இடுகைகள்

கீரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல் எடையைக் கூட்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்! - உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?

படம்
  உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தினசரி வாழ்வில் ஊறுகாய் முதல் உப்புக்கண்டம் வரை ஏராளமான பதப்படுத்தப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். பதப்படுத்தப்பட்ட பொருட்களின் மூலம் உடலில் சேர்பவை என்னென்ன? சர்க்கரை, கொழுப்பு, உப்பு (சோடியம்). உண்மையில் பதப்படுத்தப்பட்ட பொருட்களை முழுக்க தவிர்க்க முடியாது. ஏனெனில், காய்கறி, பழங்களை விட பதப்படுத்தப்பட்ட பொருட்கள் நாற்பது சதவீதம் விலை குறைவானவை. பொருளாதார நோக்கில் பார்த்தால் மக்களுக்கு இப்பொருட்களை வாங்குவது பர்சைக் கடிக்காத விஷயம். ஆனால், ஆரோக்கிய நோக்கில் பார்த்தால் உடல் ஆரோக்கியத்தை இழக்க வேண்டி வரும். உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வந்தால் அதை எதிர்கொள்வது இன்னும் கடினமானது. வெளிநாடுகளில், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 70 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஒருவர் பத்து சதவீதம் உண்டபோது, அவருக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு 25 சதவீதம் அதிகரித்தது. அதாவது, ஆரோக்கியமான உணவுகளை உண்பவர்களை விட ஏழு மடங்கு அதிக எடை ஆபத்து உருவானது. வீட்டுச் சமையலில் பயன்படுத்தாத பதப்படுத்தப

அகோர பசியை எதிர்கொள்ளும் வழிமுறை!

படம்
  எப்போதும் பசி அமெரிக்காவில் உள்ள மக்களில் 61ச தவீதம் பேர் சர்க்கரை, மாவுச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். அவை ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளை மனத்தூண்டல் பெற்றதால் எடுத்து சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதயநோய் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, இலைக்காய்கறிகளை, புரதம் கொண்ட தானிய வகைகளை மெல்ல உண்ணக் கற்பதுதான். உடலுக்கு உணவை சரியான முறையில் பழக்கப்படுத்துவது அவசியம். ஒருவர் காலை எட்டு மணிக்கு இட்லியும் வடகறியும் சாப்பிடுவது வழக்கம் என்றால் அதை அவர் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் வயிற்றில் கர முர என மாவு மில் சத்தம் கேட்கும். உடல் அந்த நேரத்தில் உணவு கிடைக்கும் என பழகிவிட்டது. அப்போது, உங்களுக்கு உணவு உண்ணும் தேவை இல்லாதபட்சத்தில் கூட பசி எடுக்கும்.  சிலர் தங்க கிளி கடலை மிட்டாய், கங்கோத்திர பால் பொருட்கள் சார்ந்த இனிப்புகள், ஏ1 சிப்ஸ் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்டபிறகும் கூட இடைவெளியில் இப்படி குப்பை உணவுகளை உண்பது உடலை பாதிக்கும். உடலுக்கு இதுபோன்ற உணவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஊட

விண்வெளியில் சத்தான உணவு!

படம்
  விண்வெளியில் சத்தான உணவு!  விண்வெளி வீரர்கள், விண்கலத்தில் பயணிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவுகளை சரியான முறையில் தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவு. இதன் காரணமாக அங்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களின்  உடல் எடை குறைவதோடு, எலும்புகளின் அடர்த்தியும் பாதிக்கப்படுகிறது. இதற்காக வீரர்களுக்கென  சத்துக்கள் நிறைந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு அதிக நாட்கள் தாங்கும்படி அனுப்பி வைக்கப்படுகின்றன.  பூமியில் ஒருவர் சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. இவர்களுக்கென அமெரிக்காவின் நாசா அமைப்பு, சிறப்பு வகை உணவுகளை தயாரித்து வருகிறது. விண்வெளி வீர ர்கள் தினசரி 2,700 லிருந்து 3,700 வரையிலான கலோரிகளை உணவிலிருந்து பெறுவது அவசியம். அப்படி பெறமுடியாதபோது, அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இப்படி விண்கலனில் தயாரித்து அனுப்பப்படும் உணவு மாதங்கள், ஆண்டுகள் என கெடாமல் இருக்கும்.  பூமியில் நீங்கள் சாப்பிடுவது சிறப்பான உணவு என்றால் அது விண்வெளியிலும் சிறப்பான உணவாகவே இருக்கும் என்றார் நாசாவின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப்

அடுக்குமாடியில் விவசாயம்! - புதிய விவசாய முறையில் உற்பத்தி கொட்டுகிறது

படம்
  cc   அடுக்கு மாடியில் விவசாயம் ! இன்று விவசாயம் செய்வதற்கான குறைந்தபட்ச ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது . ஆனால் அதற்காக தேவைப்படும் நிலம் என்பதை பலரும் தடையாக நினைத்து முடங்கிவிடுகின்றனர் . சிங்கப்பூரில் பள்ளிகள் , வணிக வளாகங்கள் , வாகன நிறுத்தங்கள் , பன்னடுக்கு வளாகங்கள் , குடியிருப்புகள் என எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் விவசாயம் செய்துவருகின்றனர் . ” இன்றைய சிங்கப்பூரில் விவசாய தலைமுறை என்பதே இல்லாமல் போய்விட்டது” என்கிறார் ஐ . நாவின் புதுமைத்திறன் மற்றும் சூழலுக்குகந்த விவசாய அமைப்பின் தலைவரான பிராட்லி பசெட்டோ . இன்று சிங்கப்பூரில் 1 சதவீத நிலப்பரப்பில் , அதாவது , 720 சதுர கி . மீ . பரப்பில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது . இந்நாடு , தற்போது 90 சதவீத உணவுப்பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது . 2030 க்குள் 30 சதவீத உள்நாட்டு உணவு உற்பத்தி என்பதே சிங்கப்பூர் அரசின் லட்சியம் . 2014 ஆம் ஆண்டில் இங்கு 31 வணிகரீதியான விவசாயப் பண்ணைகள் தொடங்கப்பட்டுவிட்டன . நாட்டில் விவசாயத்தை வளர்க்க 20.7 கோடி ரூபாயை அரசு மானியமாக அளித்துள்ளது . தொழில்நுட்பங்கள் எப்போது கூடுதல்