இடுகைகள்

துணுக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கையெழுத்து - விநோதரச மஞ்சரி

படம்
  துணுக்குகள்   தன் கையெழுத்துக்கு கீழே ஒருவர் உருவாக்கும் குறியீடு அல்லது அடையாளத்திற்கு பாரப் (Paraph) என்று பெயர். அமெரிக்க   வரலாற்றிலேயே அரசியல் மற்றும் இலக்கியத்துறை சார்ந்த பிரபலங்களின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி புகழ்பெற்றவர், ஜோசப் கோசெய் (Joseph Cosey). இவர், முன்னாள் அமெரிக்க அதிபர்   ஆபிரகாம் லிங்கன், கவிஞர் மார்க் ட்வைன் தொடங்கி அமெரிக்க நாட்டின் விடுதலை பிரகடனத்தை எழுதி வெளியிட்ட தாமஸ் ஜெஃபர்சன் வரை போலி கையெழுத்துகளை உருவாக்கினார். பின்னாளில், ஜோசப்பின் போலி கையெழுத்துகள், சேகரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்ட வினோதமும் நடந்தது. அமெரிக்காவின் சிகோகோவைச் சேர்ந்த நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர்   நெல்சன் ஆல்கிரென் (Nelson Algren), தனது புத்தக வாசகர்களுக்கு கையெழுத்து போடும்போது கூடவே பூனையின் படத்தையும் வரைவது வழக்கம். 1948ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் கையெழுத்துகளை சேகரிப்பதற்கான முதல் அமைப்பாக‘தேசிய கையெழுத்து சேகரிப்பாளர் சங்கம்’ (National Society of Autograph Collectors) தொடங்கப்பட்டது. இதில், உறுப்பினராக விரும்புபவர் தீவிரமான வரலாற்று ஆய

வினோதரச மஞ்சரி - ஜாலி தகவல்கள்

படம்
  ஒரு நொடிக்கு நமது மூளை ஆராயும் தகவல்களின் எண்ணிக்கை , 1 கோடியே 10 லட்சம் திட, திரவ நிலையில் ஆக்சிஜனின் நிறம், வெளுத்த நீலநிறம் உலகில் முதன்முதலில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டஆண்டு 1828. ஆம்னிபஸ்(Omnibus) என்ற பெயரில் பிரான்சின் நான்டெஸ் நகரில் போக்குவரத்து சேவை தொடங்கியது. மனிதர்களின் எச்சிலில் உள்ள வலிமையான வலிநிவாரணி வேதிப்பொருள், ஒபியர்பின் (Opiorphin)  ஒருவர் ஒருமுறை இருமும்போது,  அவரின் எச்சிலில் இருந்து வெளியே பரவும்  வைரஸ்களின் எண்ணிக்கை, 20 கோடி   டால்பின், தன்னை கண்ணாடியில் பார்த்தால் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் https://transportgeography.org/contents/chapter8/urban-mobility/omnibus-london-19th-century/

புவியியல் - துணுக்குகள்!

படம்
  ப்ரூசைட் 1824ஆம் ஆண்டு, அமெரிக்க கனிமவியலாளர் ஆர்ச்சிபால்ட் ப்ரூஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்ட கனிமம். புரூசைட் என்பது, மெக்னீசியம் ஹைட்ராக்சைடு கலவை. வெள்ளை, பச்சை, பழுப்பு, நீலம் ஆகிய நிறங்களின் கலவையாக இருக்கும்.  காணவேண்டிய குகைகள் ஆர்டா குகை, ரஷ்யா கடல் நீருக்கடியில் உள்ள குகை. உலகில் கடல் நீருக்கடியில் அமைந்த நீளமான குகைகளில் இதுவும் ஒன்று. உலகளவில் ஆழ்கடல் நீச்சல்வீரர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இதுவே.  ஹாங் சன் டூங், வியட்நாம் குகையில் மழைக்காடுகளில் உள்ள மரங்கள் வளர்ந்துள்ளன. உலகில் உருவான இயற்கையான பெரிய குகைகளில் இந்த குகை, முக்கியமானது. மரங்கள் 30 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக உயரத்தில் வளர்ந்துள்ளன.  டாப்சின்ஸ்கா ஐஸ் கேவ், ஸ்லோவேகியா இந்த குகையில் உள்ள சுவர்கள் எல்லாமே ஐஸால் ஆனவை. 26 மீட்டர் உயரத்திற்கு ஐஸ் உருவாகியுள்ளது. வெளியிலுள்ள காற்று குகையின் வெப்பநிலை மைனஸ் 3.8 டிகிரி செல்சியசாக பாதுகாக்கிறது.  ஜெயன்ட் காஸ்வே (Gaint causeway) அயர்லாந்தின் வடக்குப்பகுதியில் ஜெயன்ட் காஸ்வே அமைந்துள்ளது. இங்கு கற்களால் அமைந்த தூண்கள் போன்ற வடிவில் பாறைகள் காணப்படுகின்றன. இங்குள