இடுகைகள்

கே.சந்துரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெய்பீம் - காலத்தின் சாட்சி - த செ ஞானவேல்

படம்
  ஜெய்பீம் - காலத்தின் சாட்சி த செ ஞானவேல் அருஞ்சொல் - தரு மீடியா ரூ.120 ஜெய்பீம் என்ற படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னணி, இயக்குநர் ஞானவேல் அவர்களின் கருத்து, அதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், நடிகர்கள் பற்றிய கருத்துகள் கொண்ட நூல். திரைப்படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை இறுதிப்பகுதியில் ஸ்க்ரீன்ஷாட்கள் போல எடுத்து சேர்த்திருக்கிறார்கள். ஜெய்பீம் படத்தின் திரைக்கதை அருஞ்சொல் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இந்த நூலோடு அதையும் கூட வாங்கிப் படிக்கலாம். அப்போது உங்களுக்கு முழுமையான உணர்வு கிடைக்கலாம்.  நூலில் இரண்டு நபர்களின் பேட்டி முக்கியமானது. ஒன்று, இயக்குநர் ஞானவேல் அவர்களுடையது. அடுத்து முன்னாள் நீதிபதி கே சந்துரு அவர்களுடையது. இந்த இருவரும்தான் ஜெய்பீம் படத்திற்கான மூலாதாரம். நீதிபதி சந்துரு, பழங்குடி பெண்ணுக்காக இலவசமாக பத்தாண்டுகளுக்கும் மேலாக வாதாடியிருக்கிறார். சந்துருவுக்கு படம் பற்றியெல்லாம் பெரிய கவலையில்லை. ஏனெனில் அவருடைய நோக்கம். தான் எடுத்துக்கொண்ட வழக்கில் பெற்றுக்கொடுத்த நீதிதான். அதில் எதிர்கொண்ட சவால்களைப் பற்றியெல்லாம...