பேச்சுக்கள் உங்களை மாற்றும் என்பது நிச்சயம்! - TED இயக்குநர்!
TED சொற்பொழிவுகள் உலகம் முழுக்க பிரபலமானவை. அதனை தொடங்கியவர் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட கிறிஸ் ஆண்டர்ஸன்.
தொண்ணூறுகளில் நான் ரசித்து கேட்ட மாநாடு வெகுநேரம் அமர்ந்துகேட்டாலும் சலிக்கவில்லை. காரணம், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கருத்துக்கள்தான். தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, டிசைன் என மூன்று தலைப்பில் சாதித்தவர்களை பேச வைக்கும் திட்டம் அப்போதுதான் எனக்கு தோன்றியது. சொற்பொழிவுகளை இணையத்தில் உருவாக்கி பின்னர் அதனை மொழிபெயர்த்து வெளியிட்டோம். இது லாபநோக்கு நிறுவனம் அல்ல.
எப்படி பேச்சாளர்கள் கிடைக்கின்றனர்?
தங்களது ஐடியாக்களை மக்கள் முன்பு வைக்க இது ஒரு தளம். அவர்களாக பேசுவதற்கு முனவருகிறார்கள். இதில் பேசுபவர்களுக்கு பணம் தரப்படுவதில்லை. எங்களிடமுள்ள குழு மூலம் அறிவியல், டிசைன் துறையில் வித்தியாச முயற்சிகளை செய்பவர்களை நாங்கள் பேச அழைக்கிறோம். விருப்பமிருந்தால் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகிறார்கள்.
பேசுவது என்பதை கலை என்கிற கண்ணோட்டம் உங்களுக்கு இருக்கிறதா?
வெறும் கலை மட்டுமல்லை; தொன்மையான கலை. மக்கள் முன்பு தோன்றி உங்களது சிந்தனையை கூறும்போது மக்களின் கருத்துக்களையும் பதிலுக்கு நீங்கள் அறிந்துகொள்ள முடியும். பேச்சு சிறப்பாக இருந்தால் கருத்து எளிமையாக மக்களிடம் சென்று சேரும். நிகழ்ச்சியை நடத்துவதற்கு வணிக அமைப்புகளின் நன்கொடைகள் உதவுகின்றன. மேலும் இந்நிகழ்ச்சிக்கான பாஸ்களை குறிப்பிட்ட தொகைக்கு விற்கிறோம்.
பேச்சுக்கள் வழியாக மாற்றம் நடக்கும் என நம்புகிறீர்களா?
பேச்சுக்களின் வழியாக கிடைக்கும் சிந்தனை தனிநபர்களிடம் மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்த பேச்சுக்கள் கேட்பவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான ஒரு வழி. ஒரு வாய்ப்பு.
தொழில்முனைவோராக உங்களது வாழ்க்கையை தொலைத்துவிட்டோம் என உணர்கிறீர்களா?
நான் செய்வது மிகச்சிறப்பான செயல் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இருநூறு பேர்களை மட்டுமே நியூயார்க்கில் கொண்டிருக்கிறோம். ஆனால் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்நிகழ்வை நடத்த உதவுகிறார்கள். இவர்களே நிகழ்வை நூறுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கிறார்கள். .உலகில் அனைத்து பகுதிகளிலும் தினசரி பத்து நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
குழந்தைகளுக்கு சொற்பொழிவுகளை தொடங்கும் எண்ணமிருக்கிறதா?
கல்வி தொடர்பான டெட் சொற்பொழிவுகள் குழந்தைகளுக்கு உதவக்கூடும். கல்வி தொடர்பான ஆறு நிமிஷங்கள் ஓடும் வீடியோக்கள் அவர்கள் பார்க்கலாம். ஆனால் போகிமான் கோவை விட்டு அவர்கள் இதை பார்ப்பார்களா என்று தெரியவில்லை.
இந்தியாவில் ஸ்டார்டிவியுடன் ஒப்பந்தமிட்டுள்ள கிறிஸ் ஆண்டர்சன் அதனை தொகுத்து வழங்க ஷாருக்கானை அணுகியுள்ளார். விரைவில் இதன் ஒளிபரப்பு ஸ்டார்டிவியில் தொடங்கும்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.