுவாரசியம். சிலிகன் வேலியை மக்கள் எப்படி பார்க்க விரும்புகிறீ...

அக்பர் பதவி விலகி வழக்கை சந்திப்பதே நியாயம்! - பிரசாந்த் கிஷோர்

படம்
நேர்காணல் “குற்றமற்றவர் என நிரூபிக்க பதவி விலகி வழக்கை சந்திப்பதே ஒரே வழி” பிரசாந்த் கிஷோர், துணைத்தலைவர்,ஜனதாதள்(U). தமிழில்: ச.அன்பரசு 2012 ஆம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக தேர்தலில் ஜெயித்தபோது உலகிற்கு அறிமுகமானவர், பிரசாந்த் கிஷோர். ஐ.நா சபையில் எட்டு ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பின்னாளில் 2014 ஆம் ஆண்டு பாஜக பொதுதேர்தலில் வெல்ல உதவியவர், தற்போது பீகாரின் ஜனதாதள் கட்சியின் துணைத்தலைவராக உள்ளார். மோடி, ராகுல்காந்தி இருவரிடையே பணியாற்றிய வகையில் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள். விரைவில் இதுகுறித்த நூலை வெளியிடவிருக்கிறேன். மோடி, புதிய கடுமையான சவால்களை ஏற்க விரும்புபவர். ராகுல்காந்தி தன் முப்பது வயதில் நூறு ஆண்டு பழமையான கட்சியை வழிநடத்தி வருகிறார். ராகுலின் இடத்தில் பல்வேறு மாற்றங்களை உடனடியாக செயல்படுத்துவது சிரமம். தனிப்பட்டரீதியில் ராகுல்காந்தியுடன் நட்பில் இருந்தாலும் தொழில்ரீதியாக காங்கிரஸூடன் நீங்கள் முரண்படுகிறவர் இல்லையா? காங்கிரஸ் கட்சிக்காக உ.பி தேர்தலில் எங்கள் குழு பணிபுரிந்தது உண்மை. கூட்டணி மூலம் காங்கிரஸ் பஞ்சா...

இளைஞர்களை புரிந்துகொள்வது ஈஸி!

படம்
 நேர்காணல் இளைஞர்களை புரிந்துகொள்வது ஈஸி! பேராசிரியர் சாராஜேன் பிளாக்மோர். தமிழில்: ச.அன்பரசு நம்மில் பலருக்கும் இளைஞர்களை புரிந்துகொள்ள முடியாத அங்கலாய்ப்பு உள்ளது. ஏன்? இளைஞர்களின் மூளை தொடர்ச்சியாக வளர்ந்துவருகிறது. மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் வழியாக ஆராய்ச்சி செய்யும் வரை மூளை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வளர்வதில்லை என பல ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் மூளை இருபது வயதுக்கு பிறகும் வளர்ச்சியடைவதே உண்மை. குழந்தைகளின் மூளை –- இளைஞர்களின் மூளை என்ன வேறுபாடு? குழந்தைகளின் மூளையிலிருந்து இளைஞர்களின் மூளை உறுதியான பல்வேறு மாற்றங்களை(வடிவம், ஆற்றல் உட்பட) காண்கிறது. இவை ஒரே நாளில் மாற்றங்களைப் பெறுவதில்லை. என்ன மாற்றங்கள் என கூறுங்கள். வெள்ளை, கருப்பு என இருபகுதிகளால் மூளை உருவாகியுள்ளது என உதாரணமாக கொள்வோம். மூளையின் நியூரான்களை இணைப்பதற்கு சினாப்செஸ் என்று பெயர். வெள்ளை நிறப்பகுதியில் உள்ள பல்வேறு இழைகள் மூலம் பிறருடன் தொடர்புகொள்வதற்கான விஷயங்கள் நடக்கின்றன. டீன் ஏஜ் பருவத்தில் வெள்ளைநிறப்பகுதி அதிவேகமாக வளர்ச்சிபெறுகிறது.  அதே...

தலித் இளைஞர்கள் முன்புபோல இல்லை! - மிலிந்த் காம்ப்ளே

படம்
 நேர்காணல் “தலித் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை மீது கவனமுடன் உள்ளனர்” மிலிந்த் காம்ப்ளே, தலித் வணிக அமைப்பு தலைவர். தமிழில்: ச.அன்பரசு அண்மையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தலித் சென்ற சொல்லுக்கு பதிலாக பட்டியல் இனம் என்பதை பயன்படுத்த ஊடங்களை அறிவுறுத்தியுள்ளது. இதுபற்றி தங்கள் கருத்து? தலித் வர்த்தக அமைப்பு (Dalit Indian Chamber of Commerce and Industry (DICCI)) என்ற பெயரிலுள்ள தலித் என்ற சொல்லை மாற்றும் அவசியம் எங்களுக்கு கிடையாது. அரசு உத்தரவை மதிக்கிறேன்; ஆனால் தலித் வார்த்தையை பயன்படுத்தும் சுதந்திரம் தனிப்பட்டவர்கள் அனைவருக்கும் உண்டு. தலித் என்ற சொல் விளிம்புநிலை மக்களை நேரடியாக குறிப்பது. இதனை அவ்வளவு எளிதில் கைவிட்டுவிட முடியாது. இன்று தலித்துகள் தம் உரிமைகளுக்காக போராட்டம், வன்முறை என களமிறங்கியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? தலித்துகள் மற்றும் பழங்குடிகளின் வன்முறை போராட்டம் என்று நீங்கள் கூறுவது 5 சதவிகிதத்திற்கும் குறைவு. ஆனால் பல்லாண்டுகளாக தலித்துகள் மீது பிற சமூகத்தினர் செலுத்தும் தீண்டாமை, புறக்கணிப்பு ஆகி...